என் மலர்
நீங்கள் தேடியது "TSK"
- சாம்ஸ் 18 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார்.
- 19.1 ஓவரில் 172 ரன்கள் எடுத்து டிஎஸ்கே அணி வெற்றி பெற்றது.
அமெரிக்காவில் முதல் முறையாக மேஜர் லீக் கிரிக்கெட் டி20 லீக் தொடர் நடைபெற்று வருகிறது. ஆறு அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய மூன்று அணிகள் ஐபிஎல் அணிகளின் கிளை அணிகளாக உள்ளன.
இந்நிலையில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் - சான் பிரான்சிஸ்கோ யுனிகார்ன் அணிகள் இன்று மோதின. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த சான் பிரான்சிஸ்கோ 8 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று விளையாடிய டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் 14 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 104 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து அதிரடியாக பேட் செய்த டேனியல் சாம்ஸ், அணியை வெற்றிக்கு பாதைக்கு அளித்து சென்றார்.
சாம்ஸ் 18 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார். அதில் 4 சிக்சர்கள், 2 பவுண்டரிகள் அடங்கும். இதனால் 19.1 ஓவரில் 172 ரன்கள் எடுத்து டிஎஸ்கே அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் மூன்றாவது அணியாக டிஎஸ்கே ப்ளேஆப் சுற்றுக்கு நுழைந்துள்ளது.
இன்று நடைபெறும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் - சீட்டில் ஆர்காஸ் அணிகள் மோதுகின்றன.

