என் மலர்
நீங்கள் தேடியது "UTS mobile app"
- யு.டி.எஸ். செல்போன் செயலி தெற்கு ரெயில்வேயில் கடந்த 2015-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
- யு.டி.எஸ். செல்போன் செயலி பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாள்தோறும் உயர்ந்து வருகிறது.
சென்னை :
ரெயில் பயணிகள் முன்பதிவில்லாத ரெயில் டிக்கெட்டை பெற, டிக்கெட் கவுண்ட்டரில் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை இருந்து வந்தது. இதனால், பயணிகளின் நலன் கருதி எளிதாக டிக்கெட் எடுக்கும் வகையில், யு.டி.எஸ். செல்போன் செயலி தெற்கு ரெயில்வேயில் கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. பயணிகள் தங்களது ஸ்மார்ட் போனில் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து, முன்பதிவில்லாத டிக்கெட்டை எடுத்துக்கொள்ள முடியும்.
இதை பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாள்தோறும் உயர்ந்து வருகிறது. ஆனாலும், முக்கிய ரெயில் நிலையங்களில் இருந்து குறிப்பிட்ட தூரம் வரை மட்டுமே, இந்த செயலியை பயன்படுத்தி, முன்பதிவு இல்லாத டிக்கெட் எடுக்க முடியும். யு.டி.எஸ். செல்போன் செயலியிலும் சில ரெயில் நிலையங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டு இருந்தது. இதை கிராமப்புறங்களில் உள்ள ரெயில் நிலையங்களுக்கும் விரிவுபடுத்த பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில், தெற்கு ரெயில்வேயில் ஹால்ட் நிலையங்களில் யு.டி.எஸ். செல்போன் செயலியை பயன்படுத்தி, டிக்கெட் எடுக்கும் வசதி தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஹால்ட் நிலையம் என்பது கிராமப்புறத்தில் உள்ள ரெயில் நிலையம் ஆகும். இதற்கு முன்பாக கிராமப்புற ரெயில் நிலையங்களில், டிக்கெட்டை பயணிகளுக்கு முகவர்கள் நேரடியாக வழங்குவார்கள். தற்போது, யு.டி.எஸ். செல்போன் செயலி மூலமாக பயணிகள் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும்.
மேலும், இந்த செயலி மூலம் சீசன் டிக்கெட், நடைமேடை டிக்கெட், முன்பதிவில்லாத டிக்கெட் ஆகியவற்றையும் பெற்றுக்கொள்ளலாம்.
- R-Wallet ரீசார்ஜ் செய்யும்போது வழங்கப்பட்ட சலுகை, இப்போது டிக்கெட் எடுக்கும்போது வழங்கப்படுகிறது.
- டிக்கெட் வாங்குவோரை ஊக்குவிக்கும் விதமாக சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
R-Wallet என்பது UTS (முன்பதிவில்லா டிக்கெட் எடுக்கும் முறை) மொபைல் பயன்பாட்டில் உள்ள வாலட் அம்சமாகும்.
இது இந்திய ரெயில்வே பயணிகளுக்கு முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளை வாங்கவும், தானியங்கி டிக்கெட் விற்பனை இயந்திரங்களில் பணம் செலுத்தவும் வசதி செய்து தரப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், ரெயில் பயணிகள் R-Wallet பயன்படுத்தி UTS மொபைல் ஆப் அல்லது ATVM (தானியங்கி டிக்கெட் விற்பனை இயந்திரங்கள்) மூலம் டிக்கெட் எடுத்தால் 3% கேஷ்பேக் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு, R-Wallet ரீசார்ஜ் செய்யும்போது வழங்கப்பட்ட 3% சலுகை, இப்போது டிக்கெட் எடுக்கும்போது வழங்கப்படுகிறது.
டிக்கெட் பெறுவதற்காக நீண்ட வரிசையில் நிற்பதை தவிர்க்க, ஆப் மூலம் எளிதில் டிக்கெட் பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
UTS மொபைல் செயலியில் உள்ள R-Wallet அல்லது ATVM மூலம் டிக்கெட் வாங்குவோரை ஊக்குவிக்கும் விதமாக சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.