என் மலர்
நீங்கள் தேடியது "ukraine ruissia war"
- உக்ரைன் நாட்டுக்கு பல்வேறு நாடுகள் ஆயுதங்கள் உள்ளிட்ட உதவிகளை செய்து வருகின்றன.
- ஏற்கனவே நான்கு வெவ்வேறு சம்பவங்களில் இறப்புகள் மற்றும் காயங்கள் நிகழ்ந்தன.
உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் 24-ந்தேதி ரஷியா தாக்குதலை தொடங்கியது. இந்த போர் தொடங்கி 5 மாதங்களை நெருங்கி விட்டது. ஆனாலும் இன்னும் முடிவுக்கு வரவில்லை.
உக்ரைன் முக்கிய நகரங்களை ரஷியா கைப்பற்றிய போதும் மற்ற இடங்களை பிடிக்க கடுமையான சண்டை நடந்து வருகிறது. உக்ரைன் நாட்டுக்கு பல்வேறு நாடுகள் ஆயுதங்கள் உள்ளிட்ட உதவிகளை செய்து வருகின்றன.
இந்நிலையில், கிழக்கு கார்கிவ் பகுதியில் நேற்று ரஷிய ஷெல் நடத்திய தாக்குதலில், 8 வயது குழந்தை உள்பட 15 பேர் கொல்லப்பட்டதாக ஆளுநர் ஒலெக் சினெகுபோவ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆளுநர் மேலும் கூறியதாவது:- ரஷிய ஷெல் தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 16 பேர் காயமடைந்தனர். காங்கிவ் பகுதியில் ரஷியா பகர்நேர ஷெல் தாக்குதலின் பயங்கரமான விளைவுகள் இதுவாகும். இதுபோன்று ஏற்கனவே நான்கு வெவ்வேறு சம்பவங்களில் இறப்புகள் மற்றும் காயங்கள் நிகழ்ந்தன. இது பயங்கரவாதம். இவை மனிதகுலத்திற்கு எதிரான குற்றச் செயல்கள். அவை தண்டிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.