என் மலர்
நீங்கள் தேடியது "tsunami warning"
- கடலுக்கடியில் 9.3 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சுனாமி எச்சரிக்கையைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அலாஸ்கா தீபகற்ப பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.4 அலகாக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி உருவாக வாய்ப்பு உள்ளது என்று அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலநடுக்கமானது, கடலுக்கடியில் 9.3 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுனாமி எச்சரிக்கையைத் தொடர்ந்து அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
- ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
- நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை.
ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக அந்நாட்டிற்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. ஜப்பானில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 6.9 ஆக பதிவாகி இருக்கிறது.
நிலநடுக்கம் காரணமாக ஜப்பானியை தீவுகளான குய்ஷூ மற்றும் ஷிகோகு ஆகிய பகுதிகளை ஒட்டிய கடலோர பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. நிலநடுக்கம் மியாசகியில் இருந்து 20 மைல் தூரத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க நிலநடுக்கவியல் துறை தெரிவித்துள்ளது.
- சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் மக்கள் பீதியடைந்தனர்.
- மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற அறிவுறுத்தப்பட்டது.
ஏதென்ஸ்:
ஐரோப்பிய நாடான கிரீசில் சாண்டோரினி தீவு அமைந்துள்ளது. இங்கு கடலுக்கு அடியில் கடந்த 3 நாட்களில் 200-க்கும் மேற்பட்ட முறை நிலநடுக்கங்கள் பதிவாகின.
இதனை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டதால் மக்கள் பீதியடைந்தனர். எனவே அங்கு வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற அறிவுறுத்தப்பட்டது.
இதற்கிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சாண்டோரினி தீவில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
இதனையடுத்து நிலநடுக்கத்தால் ஏற்படும் ஆபத்தை குறைக்க அரசின் வழிகாட்டுதல்களை தீவிரமாக கடைபிடிக்கும்படி மக்கள் அறிவுறுத்தப்பட்டனர்.
- நிலநடுக்கம் 10 கிலோமீட்டர்கள் ஆழத்தில் ஏற்பட்டது.
- சுனாமி அலைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
கரீபியன் தீவு கடலில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 7.6 ஆக பதிவாகி உள்ளது. ஹோண்டுராஸ் வடக்கில் உள்ள கேமன் தீவுகளின் கடற்கரையில் இருந்து சுமார் 209 கிலோமீட்டர்கள் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் 10 கிலோமீட்டர்கள் ஆழத்தில் ஏற்பட்டது.
நிலநடுக்கம் தொடர்பான விவரங்களை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அந்த பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. நிலநடுக்கம் காரணமாக அமெரிக்க அட்லாண்டிக் அல்லது வளைகுடா கடற்கரைகளுக்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் இல்லை.
எனினும், போர்ட்டோ ரிக்கோ மற்றும் விர்ஜின் தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பான அறிவிக்கையில், கேமன் தீவுகள், ஜமைக்கா, கியூபா, மெக்சிகோ, ஹோண்டுராஸ், பகாமாஸ், பெலிஸ், ஹைட்டி, கோஸ்டா ரிகா, பனாமா, நிகரகுவா மற்றும் குவாத்தமாலா ஆகிய நாடுகளின் கடற்கரைகளில் மையப்பகுதியில் இருந்து 620 மைல்களுக்குள் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட "அபாயகரமான சுனாமி அலைகள்" ஏற்பட வாய்ப்புள்ளதாக பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
