என் மலர்
நீங்கள் தேடியது "Unicef"
- ஆப்கானிஸ்தான் போரில் வெடிக்காத குண்டுகளால் 700 குழந்தைகள் பலியாகி உள்ளனர்.
- மண்ணில் புதைத்து வைக்கப்பட்ட கண்ணி வெடிகளில் சிக்கி அவர்கள் உயிரிழக்கின்றனர்
காபூல்:
ஆப்கானிஸ்தானில் அரசுக்கு எதிரான போரில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். இதனை தொடர்ந்து தலிபான்கள் தலைமையில் அரசு நடந்து வருகிறது. பல புதிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு வருகின்றன.
போரால் பாதிக்கப்பட்ட அந்நாட்டில் வறுமை மற்றும் வேலையின்மை ஆகியவற்றால் மக்கள் அதிக சிரமத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர். புதிய அரசின் கட்டுப்பாடுகளும் அவர்களை இன்னலுக்கு ஆளாக்கி இருக்கின்றன.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானுக்கான யூனிசெப் அமைப்பு டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில், 2022-ம் ஆண்டில் போரில் பயன்படுத்தப்பட்டு வெடிக்காத நிலையில் உள்ள குண்டுகள், வெடிபொருட்கள் ஆகியவற்றால் 700-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளனர் என வேதனை தெரிவித்துள்ளது.
கடந்த வாரம், அந்நாட்டில் வெடிக்காத குண்டுகளால் 8 பேர் உயிரிழந்தனர். அவற்றை எடுத்து அவர்கள் விளையாடியபோதும், உலோகத் துண்டுகளை எடுத்து விற்பதற்காக சேகரித்தபோதும் இச்சம்பவம் நடந்துள்ளது என தெரிவித்துள்ளது.
பொதுமக்களுக்கும் இதுபற்றிய போதிய விவரங்கள் தெரிவதில்லை. நில கண்ணிவெடிகள், வெடிக்காத பீரங்கி குண்டுகள், வெடிகுண்டுகள் மற்றும் அதுபோன்ற பிற ஆயுதங்களால், நாட்டில் குழந்தைகள் உள்பட பலர் சிக்கி உயிரிழந்து வருகின்றனர்.
- கொரோனா தடுப்பூசி நம்பிக்கை திட்டத்தின் கீழ் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
- தொற்றுநோய்க்குப் பிறகு 55 நாடுகளில் தடுப்பூசிகளின் முக்கியத்துவம் பற்றிய கருத்து உறுதியாக இருந்தது.
கொரோனா தடுப்பூசிகளின் முக்கியத்துவம் உணர்ந்து செயல்பட்ட நாடுகளில் கொரோனா தடுப்பூசி நம்பிக்கை திட்டத்தின் கீழ் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வில், தொற்றுநோய்க்குப் பிறகு 55 நாடுகளில் தடுப்பூசிகளின் முக்கியத்துவம் பற்றிய கருத்து உறுதியாக இருந்தது தெரியவந்தது. ஆனால் அவற்றிலும் 52 நாடுகளில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதின் முக்கியத்துவம் பற்றிய பொதுவான பார்வை குறைந்து விட்டது.
இருப்பினும் தடுப்பூசிகளின் முக்கியத்துவத்தில் உறுதியாக இருந்து செயல்பட்ட 3 நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்று ஐ.நா. அமைப்பான 'யுனிசெப்' பாராட்டி உள்ளது. பிற இரு நாடுகள் சீனாவும், மெக்சிகோவும் ஆகும்.
- முதல் ஆறு மாதங்களில் 11,600 குழந்தைகள் மத்திய தரைக்கடல் பகுதிய கடந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.
- குடியேறிகளின் மரணப் பாதையாக மத்திய தரைக்கடல் பகுதி விளங்குகிறது.
ஜெனிவா:
உள்நாட்டு போர், பொருளாதார நெருக்கடி போன்ற காரணங்களால் துருக்கி, சிரியா, சூடான் உள்ளிட்ட வட ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து மக்கள் இடம்பெயர்ந்து ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் அடைவது அதிகரித்து வருகிறது. ஆனால் இவர்கள் பெரும்பாலும் சட்ட விரோதமாக படகுகளில் புறப்பட்டு. மத்திய தரைக்கடல் பகுதி வழியாக ஐரோப்பாவுக்கு செல்கின்றனர். இவ்வாறு செல்லும்போது அபாயகரமான விபத்துகளை சந்தித்து பலர் உயிரை விட்டுள்ளனர். இதனால் குடியேறிகளின் மரணப் பாதையாக மத்திய தரைக்கடல் பகுதி விளங்குகிறது.
அவ்வகையில் இந்த ஆண்டின் முதல் பாதியில் மட்டும் மத்திய தரைக் கடலைக் கடந்து ஐரோப்பாவிற்குச் செல்ல முயன்ற 289 குழந்தைகள் இறந்திருப்பதாக ஐ.நா குழந்தைகள் அமைப்பான யுனிசெப் தெரிவித்துள்ளது.
மத்திய தரைக் கடலைக் கடந்து ஐரோப்பாவுக்குச் செல்ல முயன்ற குழந்தைகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை ஒப்பிடும்போது இந்த ஆண்டின் முதல் பாதியில் இரு மடங்காக அதிகரித்துள்ளது என யுனிசெப் அமைப்பின் தலைவர் வெரீனா கனாஸ் கூறி உள்ளார்.
இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், 11,600 குழந்தைகள் மத்திய தரைக்கடல் பகுதிய கடந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. 2022ல் இதே காலக்கட்டத்தில் இருந்ததை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகம்.
இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில், சுமார் 3,300 குழந்தைகள் துணையில்லாமல் அல்லது பெற்றோரிடம் இருந்து பிரிக்கப்பட்டவர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கையானது, கடந்த ஆண்டு இதே காலகட்டத்தை விட மூன்று மடங்கு அதிகம்.
இந்த குழந்தைகள் தாங்கள் தனியாக இல்லை என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். உலகத் தலைவர்கள், இந்த குழந்தைகளுக்கு பயனுள்ள தீர்வுகளைத் தேடுவதில் உறுதியாக இருக்க வேண்டும் என கனாஸ் வலியுறுத்தினார்.
- 70 நாடுகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட சட்ட வல்லுனர்கள் கலந்து கொள்கின்றனர்
- பொதுமக்கள் நலனிற்காக பல தடைகற்களை உச்ச நீதிமன்றம் நீக்கியது என்றார் தலைமை நீதிபதி
மத்திய அரசாங்கத்தின் உதவியுடனும் சர்வதேச சட்ட அமைப்பு (International Legal Foundation), ஐக்கிய நாடுகளின் வளர்ச்சி திட்டம் (UN Development Programme) மற்றும் ஐ.நா. குழந்தைகள் நிதி அமைப்பு (UNICEF) ஆகியவற்றின் ஒத்துழைப்புடனும் இணைந்து, இந்திய தேசிய சட்ட சேவை ஆணையம் (NALSA), அனைவருக்குமான சட்ட உதவி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த முதல் பிராந்திய மாநாட்டை இந்திய தலைநகர் புது டெல்லியில் நவம்பர் 27 மற்றும் 28 தேதிகளில் நடந்தது.
இந்த மாநாட்டில் உலகின் 70 நாடுகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட முக்கிய சட்ட வல்லுனர்கள் பங்கேற்றனர்.
இதில் பங்கேற்று பேசிய இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தெரிவித்ததாவது:
1980களின் ஆரம்பத்தில் இருந்தே இந்திய உச்ச நீதிமன்றம், நீதியை நிலைநாட்ட புரட்சிகரமான முயற்சிகளை எடுத்து அதன் மூலம் பொது நலன் சார்ந்த விஷயங்களில் நீதி பரிபாலனம் சிறப்பாக நடைபெற அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறது. பொதுமக்கள் உச்ச நீதிமன்றத்தை நாட தடையாய் இருந்த வழிமுறை சிக்கல்களையும், உச்ச நீதிமன்றம் எளிமைப்படுத்தியுள்ளது. இதன் மூலம் சமூக-பொருளாதார விஷயங்களில் அநீதி ஏற்பட்டால் அவை விரைவாக சரி செய்யப்பட்டு வருகிறது. இது போன்ற காரணங்களால் இந்திய உச்ச நீதிமன்றம் மக்கள் நீதிமன்றமாக கருதப்படுகிறது. அனைத்துவிதமான மேல்முறையீடுகளையும், சட்ட உதவி மறுக்கப்படும் சூழ்நிலை குறித்த வழக்குகளையும் மிகுந்த கவனத்துடன் கையாளுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
- பாலியல் வன்கொடுமைக்கு ஆளான குழந்தைகளில் 30% க்கும் அதிகமானோர் சிறுவர்கள் என்று யுனிசெப் தெரிவித்துள்ளது.
- பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டவர்களில் 5 மற்றும் 4 வயதுக்கு உட்பட 16 பச்சிளம் குழந்தைகளும் அடங்குவர்.
வட ஆப்பிரிக்க நாடான சூடானில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் ராணுவத்துக்கும், துணை ராணுவப் படையினருக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது.
இதனால் நாடு முழுவதும் பொதுமக்கள் மீது வன்முறை, வெறிச்செயல்கள் அரங்கேறி வருகின்றன. இதுவரை குறைந்தது 20,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்தப் போரில் 1.4 கோடிக்கும் அதிகமான மக்களை தங்கள் வீடுகளிலிருந்து விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். நாட்டின் சில பகுதிகள் பஞ்சத்தில் சிக்கித் தவித்து வருகிறது.
இந்நிலையில் சூடானில் கடந்த 1 ஆண்டில் (2024இல்) மட்டும் ஆண் குழந்தைகள் உட்பட 221 குழந்தைகள் ராணுவ வீரர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக ஐநாவுக்கான குழந்தைகள் நிறுவனம் (யுனிசெப்) அறிக்கை வெளியிட்டுள்ளது.

போர் தொடங்கியதில் இருந்து சுமார் 61 ஆயிரத்து 800 குழந்தைகள் இடம்பெயர்ந்துள்ளனர் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாலியல் வன்முறை மற்றும் கட்டாய குழந்தை திருமணங்கள் உள்ளிட்ட அட்டூழியங்கள் இரு ராணுவ தரப்பினராலும் செய்யப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
பாலியல் வன்கொடுமைக்கு ஆளான குழந்தைகளில் 30% க்கும் அதிகமானோர் சிறுவர்கள் என்று யுனிசெப் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 5 மற்றும் 4 வயதுக்கு உட்பட 16 பச்சிளம் குழந்தைகளும் அடங்குவர். பதிவான வழக்குகளை தவிர்த்து இந்த எண்ணிக்கை பன்மடங்கு அதிகம் இருக்கலாம் என்ற அச்சம் சர்வதேச சமூகங்களிடையே பரவியுள்ளது.
