search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "UV Swaminatha Iyer"

    • அழியக் கிடந்த பழந்தமிழ் இலக்கியங்களை எல்லாம் அச்சிலேற்றியவர் உ.வே.சா.
    • தமிழுக்கு தந்த பங்களிப்பினால் ‘தமிழ்த்தாத்தா’ என்று நிலைத்துவிட்ட நீடுபுகழ்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறி இருப்பதாவது:-

    அழியக் கிடந்த பழந்தமிழ் இலக்கியங்களை எல்லாம் அச்சிலேற்றி, அழகிய நடையில் அவற்றுக்கு உரையும் எழுதி, தமிழுக்குத் தாம் தந்த பங்களிப்பினால் 'தமிழ்த்தாத்தா' என்று நிலைத்துவிட்ட நீடுபுகழ் உ.வே.சா பிறந்தநாளில் அவரது தமிழ்த் தொண்டைப் போற்றி வணங்குகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • உ.வே.சா நினைவைப் போற்றி, திக்கெட்டும் தமிழ் பரவ பணி செய்வோம்.
    • தமிழ் காக்கும் பணிக்கு நம்மை ஒப்படைத்துக்கொள்வோம்.

    சென்னை:

    தமிழ்த்தாத்தா டாக்டர் உ.வே.சாமிநாதையர் 169-வது பிறந்த நாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவு வருமாறு:-

    ஏடு தேடியலைந்து தமிழ்க் கருவூலங்களை அச்சிலேற்றி காலத்தால் அழியாதிருக்கும் கொடை செய்த 'தமிழ்த்தாத்தா' டாக்டர் உ.வே.சா பிறந்தநாள்.

    அவர் நினைவைப் போற்றி, திக்கெட்டும் தமிழ் பரவ பணி செய்வோம். தமிழ் காக்கும் பணிக்கு நம்மை ஒப்படைத்துக்கொள்வோம்.

    இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.

    ×