என் மலர்
நீங்கள் தேடியது "US handcuffs"
- நாடு கடத்தும் விமானத்திற்கு பொறுப்பான விமான அதிகாரியே இறுதி முடிவு.
- கைவிலங்கிடப்பட்ட விவகாரம் தொடர்பாக அமெரிக்காவிடம், இந்தியா தனது வலுவான கவலைகளை பதிவு செய்துள்ளது.
இந்தியர்கள் கைவிலங்கிடப்பட்டு அழைத்து வரப்பட்ட விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் மத்திய அரசு பதில் அளித்துள்ளது.
அப்போது, பயணத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய நாடு கடத்தப்பட்டவர்களுக்கு கைவிலங்கிடுதல் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் என அமெரிக்கா தெரிவித்துள்ளதாக வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வரதன் சிங் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.
மேலும், " பெண்கள், சிறார்கள் விலங்கிடப்படுவதில்லை என்றாலும், நாடு கடத்தும் விமானத்திற்கு பொறுப்பான விமான அதிகாரியே இறுதி முடிவு.
கைவிலங்கிடப்பட்ட விவகாரம் தொடர்பாக அமெரிக்காவிடம், இந்தியா தனது வலுவான கவலைகளை பதிவு செய்துள்ளது.
அமெரிக்காவில் இருந்து இதுவரை மொத்தம் 388 இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்" என குறிப்பிட்டுள்ளார்.
ஏர் இந்தியா விமானி குழந்தைகளின் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து வைத்திருப்பதாக எழுந்த புகாரை தொடர்ந்து எப்.பி.ஐ. அதிகாரிகள் விமானி மீது நடவடிக்கை எடுத்தனர். #AirIndiaPilot
புதுடெல்லி:
அமெரிக்க நாட்டின் சட்டப்படி 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் ஆபாச படம், வீடியோ, ஓவியம் உள்ளிட்டவற்றை வைத்திருப்பது சட்ட விரோதம் ஆகும். அந்த குற்றத்தில் ஈடுபடுகிறவர்கள் மீது அங்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்தநிலையில், அங்கு ஏர் இந்தியா விமானி ஒருவர் குழந்தைகளின் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து வைத்திருப்பதாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக அவரை மத்திய புலனாய்வு படையினர் (எப்.பி.ஐ.) தங்கள் கண்காணிப்பு வளையத்தில் வைத்திருந்தனர். அவர் கடந்த 4-ந் தேதி டெல்லியில் இருந்து சான்பிரான்சிஸ்கோ நகருக்கு ஏர் இந்தியா விமானத்தை ஓட்டிச் சென்றார். அந்த விமானம் அங்கு தரையிறங்கியபோது, விமானியை எப்.பி.ஐ. அதிகாரிகள் கைவிலங்கிட்டு பிடித்துச் சென்றனர். அவரது பாஸ்போர்ட்டை கைப்பற்றினர். அவரது விசாவும் ரத்து செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். இதை பெயர் குறிப்பிட விரும்பாத ஏர் இந்தியா அதிகாரி ஒருவர் உறுதி செய்தார். #AirIndiaPilot