என் மலர்
நீங்கள் தேடியது "UP cm yogi adityanath"
- வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் ஆஃபரை வழங்கியுள்ளனர்.
- இந்த ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை, சிபிஐ உடனடியாக விசாரணையைத் தொடங்கும் என்று நம்புகிறேன்"
உத்தரப் பிரதேச தலைநகர் நொய்டாவில் மதுக்கடைகளில் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்று அறிவிக்கப்பட்ட ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உ.பி. வாழ் மதுபிரியர்கள் ஒயின் ஷாப்களுக்கு படையெடுத்து வருகின்றனர். நீண்ட வரிசையில் அவர்கள் காத்திருக்கும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. இந்த விவகாரம் உ.பி. பாஜக அரசு மீது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி வருகிறது.
உத்தரப் பிரதேசத்தில் கலால் துறையின் நிதியாண்டு மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. விதிகளின்படி, மதுபான ஒப்பந்ததாரர்கள் தங்கள் முழு இருப்பையும் அன்றைய தினம் நள்ளிரவு 12 மணிக்குள் காலி செய்ய வேண்டும்.
இல்லையெனில் மீதமுள்ள மதுபானங்கள் அரசாங்கக் கணக்கில் சேர்க்கப்படும் மற்றும் அதன் விற்பனை தடை செய்யப்படும். இந்தக் காரணத்திற்காக, மதுபான விற்பனையாளர்கள் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் ஆஃபரை வழங்கியுள்ளனர்.
இந்நிலையில் வீடியோக்கள் வைரலானதை தொடர்ந்து நோய்டாவை ஒட்டியுள்ள தலைநகர் டெல்லி அரசியலிலும் இந்த விவகாரம் எதிரொலித்துள்ளது.

இந்த வீடியோவை பகிர்ந்து பதிவிட்டுள்ள டெல்லி முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மியின் முக்கிய தலைவருமான அதிஷி, "நீங்கள் ஒரு பாட்டில் இலவச மதுபானத்தைப் வழங்குகிறீரங்கள்… இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க இப்போது பாஜகவினர் வருவார்கள் என நம்புகிறேன். இந்த ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை, சிபிஐ உடனடியாக விசாரணையைத் தொடங்கும் என்று நம்புகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
டெல்லி மதுபான கொள்கை வழக்கில் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு 6 மாதம் வரை சிறையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.


உத்தர பிரதேச மாநிலத்தில் அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, பணம் பறிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய மாபியா கும்பல் தலைவன் முன்னா பஜ்ரங்கி ஜான்சி சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், வழக்கு விசாரணைக்காக முன்னா பஜ்ரங்கியை இன்று காலை பக்பத் கோர்ட்டுக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக ஜான்சி சிறைச்சாலையில் இருந்து சனிக்கிழமை பாக்பத் மாவட்ட சிறைச்சாலைக்கு கொண்டு வரப்பட்டார்.
அங்கிருந்து இன்று காலை கோர்ட்டுக்கு கொண்டு செல்வதற்காக வெளியே அழைத்து வந்த முன்னாவை மற்றொரு கைதி சுட்டுக்கொன்றான். இந்த சம்பவம் சிறை வளாகத்தில் திடீர் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியது. முன்னா கொலை செய்யப்பட்டதையடுத்து விசாரணை முடுக்கி விடப்பட்டது. மோப்பநாயுடன் விசாரணைக்குழுவினர் சிறைச்சாலைக்கு விரைந்தனர்.

இதுபற்றி முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறும்போது, ‘சிறைச்சாலை வளாகத்தில் நடந்த கொலை தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளேன். ஜெயிலரை சஸ்பெண்ட் செய்யவும் உத்தரவிட்டுள்ளேன். இதுபோன்று சிறைச்சாலை வளாகத்தில் நடக்கும் சம்பவம் மிகவும் சீரியசான விஷயம். இதுபற்றி ஆழமான விசாரணை நடத்தி, இதன் பின்னணியில் உள்ளவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். #GangsterMunnaBajrangi #GangsterShotDead