என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Two youth arrest"

    வில்லியனூர் அருகே மதுக்கடை ஊழியரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். மற்றொருவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே அரியூர்பேட்- ஆனந்தபுரம் ரோட்டை சேர்ந்தவர் சிவா (வயது 37). இவர், அதே பகுதியில் உள்ள தனியார் மதுக்கடையில் பொறுப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.

    நேற்று இவர் வேலை பார்க்கும் மதுக்கடைக்கு கண்டமங்கலம் அருகே நவமால்மருதூரை சேர்ந்த மைக்கேல் (வயது 31), ஜெயக்குமார் (30). மற்றும் சூர்யா ஆகியோர் மது குடிக்க வந்தனர். அவர்கள் மதுவாங்கி குடித்து விட்டு அதற்கான தொகையை கொடுக்க மறுத்தனர். இதனை சிவா தட்டிக் கேட்டார்.

    இதில் இரு தரப்பினருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த மைக்கேல், ஜெயக்குமார், சூர்யா ஆகிய 3 பேரும் சேர்ந்து சிவாவை சரமாரியாக தாக்கினர். மேலும் கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு அங்கிருந்து சென்றனர்.

    இதுகுறித்து சிவா வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்த குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மைக்கேல், ஜெயக்குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். சூர்யாவை தொடர்ந்து தேடி வருகிறார்கள். #tamilnews
    விருதுநகரில் மாணவியிடம் ஈவ்டீசிங் செய்ததாக போக்சோ சட்டத்தில் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    விருதுநகர்:

    விருதுநகர் பாண்டியன் நகர் அருகே உள்ள அண்ணா நகரைச் சேர்ந்த 17 வயது சிறுமி அந்த பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

    இவர் தினமும் பள்ளிக்கு பஸ்சில் சென்று வருவது வழக்கம். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த விஜய் என்ற கருப்பசாமி (17), அஜீத்குமார் (19) ஆகியோர் மாணவியிடம் கேலி-கிண்டல் செய்தனர்.

    இதுகுறித்து விருதுநகர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் மாணவி புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் விஜய் என்ற கருப்பசாமி மற்றும் அஜீத்குமாரை கைது செய்தனர்.

    கைதான விஜய், வத்தலக்குண்டு செங்கல், சிமெண்டு ஆலையிலும், அஜீத்குமார் கமுதியிலும் வேலை பார்த்து வருகின்றனர். #tamilnews
    ×