search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Two people"

    தருமபுரியில் வெவ்வேறு இடங்களில் பெண் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
    தருமபுரி,

    தருமபுரி அருகேயுள்ள  இண்டூர் பங்குநத்தம் பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி சங்கீதா  (வயது 39). கூலித்தொழிலாளிகள். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த சங்கீதா மனமுடைந்து சம்பவத்தன்று தனது உடல் மீது மண் எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். 

    அவரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இதேபோல தருமபுரி அருகேயுள்ள பொம்மிடி போலீஸ் சரகம் சிப்பிரெட்டி அள்ளி பகுதியை சேர்ந்த பெரியசாமி என்பவரது மகன் ரவிச்சந்திரன் (வயது 21) என்ற பட்டதாரி வாலிபர் குடும்ப பிரச்சனையால் சம்பவத்தன்று எலி பேஸ்ட்டை தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

     அவரை சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி ரவிச்சந்திரன் உயிரிழந்தார். இது குறித்து பொம்மிடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வரு கின்றனர். 
    கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்தபோது, கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உள்பட 2 பேர் பலியாகினர்.
    சென்னை:

    ராஜாஜி அரங்கில் உள்ள கருணாநிதி உடலை  தொண்டர்கள் முண்டியடித்துக் கொண்டு பார்க்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.கலைஞர் உடல் உள்ள இடத்தில் கட்டுப்படுத்த முடியாத அளவு தொண்டர் கூட்டத்தை அதிரடிப் படையினர் ஒழுங்குபடுத்துகின்றனர்.

    கருணாநிதி உடலை காண நூற்றுக்கணக்கான தொண்டர்கள் முண்டியடித்துக்கொண்டு குழுமியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கூட்ட நெரிசல் காரணமாக உடல் அரங்கத்திற்குள் கொண்டு செல்லப்பட்டது.

    கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக திமுக தலைவர்களும், தொண்டர்களும் அலை அலையாக வந்த வண்ணம் இருந்தனர். அவர்கள் அண்ணாசாலை வழியாக ராஜாஜி அரங்கிற்கு சென்று அஞ்சலி செலுத்திவிட்டு சிவானந்த சாலை வழியாக வெளியேற ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

    4 பாதைகளில் மக்கள் உள்ளே வரவும், வெளியே செல்லவும் வழிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அந்த 4 பாதைகளிலும் மக்கள் வெள்ளம் போல் காட்சி அளித்தனர். வாலாஜா சாலை, சிவானந்த சாலை, அண்ணா சாலை ஆகிய 3 சாலைகளிலும் எங்கு திரும்பினாலும் மக்கள் தலைகளாக காட்சி அளித்தது. லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வந்து தங்கள் தலைவனுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி சென்றனர்.

    கூட்டம் கட்டுகடங்காமல் போகவே தொண்டர்களிடையே தி.மு.க செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் பேசி அவர்களும் கலைந்து போகுமாறு கூறினார்.

    ராஜாஜி அரங்கில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 2 பெண் போலீசார் உட்பட 26 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    கூட்ட நெரிசலில் சிக்கி எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த செண்பகம் (60), மற்றும் 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரும் உயிரிழப்பு: 8 பேர் ஆபத்தான நிலையில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
    எத்தியோப்பியாவில் பிரதமரை குறிவைத்த நிகழ்த்திய குண்டு வெடிப்பில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #Ethiopianpminister #Ethiopiablast
    அடிஸ் அபாபா:

    எத்தியோப்பியா நாட்டின் தலைநகரான அடிஸ் அபாபாவில் நேற்று முன்தினம் ஒரு பேரணியின் நிறைவில் நடந்த பொதுக்கூட்டத்தில் அந்த நாட்டின் பிரதமர் அபிய் அகமது (வயது 41) கலந்துகொண்டு பேசினார்.

    அவர் பேசி முடித்ததும், அங்கே ஒரு குண்டுவெடிப்பு நடந்தது. மேடையில் இருந்த பிரதமரை குறிவைத்து நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில், அவர் காயமின்றி தப்பினார்.

    ஆனால் இந்த குண்டுவெடிப்பில் 153 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் சிறிது நேரத்தில் இறந்தார்.



    இந்த நிலையில், மேலும் ஒருவர் நேற்று இறந்தார். இதனால் குண்டுவெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது.

    இதுபற்றிய தகவலை வெளியிட்ட அந்த நாட்டின் சுகாதார மந்திரி அமிர் அமன், “குண்டுவெடிப்பில் மேலும் ஒரு எத்தியோப்பியர் இறந்துவிட்டார் என்று தகவல் வந்து உள்ளது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறினார்.

    இந்த குண்டுவெடிப்பில் 6 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பாதுகாப்பு குளறுபடிகள் தொடர்பாகவும் 8 பேரை பிடித்து போலீஸ் காவலில் வைத்து விசாரிப்பதாக அடிஸ் அபாபா நகர துணை போலீஸ் கமிஷனர் தெரிவித்தார்.

    பெரம்பலூர் நான்கு ரோடு அருகே சுற்றுலா பஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் காயமடைந்தனர்.
    பெரம்பலூர்:

    புதுச்சேரியில் இருந்து நேற்று முன்தினம் 56 பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு சுற்றுலா பஸ் கொடைக்கானலுக்கு புறப்பட்டது. அந்த பஸ் நள்ளிரவு சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது.

    அப்போது பெரம்பலூர் நான்கு ரோடு அருகே வந்த போது, திடீரென்று டிரைவரின் கட்டுபாட்டை இழந்து பஸ் தாறு மாறாக ஓடியது. தொடர்ந்து பஸ் சாலையின் மையத்தில் உள்ள தடுப்புச்சுவரில் மோதி நிற்காமல் ஓடி தடுப்புகம்பியில் மோதி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பஸ்சின் முன்பகுதி கண்ணாடி முற்றிலும் நொறுங்கியது. பஸ்சில் பயணம் செய்த பயணிகள் இடிபாடுகளுக் கிடையே சிக்கி தவித்தனர். இதனை கண்ட அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் இது குறித்து பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் பஸ்சுக்குள் இடிபாடுகளுக்கிடையே சிக்கி தவித்த பயணிகளை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இதில் 2 பயணிகள் படுகாயம் அடைந்தனர். மற்றவர்கள் லேசான காயத்துடன் தப்பினர். படுகாயம் அடைந்தவர்கள் பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து பெரம்பலூர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பழனி சாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 
    ×