என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Upper House MP"
- அஜித்பவாரின் மனைவி சுனேத்ரா மட்டும் மனுதாக்கல் செய்து இருந்தார்.
- போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார்.
மும்பை:
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான பிரபுல் படேல் தனது மேல்சபை எம்.பி. பதவியை ராஜினாமா செய்து இருந்தார். இதனால் மராட்டியத்தில் ஒரே ஒரு இடம் காலியானது.
இந்த மேல்சபை எம்.பி. பதவிக்கு மராட்டிய துணை முதல்-மந்திரியும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான அஜித்பவாரின் மனைவி சுனேத்ரா மட்டும் மனுதாக்கல் செய்து இருந்தார்.
இந்த நிலையில் சுனேத்ரா பவார் மேல்சபை எம்.பி.யாக போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை மராட்டிய சட்டமன்ற செயலாளர் ஜிதேந்திர போலே தெரிவித்தார்.
- தொகுதி பங்கீட்டை இறுதி செய்து வேட்பாளர்கள் தேர்வில் தீவிரம் காட்ட 2 கட்சிகளும் முடிவு செய்துள்ளன.
- அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு 4 தொகுதிகளை ஒதுக்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெறுவது தொடர்பாக தே.மு.தி.க. இரண்டு கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளது. கடந்த 1-ந் தேதி அன்று அ.தி.மு.க. குழுவினர் விருகம்பாக்கத்தில் உள்ள விஜயகாந்தின் வீட்டுக்கு சென்று தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதாவை சந்தித்து முதல்கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
பின்னர் தே.மு.தி.க. நிர்வாகிகள் கடந்த 6-ந் தேதி ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு சென்று பேச்சு நடத்தினார்கள். இப்படி 2 கட்ட பேச்சு வார்த்தைகள் அடுத்தடுத்து நடைபெற்ற நிலையில் 3-வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெறாமல் இழுபறி நீடித்துக் கொண்டே செல்கிறது. 10 நாட்களாக அ.தி.மு.க.-தே.மு.தி.க. இடையே எந்தவித பேச்சுவார்த்தையும் நேரடியாக நடைபெறாத நிலையில் இரு தரப்பினரும் ரகசியமாக சந்தித்து பேசி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு வருகிற 20-ந் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. இதனால் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து வேட்பாளர்கள் தேர்வில் தீவிரம் காட்ட 2 கட்சிகளும் முடிவு செய்துள்ளன.
இது தொடர்பாக நேற்றே இரு தரப்பிலும் சந்தித்து பேச திட்டமிட்டிருந்தனர். ஆனால் நேற்று சந்திப்பு ஏதும் நடைபெறவில்லை. இந்த நிலையில் 2 கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளும் இன்று நேரில் சந்தித்து பேசி கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய முடிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக தே.மு.தி.க. நிர்வாகி ஒருவர் கூறும்போது, அ.தி.மு.க. தரப்பில் இன்று தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைக்கு மீண்டும் அழைப்பதாக கூறியுள்ளனர். எனவே இன்று தே.மு.தி.க. போட்டியிடும் தொகுதிகள் இறுதியாகும் என்று நம்புகிறோம் என்றார்.
அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு 4 தொகுதிகளை ஒதுக்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை தே.மு.தி.க.வும் ஏற்றுக் கொண்டதாக தெரிகிறது.
அதே நேரத்தில் மேல்சபை எம்.பி. பதவி கண்டிப்பாக வேண்டும் என்று தே.மு.தி.க. தரப்பில் கேட்கப்பட்டுள்ளது. இதில் தான் இழுபறி நீடிக்கிறது.
இதனால் தே.மு.தி.க.வுக்கு மேல்சபை எம்.பி. பதவி கிடைக்குமா? என்பது கேள்விக் குறியாக மாறி உள்ளது.
- பிரதமர் மோடி தனது எக்ஸ்தள பதிவில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
- சமூக சேவை மற்றும் கல்வியில் சிறந்த பங்களிப்பை கொடுத்தவர்.
புதுடெல்லி:
இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவி சுதா மேல்சபை எம்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவரை ஜனாதிபதி திரவுபதி முர்மு நியமித்து இருப்பதாக குறிப்பிட்டு தனது எக்ஸ் வலைதள பதிவில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மேலும் அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்தார். சமூக சேவை மற்றும் கல்வியில் சிறந்த பங்களிப்பை கொடுத்தவர் என்று புகழாரம் சூட்டி உள்ளார். அவரது பாராளுமன்ற பதவிக்காலம் பயனுள்ளதாக அமைய வாழ்த்துகள்.
மேல்சபை எம்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ள சுதா, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் மாமியார் ஆவார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்