என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "TTV Dinakaran"
- தி.மு.க. அரசின் அதிகாரப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
- தச்சுத் தொழிலாளியின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
சென்னை:
அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள சமூகவலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது:-
திருவேற்காடு நகராட்சிப் பகுதியில் பன்னெடுங்காலமாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு எந்தவித மாற்று ஏற்பாடுகளையும் செய்து தராமலும், முன்னறிவிப்பு இல்லாமலும் குடியிருப்புகளை அகற்றி பொதுமக்களை வெளியேற்றத் துடிக்கும் தி.மு.க. அரசின் அதிகாரப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
எனவே, ஆக்கிரமிப்பு எனும் பெயரில் குடியிருப்புகளை அகற்றி பொதுமக்களை அகதிகளாக்கும் முடிவை உடனடியாக கைவிடுவதோடு, அரசு நிர்வாகத்தின் நடவடிக்கையால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் தச்சுத் தொழிலாளியின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் பிறந்தநாள் இன்று.
- பத்திரிகை உலகில் புதிய புரட்சிக்கு அடித்தளமிட்டவர்.
சென்னை:
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
பத்திரிகை உலகில் புதிய புரட்சிக்கு அடித்தளமிட்டவரும், தினத்தந்தி நாளிதழை தொடங்கியவருமான தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் பிறந்தநாள் இன்று.
உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு என முழங்கியதோடு, அவற்றையே வாழ்க்கையின் நோக்கமாக கொண்டு தமிழுக்கும், தமிழக மக்களின் உயர்வுக்காகவும் தன் வாழ்நாளை அர்ப்பணித்த சி.பா.ஆதித்தனாரின் அரும்பணிகளை அவர் பிறந்த இந்நாளில் போற்றி கொண்டாடுவோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- திமுக அரசின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
- அடிக்கடி நடைபெறும் இதுபோன்ற அவலச் சம்பவங்கள் வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.
அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,
கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பாதாளச் சாக்கடைகளில் ஏற்பட்ட அடைப்புகளை, எந்தவித பாதுகாப்பு உபகரணங்களுமின்றி தொழிலாளர்கள் சுத்தம் செய்வது போல வெளியாகியிருக்கும் வீடியோ காட்சிகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
நாட்டு மக்கள் அனைவரும் நவீன விஞ்ஞான உலகத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்திலும் மனிதக் கழிவுகளையும், பாதாள சாக்கடைகளையும் மனிதர்களே இறங்கி சுத்தம் செய்யும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் மட்டும் தொடர்ந்து கொண்டே இருப்பது வேதனையளிக்கிறது.
இந்திய அளவில் மனிதக் கழிவுகளை சுத்தம் செய்யும் தொழிலாளர்களின் மரணத்தில் தமிழகம் முதலிடம் வகித்து வரும் அவல நிலையிலும், அதனை தடுக்கவோ, மாற்றுவழிகளை கண்டறியவோ எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாத திமுக அரசின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
மாநில அரசின் மூலம் கொண்டுவரப்பட்ட மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் தடைச் சட்டம் முறையாக பின்பற்றப்படவில்லை என்பதையும், அதனை அமல்படுத்த அமைக்கப்பட்ட கண்காணிப்புக் குழுவும் வெறும் காகித அளவில் மட்டுமே இருப்பதையும் அடிக்கடி நடைபெறும் இதுபோன்ற அவலச் சம்பவங்கள் வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.
எனவே, இனியாவது மனிதக் கழிவுகளை மனிதர்களே சுத்தம் செய்வதற்கு விதிக்கப்பட்ட தடைச்சட்டத்தை தீவிரப்படுத்துவதோடு, அப்பாவி தொழிலாளர்களை இதுபோன்ற செயல்களில் ஈடுபடுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.
- ஏழை, எளிய மக்களின் வளர்ச்சியை குறிக்கோளாய் கொண்டு அறிவிக்கப்பட்டிருக்கும் திட்டங்கள் வரவேற்புக்குரியது.
- தொழிலாளர்கள் மற்றும் தொழில்நிறுவனங்களின் முன்னேற்றத்தின் மீதான மத்திய அரசின் கூடுதல் கவனத்தை வெளிப்படுத்துகிறது.
அமமுக கட்சி பொது செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
உற்பத்தி, வேலைவாய்ப்பு, சமூகநீதி, நகர்ப்புற மேம்பாடு, எரிசக்தி பாதுகாப்பு, உட்கட்டமைப்பு, சீர்திருத்தங்கள் உள்ளிட்ட ஒன்பது அம்சங்களை இலக்காக நிர்ணயித்திருப்பதோடு, இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் மற்றும் ஏழைகளின் நலனுக்கு முன்னுரிமை அளித்து தாக்கல் செய்யப்பட்டிருக்கும் மத்திய அரசின் பட்ஜெட் வரவேற்புக்குரியது.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஒரு கோடி விவசாயிகளை இயற்கை விவசாயத்தில் ஈடுபடுத்தும் திட்டம், விவசாயத்துறையில் டிஜிட்டல் புரட்சி செய்வதற்கான கட்டமைப்புகள், தோட்டக்கலைகளில் 109 வகையிலான அதிக மகசூல் தரும் பயிர்கள் அறிமுகம், தானியம் மற்றும் எண்ணெய் வித்துக்களின் உற்பத்தி மற்றும் சேமிப்புக்கு முக்கியத்துவம் என வேளாண்மையை மேம்படுத்தும் வகையில் பட்ஜெட்டில் இடம்பெற்றிருக்கும் புதிய முன்னெடுப்புகள் ஒட்டுமொத்த விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தையும், வருமானத்தையும் உயர்த்தும் பட்ஜெட்டாக அமைந்துள்ளது.
உள்நாட்டில் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு பத்து லட்சம் வரை கல்விக்கடன், நாடு முழுவதும் நான்கு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புத் திறன் பயிற்சி, இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒரு கோடி இளைஞர்களுக்கு ஊக்கத்தொகையுடன் கூடிய பயிற்சி, அடுத்த ஐந்தாண்டுகளில் ஆயிரம் ஐடிஐகள் (ITI), உற்பத்தி துறையில் முதன்முறை பணியில் சேருவோருக்கு சிறப்பு நிதி, வேலைவாய்ப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதோடு, வேலைவாய்ப்பை அதிகளவு உருவாக்கும் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்திருப்பது இளைஞர்களின் எதிர்காலத்தை வளமாக்கும் வகையில் அமைந்திருக்கிறது.
நியாய விலைக்கடைகள் மூலமாக ஏழை மக்களுக்கு தானியம் வழங்கும் பிரதம மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் (PM-GKAY) அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிப்பு, பிரதமர் வீட்டுவசதி திட்டத்தின் (PMAY) கீழ் நாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்பங்களுக்கு வீடுகள், வீடுகளின் மேற்கூரைகளில் சூரிய ஒளித் தகடுகளின் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டம் விரிவாக்கம் உள்ளிட்ட ஏழை, எளிய மக்களின் வளர்ச்சியை குறிக்கோளாய் கொண்டு அறிவிக்கப்பட்டிருக்கும் திட்டங்கள் வரவேற்புக்குரியது.
ரூ.3 லட்சம் கோடியில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் வளர்ச்சிக்காக புதிய திட்டங்கள், பணிபுரியும் பெண்களுக்காக சிறப்பு தங்கும் விடுதிகள் என பெண்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையிலும், முத்ரா திட்டத்தின் கடன் வரம்பு ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தி அறிவிப்பு, சிறு,குறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு, புதிய தொழில் பூங்காங்கள் போன்ற புதிய அறிவிப்புகள் தொழிலாளர்கள் மற்றும் தொழில்நிறுவனங்களின் முன்னேற்றத்தின் மீதான மத்திய அரசின் கூடுதல் கவனத்தை வெளிப்படுத்துகிறது.
அதே நேரத்தில் தமிழகத்திற்கு சிறப்புத் திட்டங்கள் எதுவும் அறிவிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது என்று கூறியுள்ளார்.
- தொழிலாளார்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் வகையில் அமைந்துள்ளது.
- மினி பேருந்துகளை இயக்கும் அனுமதியை தனியாரிடம் வழங்குவது மேலும் மோசமான விளைவையே ஏற்படுத்தும்
அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது,
சென்னை புறநகர் பகுதிகளான திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்தூர், வளசரவாக்கம், ஆலந்தூர், பெருங்குடி, அம்பத்தூர் உட்பட தமிழகம் முழுவதும் தனியார் மினி பேருந்துகளை இயக்குவது தொடர்பான தமிழக அரசின் புதிய வரைவுத்திட்ட அறிக்கையும், அது தொடர்பான இன்று நடைபெற்ற கருத்துக் கேட்பு கூட்டமும் அரசுப் போக்குவரத்துத்துறையை தனியார்மயமாக்கும் வகையிலேயே அமைந்துள்ளன.
தமிழகத்தில் லாப நோக்கத்தை மட்டுமே குறிக்கோளாய் கொண்டு விதிமுறைகளை மீறி இயங்கி வரும் தனியார் பேருந்துகளை கட்டுப்படுத்த முடியாத நிலையில், தற்போது சென்னை உட்பட தமிழகம் முழுவதும் கூடுதல் மினி பேருந்துகளை இயக்கும் அனுமதியை தனியாரிடம் வழங்குவது மேலும் மோசமான விளைவையே ஏற்படுத்தும் என போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன.
ஏற்கனவே அரசுப் பேருந்துகளின் வழித்தடங்கள் இருக்கும் இடங்கள் உட்பட 25 கிலோ மீட்டர் தூரம் வரை தனியார் மினி பேருந்துகளை இயக்க அனுமதிப்பது, சென்னை போன்ற பெருநகரங்களில் ஆட்டோ (Auto), ஷேர் ஆட்டோ (Share Auto), மேக்சி கேப் (Maxi Cab ) போன்ற வாகனங்களை இயக்கி வரும் தொழிலாளார்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் வகையில் அமைந்துள்ளது.
எனவே, தனியார் மினி பேருந்துகளுக்கு அனுமதி வழங்கி போக்குவரத்துத்துறையை படிப்படியாக தனியார் மயமாக்கும் நடவடிக்கையை உடனடியாக கைவிடுவதோடு, புதிய பேருந்துகளை கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு தேவையான போக்குவரத்து வசதியை அரசுப் போக்குவரத்துக் கழகம் மூலமாகவே ஏற்படுத்தி தருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.
- குக்குர் மாதிரிதானே அவருடைய முகமும் குண்டா இருக்கு.
- அவரை பார்க்கும்போதெல்லாம் உங்களுக்கு குக்கர் நியாபகம் வரணும்.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் நடந்த பரப்புரையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக அவரது மனைவி அனுராதா வாக்கு சேகரித்தார்.
அப்போது கூட்டத்தில் பேசிய அவர், " குக்குர் மாதிரிதானே அவருடைய முகமும் குண்டா இருக்கு. அதனால.. அவரை பார்க்கும்போதெல்லாம் உங்களுக்கு குக்கர் நியாபகம் வரணும்.
குக்கர் சின்னம் எல்லாம் இடத்திற்கும் தெரிய வேண்டும். டிடிவி தினகரனின் சின்னம் குக்கர் சின்னம். குக்கர் சின்னத்தில் குழப்பம் இல்லாமல் ஓட்டு போடுவதற்கு வயதானவர்களுக்கு எடுத்து கூறவேண்டும்.
அவர் இதை செய்வார் அதை செய்வார் என்று உங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. ஏனென்றால், என்னைவிட உங்களுக்கு நல்லாவே தெரியும். அவர் மீது உங்களுக்கு நம்பிக்கை உள்ளது.
அவர் உங்கள் வீட்டு பிள்ளை. உங்கள் வீட்டில் ஒருவராய் இருந்திருக்கிறார்.
குக்கர் சின்னம் ஆர்.கே.நகரில் போட்டியிட்டபோது வெற்றிபெற்ற சின்னம். அதேமாதிரி தேனி தொகுதியிலும் அதிக வாக்கு வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற வைக்க வேண்டும்.
குக்கர் சின்னத்திற்கு அளிக்கும் ஓட்டு, தேனி தொகுதி வளர்ச்சிக்கான ஓட்டு.
குக்கர் என்றால் டிடிவி.. டிடிவி என்றால் குக்கர்..
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- அண்ணாமலைக்கு ஆதரவாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிரச்சாரம் மேற்கொண்டார்
- குக்கரும் தாமரையும் ஒரே கூட்டணியில் உள்ள சின்னங்கள் தான் அதனால் எந்த பிரச்சனையும் இல்லை - டிடிவி தினகரன்
கோவை மாவட்டம் சூலூரில் பாஜக கோவை வேட்பாளர் அண்ணாமலைக்கு ஆதரவாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று இரவு பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு குக்கர் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் வாக்கு சேகரிக்க, கூட்டத்தில் இருந்த பொதுமக்கள் தாமரை சின்னம் என கூச்சலிட்டனர்.
அதற்கு பதில் அளித்த டிடிவி தினகரன், நேற்று நான் போட்டியிடும் தேனி தொகுதியில் குக்கர் சின்னத்தில் வாக்கு சேகரித்தேன். அதே நியாபகத்தில் குக்கர் சின்னம் என கூறிவிட்டேன் என்று விளக்கம் அளித்தார்.
குக்கரும் தாமரையும் ஒரே கூட்டணியில் உள்ள சின்னங்கள் தான் அதனால் எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறிய அவர் பின்பு அண்ணாமலைக்கு தாமரை சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.
மோடி அவர்களின் நம்பிக்கைக்கு உரிய அண்ணாமலையை வெற்றி செய்வதன் மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பதைப் போல தீய சக்தியையும் துரோக சக்தியையும் "தாமரையை வீழ்த்த" நீங்கள் துணை புரிய வேண்டும் அவர் பேசினார்.
அதன் பின்னர் சுதாரித்து கொண்ட டிடிவி தினகரன், தாமரை வெற்றி பெற்றது என்ற செய்தி தமிழகம் முழுவதும் பறை சாற்ற வேண்டும் என பேசி சமாளித்தார்.
- திருச்சி மற்றும் தேனி ஆகிய தொகுதிகளில் அமமுக போட்டியிட உள்ளது.
- தேனியில் முதற்கட்ட தேர்தல் பிரச்சாரத்தை டிடிவி தினகரன் தொடங்குகிறார்.
மக்களவைத் தேர்தலில் போட்டியிட உள்ள அமமுக வேட்பாளர்களை அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நாளை அறிவிக்க உள்ளார்.
பாஜக கூட்டணியில் திருச்சி மற்றும் தேனி ஆகிய தொகுதிகளில் அமமுக போட்டியிட உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இதுதொடர்பாக அமமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
அமமுக கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தேனி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட G.கல்லுப்பட்டி, அருள்மிகு பட்டாளம்மன் திருக்கோயில் அருகே நாளை 24.03.2024, ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணியளவில், நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் தேனி மற்றும் திருச்சிராப்பள்ளி நாடாளுமன்றத் தொகுதிகளின் வெற்றி வேட்பாளர்களை அறிவிக்க உள்ளார்.
அதன் தொடர்ச்சியாக தேனி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தனது முதற்கட்ட தேர்தல் பிரச்சாரத்தை டிடிவி தினகரன் தொடங்கவிருக்கிறார். அதற்கான விவரப்பட்டியல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்தே தேர்தலை சந்திப்போம் என டி.டி.வி.தினகரன் கூறினார்.
- இனி வரும் காலங்களில் அனைத்து நிகழ்வுகளிலும் சேர்ந்துதான் பயணிப்போம் என்றார்.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் சாமிதரிசனம் செய்தார். அவருக்கு ஆண்டாள் கோவில் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டு ஆண்டாள் கிளி, மாலை, பிரசாதம் வழங்கப்பட்டது. அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நடைபயணம் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது பற்றி நீங்கள்தான் தெரிவிக்க வேண்டும். அவர் ஒரு கட்சியின் தலைவர். அதனால் இந்தப் பயணத்தை மேற்கொள்கிறார்.
தி.மு.க.வின் 2-வது ஊழல் பட்டியல் வெளியிட்டது குறித்து இன்னும் முழுமையான விவரம் கிடைக்கவில்லை.
வரும் பாராளுமன்ற தேர்தலை ஓ.பன்னீர்செல்வத்துடன் சேர்ந்துதான் சந்திப்போம். இனி வரும் காலங்களில் அனைத்து நிகழ்வுகளிலும் சேர்ந்துதான் பயணிப்போம்.
என்னை பா.ஜ.க. மாநில தலைவர் நடைபயணத்திற்கு அழைக்காதது குறித்து அவரிடம்தான் கேட்க வேண்டும்.
பாராளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க.வின் நிலைப்பாடு குறித்து டிசம்பர் மாதத்தில் தெரிவிக்கப்படும் என தெரிவித்தார்.
- ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக, திமுக ஆகிய 2 கட்சிகளுக்கும் ஆதரவு இல்லை.
- குக்கர் சின்ன விவகாரத்தில் போதிய நாட்கள் இல்லாததால் நீதிமன்றம் செல்லவில்லை.
சென்னையில் அமமுக பொதுச்செயலாள் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
2024 நாடாளுமன்ற தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட எந்த தடையும் இல்லை. இடைத்தேர்தலில் குக்கர் சின்னம் ஏன் வழங்கவில்லை என்பது புரியவில்லை .
இடைத்தேர்தலில் குக்கர் சின்னம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பிரசாரம் செய்து வந்தோம். குக்கர் சின்ன விவகாரத்தில் போதிய நாட்கள் இல்லாததால் நீதிமன்றம் செல்லவில்லை.
இரட்டை இலை சின்னம் கிடைத்ததால் மட்டுமே வெற்றி பெற்றுவிட முடியாது. ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக, திமுக ஆகிய 2 கட்சிகளுக்கும் ஆதரவு இல்லை. யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது தொண்டர்களுக்கு தெரியும். ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஓரணியில் இணைய வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு.
இவ்வாறு அவர் கூறினார்.
- மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகு ஓரிரு நாட்களில் வீடு திரும்பலாம்.
- கழக உடன்பிறப்புகள் யாரும் கவலைப்பட வேண்டாம் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உடல் நலக்குறைவால் தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உணவு ஒவ்வாமை காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் டிடிவி தினகரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து டிடிவி தினகரன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
சிறிய உடல்நலக் குறைவு (உணவு ஒவ்வாமை) காரணமாக தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகு ஓரிரு நாட்களில் வீடு திரும்பலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.
எனவே, கழக உடன்பிறப்புகள் யாரும் கவலைப்பட வேண்டாம். நேரில் பார்க்க வருவதையும் தவிர்க்க வேண்டுமென அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஸ்ரீவாரி மண்டபத்தில் அமமுக பொதுக்குழு கூட்டத்திற்கு ஏற்பாடு.
- அமமுக துணைத் தலைவர் எஸ்.அன்பழகன் தலைமையில் பொதுக்குழு கூட்டம்.
சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரி மண்டபத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் (அமமுக) சார்பில் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் வரும் 15-ம் தேதி நடைபெற இருப்பதாக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
இந்த பொதுக்குழு கூட்டம், துணைத் தலைவர் எஸ்.அன்பழகன் தலைமையில் நடைபெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்