என் மலர்
நீங்கள் தேடியது "Upma"
- காலையில் செய்ய தோசை மீந்து விட்டால் மாலையில் இந்த ரெசிபியை செய்யலாம்.
- 10 நிமிடத்தில் இந்த ரெசிபியை செய்து விடலாம். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
தேவையான பொருட்கள்
கல் தோசை - 4
வெங்காயம் - 1
தக்காளி - 1
கறிவேப்பிலை - தேவைக்கு
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
தனி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்
ப.மிளகாய் - 3
கொத்தமல்லி - தேவைக்கு
உப்பு - சுவைக்கு
எண்ணெய் - 2 டீஸ்பூன்
தாளிக்க
கடுகு, உளுந்தம் பருப்பு - தலா 1 டீஸ்பூன்
செய்முறை
கல் தோசையை சிறிய துண்டுகளாக பிய்ந்து வைக்கவும்.
தக்காளி, வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் ப.மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
அனைத்தும் நன்றாக வதங்கியதும் பிய்ந்து வைத்துள்ள தோசையை சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து கிளறவும்.
மசாலாவுடன் தோசை நன்றாக சேர்ந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.
இப்போது சூப்பரான தோசை உப்புமா ரெடி.
- அவல் உடல் சூட்டை தணித்து நல்ல புத்துணர்ச்சியை தருகிறது.
- நீரிழிவு நோயாளிகள் பசிக்கும்போது கொஞ்சம் அவலை வாயில் போட்டு மென்று சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்:
அவல் - முக்கால் ஆழாக்கு
காய்ந்த மிளகாய் - 2
தேங்காய்த் துருவல் - 3 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
உளுத்தம் பருப்பு - அரை ஸ்பூன்
கடுகு - கால் ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1
முந்திரிப் பருப்பு - 4 உடைத்தது
செய்முறை
வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அவலை நன்றாகத் தண்ணீரில் களைந்து, ஒரு பாத்திரத்தில் நீர் விட்டு சில மணி நேரம் ஊறவைக்கவும். பின் நீரை ஒட்ட வடித்து விட வேண்டும்.
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு உளுத்தம் பருப்பு, கடுகு, மிளகாய் உடைத்த முந்திரி இவற்றைப் போட்டு வறுத்து பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
அடுத்து ஊற வைத்த அவலையும் போட்டு உப்பு சேர்த்து நன்றாகக் கிளறவும்.
பின்னர் துருவிய தேங்காயையும் சேர்க்கவும்.
இப்போது சுவையான அவல் உப்புமா ரெடி.
இந்த உப்புமாவை சர்க்கரையுடனோ அல்லது சட்னியுடனோ உண்டால் சுவை மிகுதியாக இருக்கும்.
அரிசி பொரி - 2 பெரிய கப்
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
உப்பு - 1 டீஸ்பூன்
வேர்க்கடலை - 1/4 கப்
எலுமிச்சம் பழம் - 1
தாளிக்க:
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
காய்ந்த மிளகாய் - 4
கறிவேப்பிலை - தேவைக்கு
கேரட் துருவல் - 1 டேபிள் ஸ்பூன்
பட்டாணி - சிறிதளவு
கொத்துமல்லித் தழை - சிறிது
செய்முறை :
தக்காளி, கொத்தமல்லி, வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
பட்டாணியை வேக வைத்து கொள்ளவும்.
ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீரை விட்டு அதில் பொரியைக் கொட்டவும். பொரி தண்ணீரில் போட்டவுடன் மிதக்கும். கைகளால் லேசாக அழுத்தி விட்டு ஐந்து நிமிடங்கள் ஊறவிடவும். பின்னர், இரண்டு கைகளாலும் பொரியை அள்ளி, நன்றாகப் பிழிந்து எடுத்து வேறொருப் பாத்திரத்தில் போட்டு வைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், காய்ந்த மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலைத் போட்டு தாளித்த பின் வெங்காயம், தக்காளியை போட்டு வதக்கவும்.
வெங்காயம், தக்காளி சற்று வதங்கியவுடன், அதில் உப்பு, மஞ்சள்தூள், வேக வைத்த பட்டாணியை சேர்த்து வதக்கி, உடனே அடுப்பை அணைத்து விடவும்.
பின் அதில் ஊறவைத்தப் பொரி, வேர்க்கடலை சேர்த்து நன்றாகக் கிளறவும்.
அடுத்து அதில் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து விட்டு ஒரு கிளறுக் கிளறி அதன் மேல் கேரட் துருவல், கொத்துமல்லித்தழைத் தூவி பரிமாறவும்.
சுவையான அரிசி பொரி உப்புமா ரெடி.
வேகவைத்த இட்லி - 7,
பச்சை மிளகாய் - 2,
நல்லெண்ணெய் - சிறிதளவு,
இஞ்சி - சிறிது துண்டு,
சீரகத்தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு,

செய்முறை :
கேரட், பீன்ஸை பொடியாக நறுக்கி, பச்சைப் பட்டாணியுடன் சிறிது உப்பு சேர்த்து வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.
இட்லியை நன்றாக உதிர்த்து வைத்து கொள்ளவும்.
ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் இஞ்சித்துண்டுகள், சீரகத்தூள், ப.மிளகாய் போட்டு தாளித்த பின்னர் வேகவைத்த கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி, கறிவேப்பிலை சேர்த்து, நன்றாக வதக்கவும்.
கடைசியாக உதிர்த்த இட்லியை சேர்த்துக் கிளறவும்.
இட்லி உப்புமா போல உதிர்ந்து வரும் போது அதன் மேல் கொத்தமல்லி இலைகளைத் தூவி இறக்கவும்.
வெஜிடபிள் இட்லி உப்புமா ரெடி.
சிவப்பு அவல் - 1 கப்,
கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தாளிக்க தேவையான அளவு,
நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு,
வெங்காயம் - 2
காய்ந்தமிளகாய் - 2,
கறிவேப்பிலை - சிறிது,

செய்முறை :
வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்.
அவலை சுத்தம் செய்து தண்ணீரில் ஊறவைக்கவும். ஊறியதும் பிழிந்தெடுத்துக் கொள்ளவும்.
கடாயில் நல்லெண்ணெயை விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்தமிளகாய், கறிவேப்பிலை தாளித்த பின்னர் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் அவல், உப்பு சேர்த்து, ஒரு கையளவு தண்ணீர் தெளித்து நன்றாக கிளறி, சிறு தீயில் வைத்து மூடி வைத்து வேக விடவும். 5 நிமிடத்தில் வெந்து விடும்.
தேங்காய்த்துருவல் தூவி பரிமாறவும்.
அவல் - 1 கப்
கேரட் - 2
பட்டாணி - 1/4 கப்
வறுத்த வேர்க்கடலை - 1 டேபிள் ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 3/4 டீஸ்பூன்
மல்லி தூள் - 1/4 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
உப்பு - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - 3/4 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை :
கேரட், வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
குக்கரை அடுப்பில் வைத்து, அதில் கேரட் மற்றும் பட்டாணியை சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து வேக வைத்து கொள்ளவும்.
பின்னர் அவலை நீரில் போட்டு, அவல் நீரில் மூழ்கும் வரை ஊற வைக்க வேண்டும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்த பின் அதில் வெங்காயம் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
அடுத்து அதில் வேக வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து, அத்துடன் மிளகாய் தூள், மல்லி தூள் மற்றும் உப்பு சேர்த்து, மசாலாப் பொருட்கள் காய்கறியுடன் சேருமாறு நன்கு கிளறி விட வேண்டும்.
பின் ஊற வைத்துள்ள அவலை பிழிந்து, நீரை முற்றிலும் வெளியேற்றிவிட்டு, வாணலியில் சேர்த்து நன்கு 2 நிமிடம் கிளறி, கொத்தமல்லி மற்றும் வேர்க்கடலையைத் தூவி ஒருமுறை பிரட்டி இறக்கி பரிமாறவும்.
சூப்பரான வெஜிடபிள் அவல் உப்புமா ரெடி!!!
மீல்மேக்கர் (சோயா சங்க்ஸ்) - ஒரு கப்
உருளைக்கிழங்கு - 2
எண்ணெய் - தேவைக்கேற்ப
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
சாட் மசாலாத் தூள் - 1 டீஸ்பூன்
மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்

செய்முறை :
மீல்மேக்கரை நன்றாக கழுவி வேக வைத்து, தண்ணீரை வடித்து விட்டு உதிர்த்து கொள்ளவும்.
உருளைக்கிழங்கை சதுரமான துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய்விட்டுக் காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்றாக குழைய வெந்ததும் உப்பு, மிளகுத்தூள், உருளைக்கிழங்கைச் சேர்த்து மேலும் வதக்கவும்.
உருளைக்கிழங்கு வெந்ததும், வேகவைத்த உதிர்த்து வைத்துள்ள மீல்மேக்கரை சேர்த்துக் கிளறவும்.
பரிமாறும் முன் சாட் மசாலாத்தூள், கொத்தமல்லித் தழை தூவிப் பரிமாறவும்.
ஓட்ஸ் - 1 கப்
வெங்காயம் - 1
ப.மிளகாய் - 1
கேரட் - 1
பீன்ஸ் - 10
பட்டாணி - சிறிதளவு
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
தாளிக்க
கடுகு - கால் டீஸ்பூன்
உளுந்தம் பருப்பு - அரை ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை :
ஒட்ஸை வெறும் கடாயில் போட்டு வறுத்து கொள்ளவும்
வெங்காயம், கேரட், பீன்ஸ், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வறுத்த ஓட்சில் உப்பு கலந்த நீர் தெளித்து புட்டு மாவு பிசைவது போல உதிரியாக பிசைந்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், ப.மிளகாய் போட்டு வதக்கவும்.
வெங்காயம் சற்று காய்கறிகள், பட்டாணியை சேர்த்து காய்கறிகள் வேக சிறிது தண்ணீர் சேர்த்து மூடி போட்டு வேக விடவும்.
காய்கறிகள் வெந்தவுடன் உதிராக பிசைந்த ஓட்ஸை போட்டு 5 நிமிடம் மூடி போட்டு வேக வைத்து இறக்கி பரிமாறவும்.
சத்தான ஓட்ஸ் காய்கறி உப்புமா ரெடி.
கேழ்வரகு மாவு - 1 கப்
கேரட் - 50 கிராம்
பீன்ஸ் - 50 கிராம்
உருளைகிழங்கு - 50 கிராம்
வெங்காயம் - 50 கிராம்
ப.மிளகாய் - 4
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
தாளிக்க :
கடுகு, உளுந்தம்பருப்பு, எண்ணெய்.

செய்முறை :
கேழ்வரகு மாவை வெறும் கடாயில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து கொள்ளவும்.
வெங்காயம், ப.மிளகாய், கேரட், பீன்ஸ், கொத்தமல்லி, உருளைக்கிழங்கை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
அடுப்பில் கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை ப.மிளகாய் போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் காய்கறிகளை போட்டு சிறிது நேரம் வதக்கிய பின் சிறிது தண்ணீர் ஊற்றி அதில் உப்பு சேர்த்து காய்கறிகளை வேக வைக்கவும்.
காய்கறிகள் வெந்தவுடன் அதில் வறுத்த கேழ்வரகு மாவை சிறிது சிறிதாக கொட்டி கைவிடாமல் கிளற வேண்டும்.
தண்ணீர் வற்றி கொட்டியான பதம் வந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
கோதுமை பிரட் துண்டுகள் - 6
தக்காளி - 1
லெமன் ஜூஸ் - 2 மேஜைக்கரண்டி
தண்ணீர் - 100 மில்லி
மிளகாய் தூள் - சிறிதளவு
கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி,
கொத்தமல்லித்தழை - சிறிது
உப்பு - தேவையான அளவு
தாளிக்க
எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
உளுந்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - சிறிய துண்டு
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை
கோதுமை பிரட் துண்டுகளின் ஓரங்களை கட் பண்ணி எடுத்து விடவும். பிறகு பிரட்டை சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
தக்காளி, வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணைய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு போட்டு தாளித்த பின்னர் கறிவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமானதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்கு சுருள வதங்கியதும் அதனுடன் உப்பு, மிளகாய் தூள், கரம் மசாலா தூள், மற்றும் பிரட் துண்டுகளை சேர்த்து நன்கு கிளறவும்.
இறுதியில் லெமன் ஜூஸ், கொத்தமல்லித்தழையும் சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும்.
சுவையான கோதுமை பிரட் உப்புமா ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கேழ்வரகு ரவை - 1 கப்
வெங்காயம் - 1
ப.மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
பெருங்காயத்தூள் - சிறிதளவு
கடுகு, உளுந்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவைக்கு
தண்ணீர் - 2 கப்
கொத்தமல்லி - சிறிதளவு

செய்முறை :
வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்
ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் போட்டு தாளித்த பின்னர், வெங்காயம், ப.மிளகாய் போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கிய பின்னர் கேழ்வரகு ரவையை போட்டு 5 நிமிடங்கள் கிளறவும்.
அடுத்து அதில் உப்பு, கொதிக்க வைத்த தண்ணீரை ஊற்றி அடுப்பை மிதமான தீயில் வைத்து மூடி போட்டு வேக விடவும்.
கேழ்வரகு நன்றாக வெந்து உதிரியாக வந்தவுடன் கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பொரி - 2 கப்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
கேரட் - 3 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி
மஞ்சள் - ¼ டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
கடுகு - ½ தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
கடலை பருப்பு - 2 தேக்கரண்டி
வேர்க்கடலை - 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை :
வெங்காயம், ப.மிளகாய், கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பொரியை நன்கு அலசி ஒரு வடிகட்டியில் தண்ணீரை முற்றிலுமாக வடியும்படி வைக்கவும்.
கடாயில் எண்ணெய் சூடாக்கி, கடுகு போட்டு வெடித்ததும், உளுந்து, கடலைப்பருப்பு மற்றும் வேர்க்கடலை சேர்த்து குறைந்த தீயில் வறுக்கவும்.
அடுத்து அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கேரட், கறிவேப்பிலை சேர்த்து, வதக்கவும்.
அடுத்து மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கலந்து விடவும்.
கடைசியாக தண்ணீர் இல்லாமல் வடிந்த பொரியை சேர்த்து, மேலும் ஒரு நிமிடம் வதக்கி, இறக்கவும்.
எலுமிச்சம் பழ சாறு சேர்த்து கலந்து பரிமாறவும்..
சூப்பரான எளிதில் செய்யக்கூடிய பொரி உப்புமா ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.