search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    தோசை மீந்து விட்டதா... கவலைய விடுங்க.. சூப்பரான ரெசிபி செய்யலாம் வாங்க...
    X

    தோசை மீந்து விட்டதா... கவலைய விடுங்க.. சூப்பரான ரெசிபி செய்யலாம் வாங்க...

    • காலையில் செய்ய தோசை மீந்து விட்டால் மாலையில் இந்த ரெசிபியை செய்யலாம்.
    • 10 நிமிடத்தில் இந்த ரெசிபியை செய்து விடலாம். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

    தேவையான பொருட்கள்

    கல் தோசை - 4

    வெங்காயம் - 1

    தக்காளி - 1

    கறிவேப்பிலை - தேவைக்கு

    மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்

    தனி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

    கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்

    ப.மிளகாய் - 3

    கொத்தமல்லி - தேவைக்கு

    உப்பு - சுவைக்கு

    எண்ணெய் - 2 டீஸ்பூன்

    தாளிக்க

    கடுகு, உளுந்தம் பருப்பு - தலா 1 டீஸ்பூன்

    செய்முறை

    கல் தோசையை சிறிய துண்டுகளாக பிய்ந்து வைக்கவும்.

    தக்காளி, வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் ப.மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.

    அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

    அனைத்தும் நன்றாக வதங்கியதும் பிய்ந்து வைத்துள்ள தோசையை சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து கிளறவும்.

    மசாலாவுடன் தோசை நன்றாக சேர்ந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.

    இப்போது சூப்பரான தோசை உப்புமா ரெடி.

    Next Story
    ×