search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "twin blast"

    • ஜம்மு காஷ்மீரில் நடந்த இரட்டை குண்டுவெடிப்பு சம்பவத்தில் 6 பேர் காயமடைந்தனர்.
    • இதற்கு கவர்னர் மனோஜ் சின்ஹா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் எம்.பி.யான ராகுல் காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி கன்னியாகுமரியில் இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரிலான பாதயாத்திரையை தொடங்கினார். பல மாநிலங்களை கடந்து பஞ்சாப்பில் நடந்து வந்த இந்த யாத்திரை, கடந்த 18-ம் தேதி ஜம்மு காஷ்மீருக்குள் நுழைந்தது.

    இதற்கிடையே, ஜம்மு காஷ்மீரில் நேற்று இரட்டை குண்டுவெடிப்பு நடந்தது. இந்த சம்பவத்தில் 6 பேர் காயமடைந்தனர். இதற்கு கவர்னர் மனோஜ் சின்ஹா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி அவர் கேட்டு கொண்டார். உடனடியாக, உறுதியான நடவடிக்கை எடுத்து குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் போலீசாரிடம் கேட்டு கொண்டார்.

    இந்நிலையில், காஷ்மீரில் இரட்டை குண்டுவெடிப்பு நடந்ததுபற்றி காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் கே.சி. வேணுகோபால் செய்தியாளர்களிடம் கூறுகையில், காஷ்மீர் துணை நிலை கவர்னரை நான் சந்தித்துப் பேசினேன். காஷ்மீரில் உள்ள எங்களுடைய அனைத்து தலைவர்களும் பாதுகாப்பு அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் பார்த்துக் கொள்வது என்பது அவர்களுடைய பொறுப்பு. என்ன நடந்தபோதும் இந்திய ஒற்றுமை யாத்திரை தொடர்ந்து நடைபெறும் என தெரிவித்தார்.

    சோமாலியா தலைநகர் மொகடிஷுவில் உள்ள பிரபல உணவகத்தின் அருகே இன்று நடைபெற்ற தாக்குதலில் 10 பேர் உடல் சிதறி பரிதாபமாக பலியாகினர். #SomaliaTwinBlast
    மொகடிஷு:

    சோமாலியா தலைநகர் மொகடிஷுவில் சஹாபி என்ற பிரபல உணவகம் அமைந்துள்ளது. இன்று அந்த உணவகத்தின் அருகே இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதல் நடைபெற்றது.

    இந்த வெடிகுண்டு தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் உடல் சிதறி பரிதாபமாக பலியாகினர். இதில் மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    தகவலறிந்து வந்த மீட்புக் குழுவினர் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என மீட்புக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர். 
    #SomaliaTwinBlast
    42 உயிர்களை பறித்த ஐதராபாத் இரட்டை குண்டுவெடிப்பு வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாக இருப்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. #HyderabadTwinBombBlastVerdict
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் கடந்த 25-8-2007 அன்று கோகுல் சாட் உணவகம் மற்றும் லும்பினி பார்க் பகுதியில் உள்ள திறந்தவெளி திரையரங்கம் ஆகிய இரண்டு இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இந்த பயங்கரவாத தாக்குதலில் கோகுல் சாட் உணவகம் பகுதியில் 32 பேர் மற்றும் திறந்தவெளி திரையரங்கம் அருகே 10 பேர் என மொத்தம் 42 பேர் பலியாகினர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக, தெலுங்கானா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். குண்டு வெடிப்புக்கு காரணமான இந்தியன் முஜாகிதின் அமைப்பை சேர்ந்த 4 பேரை கைது செய்து சத்திரப்பள்ளி சிறைச்சாலையில் அடைத்தனர்.  



    இந்த வழக்கு நம்பள்ளி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் கடந்த 2013-ம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 170 சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்று, வக்கீல்களின் வாதப்பிரதிவாதம் கடந்த 7-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. 

    இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாக இருக்கிறது. தீர்ப்பு வெளியாக இருப்பதால் நகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. #TwinBlast #HyderabadTwinBombBlastCase ##HyderabadTwinBombBlastVerdict 

    ×