search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "UP bypolls"

    • உத்தர பிரதேசத்தில் 9 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நவம்பர் 13-ல் நடைபெறுகிறது.
    • இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து சமாஜ்வாதி களம் காண்கிறது.

    லக்னோ:

    உத்தர பிரதேச மாநிலத்தில் காலியாக உள்ள 9 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நவம்பர் 13-ல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து சமாஜ்வாதி களம் காண்கிறது.

    இங்கு 7 தொகுதிகளில் சமாஜ்வாதியும், 2 தொகுதிகளில் காங்கிரசும் போட்டியிடும் என தகவல் வெளியானது.

    இந்நிலையில், நடைபெற உள்ள இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுவார்கள் என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

    சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி 43 இடங்களைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

    உத்தரப்பிரதேசத்தில் எம்.பி., எம்.எல்.ஏ. இடைத்தேர்தல்களில் தோல்வி அடைந்ததால் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் முதல்-மந்திரி ஆதித்யநாத்துக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். #UPbypolls #YogiAdityanath
    லக்னோ:

    உத்தரப்பிரதேசத்தில் சமீபத்தில் நடந்த காய்ரானா எம்.பி. தொகுதி மற்றும் நூர்பூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்களில் ஆளும் பா.ஜனதா படுதோல்வி அடைந்தது.

    ஏற்கனவே கோரக்பூர், புல்பூர் பாராளுமன்ற தொகுதிகளை பா.ஜனதா இழந்த நிலையில் தற்போது தொடர் தோல்வியை தழுவியிருப்பது முதல்-மந்திரி ஆதித்யநாத்துக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

    பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் முதல்-மந்திரி ஆதித்யநாத்துக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். கோபமாவ் தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. எகிலாம் பிரகாஷ் முதல்-மந்திரி ஆதித்யநாத்தை கண்டித்து இந்தியில் கவிதை எழுதி பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.


    அதில், “முதல்வர் இயலாதவர்” என்று மோசமான வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார். ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஊழல் அரசியல்வாதிகள் கைக்கு அதிகாரம் சென்றுவிட்டது. மோடியின் பெயரைச் சொல்லி ஆட்சியைப் பிடித்தோம். ஆனால் மக்கள் பாராட்டும் அளவுக்கு பணிகள் நடைபெறவில்லை. சங்பரிவார் போன்ற இயக்கங்கள் உள்ளே நுழைந்து விட்டதால் முதல்-மந்திரி பதவி பயனற்று போனது.

    5 பாராக்கள் கொண்ட இந்த கவிதைக்கு தடம் மாறிச் சென்றது அதிகாரிகள் ஆட்சி என்ற தலைப்பிட்டு வெளியிட்டுள்ளார்.

    இதேபோல் பைரியா தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. சுரேந்திரா சிங் கூறுகையில், தேர்தல் தோல்விக்கு ஊழலே காரணம். தாசில்தார் தொடங்கி போலீஸ் நிலையங்கள் வரை ஊழல் பரவி விட்டது. அதிகாரிகளும், போலீசாரும் மக்களை தொல்லைப்படுத்துவதையே நோக்கமாக கொண்டு செயல்பட்டார்கள். முதல்-மந்திரி அதை தடுக்க தவறியதால் அரசு மதிப்பு மரியாதையை இழந்து விட்டது என்றார்.

    இதற்கிடையே ஈடாவா நகரில் நடந்த நிகழ்ச்சியில் முதல்-மந்திரி ஆதித்யநாத் பேசுகையில், ஊழல்வாதிகளும், அவர்களை ஆதரிப்பவர்களும் பயங்கரவாதிகள். அவர்கள் கூட்டணி வைத்து பிரதமர் மோடிக்கு எதிராக செயல்படுகிறார்கள் என்றார். #UPbypolls #YogiAdityanath
    ×