என் மலர்
நீங்கள் தேடியது "Universities"
- உயர்கல்வி நிறுவனங்களில் இருந்து தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் வேலையைப் பறிக்க நினைக்கின்றன.
- காங்கிரஸ் இதை ஒருபோதும் அனுமதிக்காது- சமூக நீதிக்காக நாங்கள் தொடர்ந்து போராடுவோம்.
உயர்கல்வி நிறுவனங்களில் எஸ்.சி., எஸ்.டி மற்றும் ஓ.பி.சி. பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்கள் நிரப்பப்படாமல் இருந்தால் அவற்றைப் பொதுப் பிரிவினருக்கான இடங்களாக மாற்றி மற்ற பிரிவினரைக் கொண்டு நிரப்பிக் கொள்ளலாம்" என்று பல்கலைக்கழக மானியக்குழு புதிய வழிகாட்டு விதிகளை உருவாக்கியுள்ளது.
இதுதொடர்பாக குறிப்பிட்ட காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி, "இட ஒதுக்கீட்டை முடிவுக்குக் கொண்டு வர சதி நடக்கிறது" என்றார்.
ராகுல் காந்தி மேலும் கூறியதாவது:-
யுஜிசியின் புதிய வரைவில், உயர்கல்வி நிறுவனங்களில் எஸ்சி, எஸ்சி, ஓபிசி பிரிவினருக்கு வழங்கப்பட்டு வந்த இடஒதுக்கீட்டை முடிவுக்குக் கொண்டுவர சதி நடக்கிறது.
இடஒதுக்கீட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பேசிய பாஜக- ஆர்எஸ்எஸ், இப்போது இதுபோன்ற உயர்கல்வி நிறுவனங்களில் இருந்து தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் வேலையைப் பறிக்க நினைக்கின்றன.
சமூக நீதிக்காகப் போராடும் மாவீரர்களின் கனவுகளைக் கொல்லவும், தாழ்த்தப்பட்ட பிரிவினரின் பங்களிப்பை இல்லாதொழிப்பதற்கும் இது ஒரு முயற்சி. இதுதான் 'அடையாள அரசியலுக்கும்' 'உண்மையான நீதி'க்கும் உள்ள வித்தியாசம், இதுதான் பாஜகவின் குணாதிசயம்.
காங்கிரஸ் இதை ஒருபோதும் அனுமதிக்காது- சமூக நீதிக்காக நாங்கள்
தொடர்ந்து போராடுவோம். மேலும் இந்த காலியிடங்களை இடஒதுக்கீட்டுப் பிரிவைச் சேர்ந்த தகுதியானவர்களைக் கொண்டு மட்டுமே நிரப்பவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பரீட்சை பேப்பர் மறுமதிப்பீட்டில் மார்க் அதிகமாக வழங்கி பல கோடி ரூபாய் ஊழல் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதொடர்பாக அப்போதைய தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உமா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்பு போலீசார் இதுபற்றி விசாரித்து வருகிறார்கள்.

ஆனால் பல்கலைக்கழகத்தை பொறுத்தவரை துணைவேந்தர் அல்லது கன்வீனர் கமிட்டிக்கு இதற்கான கட்டுப்பாட்டு அதிகாரம் உள்ளது. அந்த நேரத்தில் அங்கு துணைவேந்தர் இல்லை.
பேராசிரியர் உமா அப்போது தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியாக நியமிக்கப்பட்டு இருக்கிறார். இந்த நியமனம் நான் மந்திரியாவதற்கு முன்பு 2015-ம் ஆண்டு நடந்ததாகும்.
இந்த ஒப்பந்தம் செய்ததில் தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க நாங்கள் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளோம். அந்த நேரத்தில் செயலாளர் பதவியில் இருந்தவர் யார்? என்பது குறித்து நாங்கள் ஆய்வு செய்ய இருக்கிறோம்.
மார்க் மறுமதிப்பீட்டில் எப்படி தவறு நடந்தது என்பதை நாங்கள் அறிய வேண்டியது உள்ளது. ஒரு பல்கலைக்கழகத்தில் இதுபோன்ற தவறு நடந்ததால் மற்ற பல்கலைக்கழகத்திலும் இதே தவறு நடந்திருக்கும் என்று சொல்ல முடியாது. அங்கு தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வேறு நபராக இருப்பார். அவரும் இதை செய்திருப்பார் என்று சொல்ல முடியாது.
ஆனாலும் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இதுபோன்ற தவறுகள் நடந்திருக்கிறதா? என்பதை அறிய நாங்கள் கண்காணிக்க இருக்கிறோம். பல்கலைக்கழகத்தில் நடந்த தவறுகள் அமைச்சரவை அதிகாரிகளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
அது பல்கலைக்கழக மட்டத்தில் நடந்துள்ளது. உயர்கல்வித்துறையில் ஏதேனும் அதிகாரிக்கு அதில் தொடர்பிருந்தால் அது தவறானதாகும். விசாரணையில் யார் தவறு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த விஷயத்தில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு எந்த பயமும் இல்லை. இதில் நாங்கள் சமரசம் செய்து கொள்ள மாட்டோம். விசாரணையில் யார் தவறு செய்தாலும், எந்த துணைவேந்தர் காலத்தில் நடந்திருந்தாலும் நடவடிக்கை உறுதியாக எடுக்கப்படும். அவர்கள் முன்னாள் துணைவேந்தர்களாக இருந்தாலும் நடவடிக்கை எடுப்போம்.
ஏற்கனவே பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி மீது புகார் வந்ததை தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தவறு செய்த எந்த அதிகாரிகளும் தப்ப முடியாது.
இவ்வாறு அன்பழகன் கூறினார். #RevaluationScam #MinisterAnbalagan
நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் அவற்றின் கீழ் இயங்கக்கூடிய கல்லூரிகளில் பட்டப்படிப்பு படித்து முடித்த மாணவர்களுக்கு பட்டம் வழங்கும் விழாவை அந்தந்த பல்கலைக்கழகங்கள் ஆண்டுதோறும் நடத்துவது வழக்கம்.
ஆனால் ஒரு சில பல்கலைக்கழகங்கள் நிதி மற்றும் நேர பற்றாக்குறையை காரணம் காட்டி பட்டமளிப்பு விழாவை தவிர்த்துவிடுவதாக தெரிகிறது.
இந்த நிலையில் நாடு முழுவதும் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும், ஆண்டு தோறும் தவறாமல் பட்டமளிப்பு விழாவை நடத்திட வேண்டுமென மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் ஆணை பிறப்பித்து உள்ளது.
இது பற்றி மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “பட்டமளிப்பு விழாக்கள் ஒவ்வொரு ஆண்டும் நிச்சயமாக நடத்தப்பட வேண்டும். இது பட்டதாரி மாணவர்களுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாகும். மேலும் அவர்களின் குடும்பத்தாருக்கு பெருமை சேர்க்கக்கூடிய தருணமும் கூட” என்றார். #HRDMinistry #University
உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களின் தரவரிசை பட்டியலை (2019-ம் ஆண்டுக்கானது) தயாரித்து, இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த குவாக்கோரெல்லி சைமண்ட்ஸ் (கியூஎஸ்) நிறுவனம் வெளியிட்டு உள்ளது.
200 தலை சிறந்த பல்கலைக்கழகங்களின் பட்டியலில் இந்தியாவின் 3 பல்கலைக்கழகங்கள் இடம் பிடித்து உள்ளன.
அவை மும்பை இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம் (ஐஐடி), பெங்களூரூ இந்திய அறிவியல் கல்வி நிறுவனம் (ஐ.ஐ.எஸ்சி), டெல்லி இந்திய தொழில் நுட்ப கல்வி நிறுவனம் ஆகும்.
மும்பை ஐ.ஐ.டி. 17 இடங்கள் மேலே வந்து 162-வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு பிடித்த இடத்தை டெல்லி ஐ.ஐ.டி. தக்க வைத்துக்கொண்டு உள்ளது. பெங்களூரு ஐ.ஐ.எஸ்சி., 20 இடங்கள் முன்னேறி 170-வது இடத்தை கைப்பற்றி உள்ளது.
உலகின் 1000 தலைசிறந்த பல்கலைக்கழகங்களின் பட்டியலில் இந்தியாவின் 24 பல்கலைக்கழகங்கள் இடம் பெற்று உள்ளன. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 4 பல்கலைக்கழகங்கள் அதிகம் ஆகும்.
சென்னை ஐ.ஐ.டி., தர வரிசையில் மாற்றம் இல்லை.
அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப கல்வி நிறுவனம், உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் முதல் இடத்தை தொடர்ந்து 7-வது ஆண்டாக பிடித்து இருப்பது குறிப்பிடத்தகுந்தது. #University #IndianColleges #Tamilnews