என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tunnel collapsed"

    • தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டு இன்று காலை 11 மணிக்கு பிறகு துளையிடும் பணி மீண்டும் தொடங்கியது.
    • இன்று மாலைக்குள் தொழிலாளர்களை மீட்டுவிடலாம் என உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உத்தர்காஷி என்ற இடத்தில் சுரங்கம் தோண்டும் பணியில் 41 தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது திடீரென ஏற்பட்ட நிலச்சரிவால் சுரங்கத்தின் ஒரு பகுதி மூடியது. இதனால் 41 தொழிலாளர்களும் சுரங்கத்திற்குள் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

    சுரங்கத்தில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களுக்கு தப்பிக்கும் பாதையைத் தயார் செய்வதற்காக அமெரிக்க ஆகர் இயந்திரம் மூலம் துளையிடும் பணி தொடங்கப்பட்டது.

    துளையிடும் இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, உள்ளே சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் முயற்சியில் நேற்று பின்னடைவு ஏற்பட்டது. சுமார் 46.8 மீட்டர் வரை துளையிடப்பட்ட நிலையில், மீட்பு பணி நேற்று தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

    இந்நிலையில், துளையிடும் இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டு இன்று காலை 11 மணிக்கு பிறகு துளையிடும் பணி மீண்டும் தொடங்கியது.

    இன்னும் 12-14 மீட்டர்களே உள்ள நிலையில் எல்லாம் சரியாக நடந்தால் இன்று மாலைக்குள் தொழிலாளர்களை மீட்டுவிடலாம் என உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    இந்நிலையில், தொழில்நுட்பம் கோளாறு காரணமாக துளையிடும் பணி மீண்டும் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களில் இரண்டு முறை துளையிடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • உத்தரகாண்ட் சுரங்கத்தில் 13 நாட்களாக சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்க அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது.
    • மீட்பு பணிகள் குறித்து உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

    உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உத்தர்காஷி என்ற இடத்தில் சுரங்கம் தோண்டும் பணியில் 41 தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது திடீரென ஏற்பட்ட நிலச்சரிவால் சுரங்கத்தின் ஒரு பகுதி மூடியது. இதனால் 41 தொழிலாளர்களும் சுரங்கத்திற்குள் சிக்கிக் கொண்டனர். உத்தரகாண்ட் சுரங்கத்தில் 13 நாட்களாக சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்க அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது.

    சுரங்கத்தில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களுக்கு தப்பிக்கும் பாதையைத் தயார் செய்வதற்காக அமெரிக்க ஆகர் இயந்திரம் மூலம் துளையிடும் பணி தொடங்கப்பட்டது.

    துளையிடும் இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, உள்ளே சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் முயற்சியில் நேற்று பின்னடைவு ஏற்பட்டது.

    தொழில்நுட்பம் கோளாறு காரணமாக துளையிடும் பணி நேற்று மீண்டும் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டது.

    இந்நிலையில், மீட்பு பணிகள் குறித்து உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர், இதுகுறித்து முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, "உத்தரகாண்டில் மீட்பு பணியின்போது சிக்கி உள்ள இயந்திரத்தின் பாகங்களை விரைவாக அகற்ற வேண்டும்.

    ஆகர் இயந்திர பாகங்களை அகற்ற தேவையான இயந்திரங்கள், தொழில் நுட்பங்களை விரைந்து வாங்குமாறு" அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

    • பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
    • எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் சிக்கியுள்ள தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் உள்ளன.

    உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தர்காஷி மாவட்டத்தில் சுரங்கம் அமைக்கும் பணிகளின் போது ஏற்பட்ட விபத்து காரணமாக சுரங்கத்திற்குள் சிக்கித்தவிக்கும் 41 தொழிலாளர்களை மீட்கும் பணிகள் 18-வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    அரசு தரப்பில் பல்வேறு முயற்சிகள் செய்யப்பட்டு வருகிறது. தற்போது செங்குத்தாக துளையிடும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், "இந்த உத்தரகாண்ட் சுரங்கப்பாதை எந்த தனியார் நிறுவனத்தால் கட்டப்பட்டது? அதன் பங்குதாரர்கள் யார்? அதில் ஒன்று அதானி குழுமமா?" என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

    இந்நிலையில், உத்தரகாண்டில் 41 தொழிலாளர்கள் சிக்கியுள்ள சுரங்க கட்டுமான பணியில் ஈடுபடவில்லை என்றும் கட்டுமான பணி மேற்கொள்ளும் நிறுவனத்தில் பங்கு இல்லை எனவும் அதானி தரப்பில் கூறப்பட்டுள்ளது.

    இதுகுறித்த அதானி குழுமத்தின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    உத்தரகாண்டில் சுரங்கப்பாதையில் ஏற்பட்ட துரதிஷ்டவசமான சரிவு விவகாரத்துடன் எங்களை இணைக்க சில கூறுகள் மோசமான முயற்சிகளை மேற்கொள்வது எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. இந்த முயற்சிகளையும் அதன் பின்னணியில் இருப்பவர்களையும் வன்மையாகக் கண்டிக்கிறோம். அதானி குழுமத்திற்கோ அல்லது அதன் துணை நிறுவனங்களுக்கோ சுரங்கப்பாதையின் கட்டுமானத்தில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்தவிதமான தொடர்பும் இல்லை என்பதை நாங்கள் மிக அழுத்தமாக தெளிவுபடுத்துகிறோம். சுரங்கப்பாதையின் கட்டுமானத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனத்தில் எங்களிடம் எந்தப் பங்குகளும் இல்லை என்பதையும் தெளிவுபடுத்துகிறோம். இந்த நேரத்தில், எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் சிக்கியுள்ள தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் உள்ளன.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • எலி வளை சுரங்கத் தொழிலாளர்கள் முழு வீச்சில் துளையிடும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    • செங்குத்தாக துளையிடும் பணி தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.

    உத்தரகாண்ட் மாநிலத்தில் உத்தரகாசி மாவட்டத்தின் சில்க்யாரா மலை பகுதியில் 4.50 கிலோ மீட்டர் தூரத்துக்கு மலைக்கு கீழ் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடந்து வந்தது. கடந்த 12-ந்தேதி தீபாவளி தினத்தன்று காலை சுரங்கப்பாதையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. 57 மீட்டர் தூரத்துக்கு இடிந்ததால் சுரங்கப் பாதையின் மையப்பகுதிக்குள் 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர்.

    அவர்களை மீட்க 57 மீட்டர் இடிபாடுகளுக்குள் குழாய்களை செலுத்தி மீட்கும் பணி நடந்தது. முதல் தடவை நடந்த முயற்சியில் எந்திரம் பழுது அடைந்ததால் அதிநவீன ஆகர் எந்திரம் கொண்டு வரப்பட்டு துளையிட்டு குழாய் அமைக்கும் பணி நடந்தது.

    47 மீட்டர் தூரத்துக்கு துளையிட்டு குழாய் அமைக்கப்பட்ட நிலையில் ஆகர் எந்திரத்தின் துளையிடும் பிளேடுகள் வெடித்து சிதறி நொறுங்கி போனதால் மீட்பு பணிகளில் முடக்கம் ஏற்பட்டது. இதையடுத்து மலை உச்சியில் இருந்து துளை போட்டு 41 தொழிலாளர்களை மீட்க முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி மலை உச்சியில் சாலை அமைக்கப்பட்டு நவீன எந்திரம் கொண்டு செல்லப்பட்டது. 2 இடங்களில் இருந்து துளைபோட முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் காலை மலை உச்சியில் இருந்து செங்குத்தாக சுரங்கப்பாதை நோக்கி துளையிடும் பணிகள் நடந்து வருகின்றன.

    மலை உச்சியில் இருந்து 41 தொழிலாளர்களும் சிக்கி இருக்கும் சுரங்கப்பாதை சுமார் 87 மீட்டர் தூரம் கொண்டதாக உள்ளது. அங்கு இருந்து செங்குத்தாக துளை போடப்பட்டு வருகிறது.

    அப்படி துளையிடும் பகுதியில் 700 மி.மீட்டர் சுற்றளவு கொண்ட இரும்பு குழாய்களை உள்ளே செலுத்தும் பணிகளும் நடந்து வருகிறது. இன்று (செவ்வாய்க்கிழமை) காலை வரை 38 மீட்டர் தூரத்துக்கு மலை உச்சியில் இருந்து செங்குத்தாக துளை போடப்பட்டு உள்ளது.

    இன்னமும் 49 மீட்டர் தூரத்துக்கு மலை உச்சியில் இருந்து துளைபோட வேண்டியது உள்ளது. இன்னும் 4 நாட்கள் அதற்கு தேவைப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் பக்கவாட்டில் கிடைமட்டமாக துளைபோடும் பணியில் சிக்கி இருந்த ஆகர் எந்திரத்தை அகற்றும் பணிகள் நடந்து வந்தன. இன்று காலை அந்த எந்திரம் முழுமையாக அகற்றப்பட்டது. இதையடுத்து அந்த பாதையில் ஆட்கள் மூலம் துளையிடும் பணி தொடங்கி உள்ளது.

    கிடை மட்டத்தில் சுமார் 57 மீட்டர் தூரத்துக்கு சுரங்க பாதைக்குள் பாறைகள் இடிந்து விழுந்துள்ளன. அதில் ஆகர் எந்திரம் மூலம் 47 மீட்டருக்கு துளையிட்டு குழாய் பொருத்தப்பட்டு இருக்கிறது. அந்த குழாய் வழியாக 2 வீரர்கள் உள்ளே சென்று தொடர்ந்து அங்கு தோண்டும் பணியை மேற்கொண்டுள்ளனர்.

    ஒரு வீரர் துளையிடும் பணியை மேற்கொள்வார். மற்றொருவர் அந்த இடிபாடு கழிவுகளை வெளியில் அள்ளும் பணியில் ஈடுபடுவார். இந்த பணியில் எலி வளை சுரங்கத் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    இப்படி ஆட்கள் மூலம் துளைபோடும் பணி சுமார் 10 முதல் 12 மீட்டர் தூரத்துக்கு செய்ய வேண்டியிருந்த நிலையில் நேற்று அந்த பணி தொடங்கியது. இன்று 2-வது நாளாக ஆட்கள் மூலம் துளையிடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இன்று மேலும் 4 பேர் இணைக்கப்பட்டு 6 பேர் குழுவினர் 60 சென்டிமீட்டர் விட்டமுள்ள குழாய் மூலம் சென்று துளையிடும் பணியில் ஈடுபட்டனர்.

    57 மீட்டர் தூரத்தில் இன்று மதியம் வரை 54 மீட்டர் தூரத்துக்கு தோண்டி விட்டனர். இன்னும் 3 மீட்டர் தூரமே தோண்ட வேண்டியது இருக்கிறது. மிக குறைந்த தூரமே இருப்பதால் கிடை மட்டத்தில் துளையிட்டு விரைவில் 41 தொழிலாளர்களையும் மீட்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    எனவே இன்று 17-வது நாள் நடக்கும் பணிகள் இறுதி கட்ட பணிகளாக கருதப்படுகிறது. 41 தொழிலாளர்களையும் மீட்பு குழுவினர் நெருங்கி உள்ளனர். இன்னும் சில மணி நேரத்துக்குள் கிடைமட்ட சுரங்கப்பாதை மூலம் 41 தொழிலாளர்களையும் சென்றடைய முடியும் என்று மீட்பு குழுவினர் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

    இதற்கிடையே மேலும் 4 இடங்களில் இருந்து 41 தொழிலாளர்கள் சிக்கி உள்ள சுரங்கப்பாதை நோக்கி துளை போடும் பணிகள் நடந்து வருகின்றன. மொத்தம் 6 விதமாக துளை போடப்பட்டு குழாய்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. எந்த பாதையில் முதலில் பணிகள் நிறைவு பெறுகிறதோ அதன் வழியாக 41 தொழிலாளர்களும் மீட்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


     இதற்கிடையே 41 தொழிலாளர்கள் சிக்கி சில்க்யாரா மலைப்பகுதியில் இன்று முதல் பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. இன்று பிறபகல் முதல் அங்கு மழை பெய்யவும் வாய்ப்பு இருப்பதாக வானிலை இலாகா எச்சரித்துள்ளது. இதனால் மீட்பு பணிகளில் தாமதம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இதை தவிர்க்க மாற்று ஏற்பாடுகளை மீட்பு குழுவினர் செய்து வருகிறார்கள்.

    இதற்கிடையே உத்தரகாண்ட் முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி மீட்பு பணி நடைபெறும் இடத்துக்கு சென்றார். அங்கு 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என்று அவர் பிரார்த்தனை செய்தார்.

    அவரை பிரதமர் மோடி தொடர்புகொண்டு பேசினார். அப்போது இறுதிகட்ட பணிகள் தொடர்பான விவரங்களை, முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமியிடம், பிரதமர் மோடி கேட்டறிந்தார்.

    தற்போது செங்குத்தாக துளையிடும் பனி நிறுத்தப்பட்டுள்ளது. பக்கவாட்டில் துளையிடும் எலி வளை தொழிலாளர்கள் மூலம் துளையிடும் பணியில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

    • தொழிலாளர்களை மீட்க துளையிடும் பணி நிறைவடைந்துள்ளது.
    • தொழிலாளர்களை மீட்க ஆம்புலன்ஸ்கள், மருத்துவ குழு தயார் நிலையில் உள்ளது.

    உத்தரகாசி:

    உத்தரகாண்ட் மாநிலத்தில் உத்தரகாசி மாவட்டத்தின் சில்க்யாரா மலைப்பகுதியில் 4.50 கிலோமீட்டர் தூரத்துக்கு மலைக்கு கீழ் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடந்துவந்தது.

    கடந்த 12-ம் தேதி நடந்த சுரங்கப்பாதை விபத்தில் தொழிலாளர்கள் 41 பேர் சிக்கிக் கொண்டனர். தொடர்ந்து இன்று 17-வது நாளாக மீட்புப் பணி நடைபெற்று வருகிறது.

    இதற்கிடையே, தொழிலாளர்களை மீட்க துளையிடும் பணி நிறைவடைந்துள்ளது. தொழிலாளர்களை மீட்க தயார் நிலையில், ஆம்புலன்ஸ்கள் மற்றும் மருத்துவ குழுவினர் உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். தொழிலாளர்களின் உறவினர்கள் சுரங்கத்தில் குவிந்துள்ளனர்.



    சுரங்கத்திற்குள் சென்ற தேசிய பேரிடர் மீட்புப் படையினர், தொழிலாளர்களை வெளியே கொண்டுவர ஸ்ட்ரெட்ச்சர்களுடன் உள்ளே சென்றனர். அங்கு தற்காலிக மருத்துவ வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    தொழிலாளர்களை மீட்டு கொண்டு வந்தவுடன், அவர்களுக்கு இங்கு பரிசோதனைகள் செய்யப்படும்.

    ஏதாவது பிரச்சினைகள் கண்டறியப்பட்டால் தொழிலாளர்களுக்கு சிகிச்சை அளிக்க 8 படுக்கைகளும் தயாராக உள்ளன. மூத்த மருத்துவர்கள் அடங்கிய குழுவும் அங்கு பணியில் உள்ளது. சுரங்கத்தின் வாயில் அருகே ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் உள்ளது. சுரங்கத்தில் இருந்து மீட்டு கொண்டு வரப்படும் தொழிலாளர்களை வரவேற்பதற்காக மாலைகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

    இந்நிலையில், உத்தரகாண்ட் சுரங்கத்தில் தொழிலாளர் ஒருவரை மீட்க 5 நிமிடங்கள் ஆகும். 41 தொழிலாளர்களையும் வெளியே கொண்டுவர 3 முதல் 4 மணி நேரம் வரை ஆகும். மீட்புப் பணியை ஒருங்கிணைக்க தேசிய பேரிடர் குழுவை சேர்ந்த 3 குழுவினர் சுரங்கத்திற்குள் செல்வார்கள். தொழிலாளர்களை மீட்க அனைத்து விதமான பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • கடந்த 12-ம் தேதி நடந்த சுரங்கப்பாதை விபத்தில் 41 தொழிலாளர்கள் சிக்கினர்.
    • தொடர்ந்து இன்று 17-வது நாளாக மீட்புப் பணி நடைபெற்று வருகிறது.

    உத்தரகாசி:

    உத்தரகாண்ட் மாநிலத்தில் உத்தரகாசி மாவட்டத்தின் சில்க்யாரா மலைப்பகுதியில் 4.50 கிலோமீட்டர் தூரத்துக்கு மலைக்கு கீழ் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடந்துவந்தது.

    கடந்த 12-ம் தேதி நடந்த சுரங்கப்பாதை விபத்தில் தொழிலாளர்கள் 41 பேர் சிக்கிக் கொண்டனர். தொடர்ந்து இன்று 17-வது நாளாக மீட்புப் பணி நடைபெற்று வருகிறது.

    சுரங்கப்பாதையில் சிக்கிக்கொண்ட தொழிலாளர்கள் 41 பேரில் 15 பேர் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். உத்தர பிரதேசம் (8), பீகார் (5), ஒடிசா (5), மேற்கு வங்காளம் (3), உத்தரகாண்ட் (2), அசாம் (2), இமாசல பிரதேசம் (1) ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அடங்குவர்.

    அவர்களை மீட்க 57 மீட்டர் இடிபாடுகளுக்குள் குழாய்களை செலுத்தி மீட்கும் பணி நடந்தது. முதல் தடவை நடந்த முயற்சியில் எந்திரம் பழுது அடைந்ததால் அதிநவீன ஆகர் எந்திரம் கொண்டு வரப்பட்டு துளையிட்டு குழாய் அமைக்கும் பணி நடந்தது.

    அதுவும் பழுதாகியதால், செங்குத்தாக துளையிடும் பணி நடைபெற்றது.

    இதற்கிடையே, தொழிலாளர்களை மீட்க துளையிடும் பணி நிறைவடைந்தது. தொழிலாளர்களை மீட்க தயார் நிலையில், ஆம்புலன்ஸ்கள் மற்றும் மருத்துவ குழுவினர் உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, தொழிலாளர்களின் உறவினர்கள் சுரங்கத்தில் குவிந்துள்ளனர்.

    சுரங்கத்திற்குள் சென்ற தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தொழிலாளர்கள் 41 பேரையும் வெளியே கொண்டுவர ஸ்ட்ரெட்ச்சர்களுடன் உள்ளே சென்றனர்.

    இந்நிலையில், முதல் கட்டமாக 15 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர். அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை வழங்கப்பட உள்ளது. மற்றவர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர்.

    சுமார் 400 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த போராட்டத்தின் விளைவாக மீட்கப்பட்ட தொழிலாளர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    • மீட்புப் பணிகளை முதல் மந்திரி புஷ்கர் சிங் தாமி நேரில் சென்று பார்வையிட்டார்.
    • மீட்கப்பட்டவர்களிடம் மாநில முதல் மந்திரி கலந்துரையாடினார்.

    உத்தரகாசி:

    உத்தரகாண்ட் மாநிலத்தில் உத்தரகாசி மாவட்டத்தின் சில்க்யாரா மலைப்பகுதியில் 4.50 கிலோமீட்டர் தூரத்துக்கு மலைக்கு கீழ் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடந்துவந்தது.

    கடந்த 12-ம் தேதி நடந்த சுரங்கப்பாதை விபத்தில் தொழிலாளர்கள் 41 பேர் சிக்கிக் கொண்டனர். தொடர்ந்து இன்று 17-வது நாளாக மீட்புப் பணி நடைபெற்று வருகிறது.

    தொழிலாளர்களை மீட்க துளையிடும் பணி நிறைவடைந்தது. தொழிலாளர்களை மீட்க தயார் நிலையில், ஆம்புலன்ஸ்கள் மற்றும் மருத்துவ குழுவினர் உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, தொழிலாளர்களின் உறவினர்கள் சுரங்கத்தில் குவிந்தனர்.

    இதற்கிடையே, முதல் கட்டமாக 5 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர். அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை வழங்கப்பட உள்ளது. மற்றவர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். மீட்கப்பட்ட தொழிலாளர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இந்நிலையில், மீட்புப் பணிகளை முதல் மந்திரி புஷ்கர் சிங் தாமி நேரில் சென்று பார்வையிட்டார். மீட்கப்பட்டவர்களிடம் முதல் மந்திரி கலந்துரையாடினார்.

    • மீட்கப்பட்டவர்களிடம் முதல் மந்திரி புஷ்கர் சிங் தாமி கலந்துரையாடினார்.
    • தொழிலாளர்கள் மீட்கப்பட்டதும் அப்பகுதி மக்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

    உத்தரகாசி:

    உத்தரகாண்ட் மாநிலத்தில் உத்தரகாசி மாவட்டத்தின் சில்க்யாரா மலைப்பகுதியில் 4.50 கிலோமீட்டர் தூரத்துக்கு மலைக்கு கீழ் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடந்துவந்தது.

    கடந்த 12-ம் தேதி நடந்த சுரங்கப்பாதை விபத்தில் தொழிலாளர்கள் 41 பேர் சிக்கிக் கொண்டனர். தொடர்ந்து இன்று 17-வது நாளாக மீட்புப் பணி நடைபெற்றது. இன்று மாலை தொழிலாளர்களை மீட்க துளையிடும் பணி நிறைவடைந்தது. இதனால் அவர்களது உறவினர்கள் சுரங்கத்தில் குவிந்தனர்.

    இதற்கிடையே, ஒவ்வொரு தொழிலாளராக பத்திரமாக மீட்கப்பட்டனர். அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை வழங்கப்பட உள்ளது. மீட்கப்பட்ட தொழிலாளர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    மீட்புப் பணிகளை முதல் மந்திரி புஷ்கர் சிங் தாமி நேரில் சென்று பார்வையிட்டார். மீட்கப்பட்டவர்களிடம் முதல் மந்திரி கலந்துரையாடினார்.

    இந்நிலையில், சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மீட்கப்பட்ட தொழிலாளர்களை மத்திய மந்திரி வி.கே.சிங் வரவேற்றார்.

    தொழிலாளர்கள் மீட்கப்பட்டதும் அப்பகுதி மக்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

    • சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
    • மீட்புப் படைகளுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    புதுடெல்லி:

    உத்தரகாண்ட் மாநிலத்தில் உத்தரகாசி மாவட்டத்தின் சில்க்யாரா மலைப்பகுதியில் உள்ள சுரங்கப்பாதையில் 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். 17 நாளாக நடந்த மீட்புப் பணி இன்று முடிவடைந்தது.

    ஒவ்வொரு தொழிலாளராக பத்திரமாக மீட்கப்பட்டனர். மீட்கப்பட்ட தொழிலாளர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இந்நிலையில், உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டதற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்மு எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட செய்தியில், உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்கப்பாதையில் சிக்கியிருந்த தொழிலாளர்கள் அனைவரும் மீட்கப்பட்டதை அறிந்து நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் உணர்கிறேன். 17 நாட்கள் அவர்கள் கடின உழைப்பு, மீட்பு முயற்சி தடைகளை சந்தித்தது, மனித சகிப்புத்தன்மைக்கு சான்றாக உள்ளது. அவர்களின் மன உறுதிக்கு தேசம் வணக்கம் செலுத்துகிறது. வரலாற்றில் மிகவும் கடினமான மீட்புப் பணிகளில் ஒன்றைச் செய்ய நம்பமுடியாத மன உறுதியுடன் செயல்பட்ட அணிகள் மற்றும் அனைத்து நிபுணர்களையும் வாழ்த்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.



     


    இதேபோல் பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட செய்தியில், உத்தரகாசியில் நமது தொழிலாளர் சகோதரர்களின் மீட்புப் பணியின் வெற்றி அனைவரையும் உணர்ச்சிவசப்பட வைக்கிறது. சுரங்கப்பாதையில் சிக்கிய நண்பர்களுக்கு நான் சொல்ல விரும்புவது, உங்கள் தைரியமும் பொறுமையும் அனைவரையும் ஊக்குவிக்கிறது. நீங்கள் அனைவரும் நலமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வாழ்த்துகிறேன். நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, இந்த நண்பர்கள் இப்போது தங்கள் அன்புக்குரியவர்களைச் சந்திப்பார்கள் என்பது மிகவும் திருப்திகரமான விஷயம். இந்த சவாலான நேரத்தில் இந்தக் குடும்பங்கள் அனைத்தும் காட்டிய பொறுமையும் தைரியமும் போதுமான அளவு பாராட்டமுடியாது. மீட்பு நடவடிக்கையில் தொடர்புடைய அனைத்து மக்களையும் நான் வணங்குகிறேன். அவர்களின் துணிச்சலும் உறுதியும் நமது தொழிலாளர் சகோதரர்களுக்கு புது வாழ்வு அளித்துள்ளது. இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள ஒவ்வொருவரும் மனிதநேயம் மற்றும் குழுப்பணிக்கு ஓர் அற்புதமான உதாரணத்தை அமைத்துள்ளனர் என பதிவிட்டுள்ளார்.

    • இறுதிக்கட்ட துளையிடும் பணியில் எலி வளை தொழிலாளர்கள் பயன்படுத்தப்பட்டனர்.
    • சுமார் 20 மணி நேரத்திற்குள் 12 மீட்டர் தூரம் வரை துளையிட்டு மீட்புப்பணிக்கு விரைவாக முடிவடைய உதவி செய்தனர்.

    உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் உள்ள சில்க்யாரா சுரங்கப்பாதையில் 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீடக அதிநவீன கருவிகள் வரவழைக்கப்பட்டன.

    கிடைமட்டமாக சுமார் 57 மீட்டர் தூரம் துளையிட்டு இடிபாடுகளை வெளியேற்ற வேண்டியிருந்தது. நவீன கருவிகளால் சுமார் 46 மீட்டர் தூரம் வரைதான் துளையிட முடிந்தது. அதன்பின், 12 மீட்டர் தூரம் வரை துளையிட வேண்டிய நிலையில் சிக்கல் ஏற்பட்டது.

    அப்போதுதான் எலி வளை சுரங்க தொழிலாளரக்ள் (Rat-Hole Miners) வரவழைக்கப்பட்டனர். இவர்கள் ஒரு நாளைக்கு சுமார் 3 மீட்டர் தூரம் வரை தோண்டுவார்கள். இதனால் மூன்று நாட்களுக்கு மேல் ஆகலாம் என நினைத்திருந்தனர்.

    எலி வளை சுரங்க தொழிலாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, இடத்தை பார்த்ததும் எளிதாக தோண்டிவிடலாம் எனத் தெரிவித்து நேற்று முன்தினம் தங்களது பணியை தொடங்கினர். ஒருவர் உள்ளே சென்று இடிபாடுகளை மண்வெட்டி மற்றும் கைகளால் எடுத்து வெளியே அனுப்ப வேண்டும். வெளியில் இருப்பவர்கள் அதை இழுப்பு கையிறு மூலம் வெளியே கொண்டு வருவார்கள். இவ்வாறு அவர்கள் இடிபாடுகளை வெளியே கொண்டு வந்தனர். சுமார் 18 மணி நேரத்திற்குள் 12 மீட்டர் தூரம் வரை தோண்டி அசத்தினார்கள்.

    சிறப்பாக தோண்டி சிக்கியிருந்த தொழிலாளர்களை அடைந்தனர். எலி வளை தொழிலாளர்கள் சுரங்கத்தில் சிக்கியிருந்த தொழிலாளர்களை அடைந்ததும், ஆனந்தத்தில் கட்டிப்பிடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

    இந்த பணியில் ஈடுபட்டிருந்த மீட்புக்குழு அதிகாரி ஒருவர் "எலி வளை தொழிலாளர்களின் செயல் எதிர்பார்ப்பை மீறிய செயலாகும். 18 மணி நேரத்தில் இரண்டு அல்லது மூன்று மீட்டர் வரை தோண்டுவார்கள் என நினைத்தேன். ஆனால் அவர்கள் 10 மீட்டர் வரை தோண்டினர்." என்றார்.

    யார் இந்த எலி வளை தோண்டும் தொழிலாளர்கள் (Rat-Hole Miners)

    வடகிழக்கு மாநிலங்களில் நிலக்கரி சுரங்கம் அதிகமாக இருக்கும். மேல்மட்டத்தில் குறுகிய விட்டம் கொண்ட அளவில் குழி தோண்டுவார்கள். ஒருவர் உள்ளே சென்று மண்ணை வெளியே எடுத்து அனுப்ப, வெளியே இருப்பர்கள் அதை அப்புறப்படுத்துவார்கள்.

    நிலக்கரி இருக்கும் இடத்தை அடைந்ததும், உள்ளே பக்கவாட்டில் குடைந்து குழியை விரிவுப்படுத்துவார்கள். அதன்பின் நிலக்கரியை வெட்டுவார்கள். அவ்வாறு வெட்டும் நிலக்கரியை இந்த குழி வழியாக வெளியே அனுப்புவார்கள். அந்த குழி வழியாக நிலக்கரியை வெளியே எடுக்கப்பட்டு வாகனம் மூலம் கொண்டு செல்லப்படும்.

    இவ்வாறு குறுகிய குழி 800 மி.மீ. விட்டத்தை விட சிறியதாக இருப்பதால் எலி வளை போன்று காணப்படும். இதனால் எலி வளை சுரங்கம் தோண்டும் தொழிலாளர்கள் என அழைக்கப்பட்டனர்.

    இது மிகவும் ஆபத்தானது. ஒருவேளை நிலச்சரிவு ஏற்பட்டாலோ, மழை பெய்தாலோ சுரங்கத்தில் இருக்கும் தொழிலாளர்களை மீட்பது மிகவும் கடினம். அவர்களது உடலைக்கூட மீட்க முடியாது. இவ்வாறு சில துயர சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. மேலும், இதில் சிறுவர்களும் பயன்படுத்தப்படுவார்கள். இதனால், எலி வளை சுரங்கத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    தடைவிதிக்கப்பட்ட தொழிலாளர்களை கொண்டு ஒரு மிகப்பெரிய மீட்பு பணி வெற்றி அடைந்துள்ளது. தடை செய்யப்பட்டது என்றாலும், அவர்களது அனுபவம், திறன் ஆகியவை பயன்படுத்தப்பட்டுள்ளது என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    • மீட்கப்பட்ட தொழிலாளர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
    • துணிச்சல் மிக்க 41 தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு வலிமையும் உறுதியும் கிடைக்க வாழ்த்துகிறேன்.

    சென்னை:

    உத்தரகாண்ட் மாநிலத்தில் உத்தரகாசி மாவட்டத்தின் சில்க்யாரா மலைப்பகுதியில் உள்ள சுரங்கப்பாதையில் 41 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்க 17 நாளாக நடந்த மீட்புப் பணி நேற்று முடிவடைந்தது.

    ஒவ்வொரு தொழிலாளராக பத்திரமாக மீட்கப்பட்டனர். மீட்கப்பட்ட தொழிலாளர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இந்நிலையில், உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில்,

    உத்தரகாண்ட் மாநிலத்தில் உத்தரகாசி மாவட்டத்தின் சுரங்கப்பாதை சரிவில் சிக்கிய 41 தொழிலாளர்களும் 17 நாட்களுக்கு பிறகு வெற்றிகரமாக மீட்கப்பட்டது நிம்மதி அளிக்கிறது.

    மீட்புப் பணியில் அயராது உழைத்த துணிச்சலான மீட்புக் குழுக்கள் மற்றும் எலிவளை சுரங்கத் தொழிலாளர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

    துணிச்சல் மிக்க 41 தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு வலிமையும் உறுதியும் கிடைக்க வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    • 17 நாட்களுக்குப் பிறகு 41 தொழிலாளர்கள் நேற்றிரவு பத்திரமாக மீட்கப்பட்டனர்.
    • கடைசி 12 மீட்டர் தூரம் கைகளால் தோண்டப்பட்டு மீட்புக்குழுவினர் தொழிலாளர்களை சென்றடைந்தனர்.

    உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 41 தொழிலாளர்கள், நிலச்சரிவு காரணமாக சிக்கிக்கொண்டனர். சுமார் 17 நாட்களுக்குப் பிறகு அவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். 41 தொழிலாளர்களும் ஆரோக்கியத்துடன் உள்ளனர்.

    இருந்தபோதிலும், மருத்துவ பரிசோதனைக்காக சுகாதார மையத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களை பிரதமர் பிரமர் மோடி டெலிபோன் மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.

    மீட்கப்பட்ட 41 தொழிலாளர்களில் சுபோத் குமார் வர்மா என்ற இளைஞரும் ஒருவர். அவர் சுரங்கபாதைக்குள் சிக்கியது குறித்து கூறுகையில் "முதல் 24 மணி நேரம் மிகக் கடுமையாக இருந்தது. அதன்பின் குழாய் மூலம் எங்களுக்கு உணவு வழங்கப்பட்டது, தற்போது நான் முற்றிலும் நலமாக இருக்கும். எனது உடல் ஆரோக்கியமும் நன்றாக இருக்கிறது.

    எங்கள் 41 பேரையும் பத்திரமாக மீட்க முயற்சி மேற்கொண்ட மத்திய மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

    இதற்கிடையே மீட்கப்பட்ட தொழிலாளர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் பண உதவி நிதி வழங்கப்படும். சில்க்யாரா சுரங்கப்பாதை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என உத்தரகாண்ட் மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.

    ×