என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Udumalai Railway Station"
- கட்டுப்பாட்டு அறையில் உள்ள சிக்னல்கள் சரியான முறையில் செயல்படுகிறதா என்று ஆய்வு செய்தார்.
- பயணிகளிடம் ரெயில் நிலைய சேவைகளில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்றும் கேட்டறிந்தார்.
உடுமலை:
ஒடிசா மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ரெயில் விபத்தில் ஏராளமானோர் பலியானதுடன் படுகாயமும் அடைந்தனர். நாட்டையே உலுக்கிய இந்தக் கோர விபத்தைத் தொடர்ந்து ரெயில்வே நிர்வாகத்தின் சார்பில் கண்காணிப்பு மற்றும் ஆய்வுப் பணிகள் தீவிர படுத்தப்பட்டு உள்ளது. நேற்று உடுமலை ரெயில் நிலையத்தில் தென்னக ரெயில்வே கூடுதல் பொது மேலாளர் கௌசல் கிஷோர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கட்டுப்பாட்டு அறையில் உள்ள சிக்னல்கள் சரியான முறையில் செயல்படுகிறதா என்று ஆய்வு செய்தார்.
பின்னர் ரெயில் நிலைய வளாகத்தில் உள்ள சுகாதார வளாகம், தாய்மார்கள் பாலூட்டும் அறை, இருசக்கர வாகன நிறுத்துமிடம், டிக்கெட்டுகள் வழங்குவதையும் ஆய்வு செய்தார். அத்துடன் பயணிகளிடம் ரெயில் நிலைய சேவைகளில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்றும் கேட்டறிந்தார்.இந்த நிகழ்வின் போது மதுரை கோட்டை மேலாளர் பத்மநாபன் ஆனந்த் உள்ளிட்ட ரெயில்வே அதிகாரிகள் பணியாளர்கள் உடன் இருந்தனர். அப்போது உடுமலை மற்றும் பொள்ளாச்சி பயணிகள் ெரயில் நலச்சங்கங்கள் சார்பில் கூடுதல் பொது மேலாளர் கெளசல் கிஷோரிடம் மனு அளித்தனர்.அந்த மனுவில் ,உடுமலை வழியாக கோவை ,திருச்சி ,சென்னை செல்வதற்கு புதிய ரெயில் இயக்க வேண்டும். அதே போன்று உடுமலை ,மதுரை வழியாக மேட்டுப்பாளையம் ,தூத்துக்குடிக்கு செல்வதற்கு ரெயில் இயக்க வேண்டும். பொள்ளாச்சி கிணத்துக்கடவு ரெயில் பாதையில் மீட்டர் கேஜ் ரெயில்கள் இயங்கிய போது இருந்த கோவில்பாளையம் ரெயில் நிலையத்தை மீண்டும் அமைக்க வேண்டும். உடுமலை உழவர் சந்தையை விரிவாக்கம் செய்ய தேவையான நிலத்தை ரெயில்வே துறையிடம் பெறுவது உள்ளிட்ட கோரிக்கைகள் வைக்கப்பட்டு இருந்தது.அதைப் பெற்றுக் கொண்ட ரெயில்வே அதிகாரிகள் பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.
- இரவு நேரங்களில் மின் விளக்குகள் எரிவதில்லை.
- ெரயில்வே துறை அதிகாரிகளுக்கு மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
உடுமலை:
உடுமலை ரெயில் நிலையத்தில் மின் விளக்குகள் எரியாததால், பயணிகள் பாதிக்கப்படுகின்றனர்.உடுமலை ரெயில் நிலையம் பிளாட் பார்ம் 1 மற்றும் 2 நடை பாதைகளில் இரவு நேரங்களில் மின் விளக்குகள் எரிவதில்லை. இதனால் பயணிகள், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.இங்கு வரும் பெண்கள், குழந்தைகள், இருட்டாக உள்ளதால், ஒரு வித அச்சத்துடன் வெளியில் வர வேண்டியுள்ளது. எனவே, மின் விளக்குகள் எரியவும், சமூக விரோத செயல்களை தடுக்கவும் ெரயில்வே துறை மற்றும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும், என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், ெரயில்வே துறை அதிகாரிகளுக்கு மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்