search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TTVD Dhinakaran"

    இடைத்தேர்தலை சந்திப்பதா? அல்லது மேல் முறையீடு செய்வதா? என்று தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் குழப்பத்தில் உள்ளதாக அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார். #ADMK #TNMinister #Udhayakumar #18MLAs #TTVDhinakaran
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் உதயகுமார் கலந்துகொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் அதிக மழையினால் 4,399 இடங்கள் பாதிக்கப்படும் எனக் கண்டறியப்பட்டு, இப்பகுதிகளில் மீட்பு பணியாளர்கள் மற்றும் முதல்நிலை பொறுப்பாளர்கள் உடனடியாக மீட்பு பணிகளை மேற்கொள்ள தேவையான அறிவுரைகள் மற்றும் பயிற்சிகள் வழங்கப்பட்டு தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    தமிழகம் முழுவதும் 32 மாவட்டங்களில் 9500 மீட்பு பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர். பருவ மழை காலங்களில் ஏற்படும் காய்ச்சல் மற்றும் தொற்று நோய் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள், செல்லக்கூடாத வழியில் சென்று தகுதி இழந்து நிற்கிறார்கள். அவர்களிடம் தேர்தலை சந்திப்பது மற்றும் மேல் முறையீடு செய்வது என்பதில் குழப்பம் உள்ளது. அவர்கள் முதலில் மேல்முறையீடு என்று அறிவித்தார்கள். பின்னர் தேர்தலை சந்திக்கிறோம் என்று அறிவித்து உள்ளனர். நாளை என்ன அறிவிப்பார்கள் என்று தெரியாது.


    தமிழக முதலமைச்சர், துணை முதலமைச்சர், துணை ஒருங்கிணைப்பாளர்கள் அனைவரும் அனைத்து தொகுதி பொறுப்பாளர்களையும் அழைத்து, தேர்தல் பணியாற்ற வியூகம் வகுத்து கொடுத்துள்ளார்கள். அதனை செயல்படுத்தும் பணியில் நாங்கள் ஈடுபட்டு உள்ளோம்.

    இடைத்தேர்தல் நடைபெற உள்ள 20 தொகுதிகளில் எப்போது தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க. வெற்றி பெறும். பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் வர வாய்ப்பு உள்ளதாக தி.மு.க. சார்பில் சொல்லப்பட்டு வருகிறது.

    அது அவர்களின் தொண்டர்களை திருப்தி படுத்த வேண்டும் என்பதற்காக காலம் காலமாக இதுபோன்று சொல்லி வருகிறார்கள். இந்த அரசு 5 ஆண்டுகளையும் வெற்றிகரமாக நிறைவேற்றி, அடுத்து வரும் தேர்தலிலும் ஜெயலலிதா அறிவித்த திட்டங்களை முன்நிறுத்தி வெற்றி பெறுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #TNMinister #Udhayakumar #18MLAs #TTVDhinakaran
    ×