என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Uzhavar Uzhaippalar Party"
- 200 லட்சம் லிட்டர் பாமாயில் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்த புள்ளியை வெளியிட்டதாக தெரிய வருகிறது.
- தேங்காய்க்கு உரிய விலை கிடைக்காமல் நஷ்டம் ஏற்பட்டு கடனாளியாக உள்ளனர்.
பல்லடம் :
பாமாயில் இறக்குமதி ஒப்பந்தத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவர் செல்லமுத்து வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிப கழகம் சமீபத்தில் 200 லட்சம் லிட்டர் பாமாயில் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்த புள்ளியை வெளியிட்டதாக தெரிய வருகிறது.இது தென்னை விவசாயிகளுக்கு வேதனை அளிக்கிறது. தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான தென்னை விவசாயிகள் தேங்காய்க்கு உரிய விலை கிடைக்காமல் நஷ்டம் ஏற்பட்டு கடனாளியாக உள்ளனர். கொப்பரைக்கும் உரிய விலை கிடைப்பதில்லை.
எனவே நீண்ட காலமாக ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகிறோம். சமீபத்தில் கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய உணவுத்துறை அமைச்சர் ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இந்த நிலையில், நுகர் பொருள் வாணிபக் கழகத்தின் இந்த பாமாயில் ஒப்பந்த புள்ளி அறிவிப்பு விவசாயிகளுக்கு அதிர்ச்சி அளிக்கிறது. தென்னை விவசாயிகளை காப்பாற்றவும், உள்ளூர் வணிகத்தை ஊக்குவிக்ககவும், தமிழ்நாடு அரசு பாமாயில் இறக்குமதி ஒப்பந்த புள்ளியை ரத்து செய்து, ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தென்னை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் உரம், இடுபொருள்களுக்கு அரசு மானியம் வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு அதனால் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்படும்.
- குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து விடும் அபாயம் உள்ளது.
பல்லடம் :
பல்லடத்தில் உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து நிருபர்களிடம் கூறியதாவது:- பொன் விளையும் பூமி என்று அழைக்கப்படும் தஞ்சை டெல்டா பகுதியில், மத்திய அரசு நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டம் என்பது முட்டாள்தனமா னது. இந்த திட்டம் டெல்டா மாவட்டங்களை கடுமையாகப் பாதிப்பதுடன், உணவுப் பாதுகாப்பையும், விவசாயிகள் மற்றும் கிராம மக்களின் வாழ்வாதார த்தையும் பாதிக்கும்.
நிலக்கரி திட்டத்திற்கு சுரங்கம் அமைக்கும்போது அந்த பகுதியில் நிலத்தடி நீர் முற்றிலும் இல்லாமல் போய்விடும். சுமார் 40 கிலோ மீட்டர் சுற்று வட்டாரத்திற்கு நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு அதனால் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்படும். இதன்மூலம் அங்குள்ள அனைத்து விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் மற்றும் அவர்கள் சார்ந்த குடும்பங்கள் வாழ்வாதார த்தை இழந்து விடும் அபாயம் உள்ளது.எனவே நிலக்கரி சுரங்கத் திட்ட டெண்டரை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்யவேண்டும். இதற்கு தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகள் ஜாதி, மதம், அரசியல் கட்சி பேதம் இன்றி எந்தவிதமான தியாகத்தையும் செய்து,தஞ்சை வேளாண் மண்டலத்தை காப்போம். ஏற்கனவே தமிழ்நாடு அரசு கடந்த 2020-ம் ஆண்டு தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், கரூர் மற்றும் திருச்சி ஆகிய 8 மாவட்ட ங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவித்துள்ளது. இதன்படி பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டலத்தில், எந்த ஒரு புதிய திட்டத்தையும் அல்லது புதிய செயல்பா ட்டையும் மேற்கொள்ள க்கூடாது என்று மிகவும் தெளிவாக குறிப்பிடப்ப ட்டுள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் அனுமதியை பெறாமல் தன்னிச்சையாக மத்திய அரசு அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்த திட்டத்தை எதிர்த்து, தமிழ்நாடு அரசு ,மத்திய அரசுக்கு கடுமையாக அழுத்தம் அளிக்க வேண்டும். இல்லையெனில் விவசாயிகள், பொதுமக்க ளைத் திரட்டி, போரா ட்டங்கள் முன்னெடுக்க ப்படும்.விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில், ஆளுகின்ற பா.ஜ.க.அரசு விவசாயிகளுக்கு பயன் தரும் திட்டங்களை அறிவித்து நல்ல பெயர் எடுப்பதை விட்டுவிட்டு, இது போன்ற விவசாயிகளை பாதிக்கும் திட்டங்களை அறிவித்து ஏனோ கெட்ட பெயரை சம்பாதிக்கிறார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார். பேட்டியின் போது உழவர் உழைப்பாளர் கட்சி மாநில பொருளாளர் பாலசுப்பிரமணியம்,மாநில செயலாளர் சின்ன காளிபாளையம் ஈஸ்வரன், மாநில மகளிர் அணி செயலாளர் கே.சி.எம்.சங்கீத பிரியா, ஊடக பிரிவு செயலாளர் ஈஸ்வரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
- சிலிண்டர் ஒன்றுக்கு ரூ. 100 மானியம் அளிப்போம் என்ற வாக்குறுதி நிறைவேற்றாமல் உள்ளது.
- ஏழை, எளிய நடுத்தர மக்களின் பொருளாதார சுமை கூடும்.
பல்லடம் :
பல்லடத்தில் உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து நிருபர்களிடம் கூறியதாவது:- மத்திய அரசு தற்போது கியாஸ் சிலிண்டரின் விலையை உயர்த்தியிருப்பது ஏழை எளியவர்களை கடுமையாக பாதிக்கும். கியாஸ் சிலிண்டர் என்பது அனைத்து தரப்பு மக்களுக்கும் அத்தியாவசிய தேவையாக இருக்கிறது. கொரோனா காலத்திற்கு பின்னர் வேலைவாய்ப்புகள் குறைந்ததால் ஏழைகளின் குடும்ப சுமை அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் அத்தியாவசிய தேவைகளான சமையல் கியாஸ் விலை உயர்வு ஏழை, எளிய, மற்றும் நடுத்தர வர்க்கத்தினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
ஏற்கனவே தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியாக கியாஸ் சிலிண்டரின் விலையை குறைக்கும் வகையில் சிலிண்டர் ஒன்றுக்கு ரூ. 100 மானியம் அளிப்போம் என்று கொடுத்த வாக்குறுதியை இதுவரை நிறைவேற்றாமல் உள்ளது. இந்த நிலையில் மத்திய அரசு வீட்டு உபயோகத்திற்கான கியாஸ சிலிண்டரின் விலையை உயர்த்தியதால் ஏழை, எளிய நடுத்தர மக்களின் பொருளாதார சுமை கூடும். எனவே மத்திய அரசு உயர்த்தப்பட்டு இருக்கும் கியாஸ் சிலிண்டரின் விலையை திரும்ப பெற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
- நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகின்றன.
பல்லடம் :
பல்லடம், ஆனைமலையாறு- நல்லாறு திட்டம் குறித்து பிரதமரிடம் வலியுறுத்தப்பட்டது. உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து தகவல். இதுகுறித்து பல்லடத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது.
செஸ் ஒலிம்பியாட் போட்டியை துவக்கி வைக்க சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. அவரிடம் விவசாயிகளின்,தேங்காய் தக்காளி சின்ன வெங்காயம் உள்ளிட்ட விளைபொருட்களுக்கு, உரிய விலை கிடைக்காததால் கடும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். விவசாயிகள் அரும்பாடுபட்டு விளைவித்த ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள், மழையில் நனைந்து வீணாகின்றன. ஆனைமலை - நல்லாறு திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதனை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனு பிரதமரிடம் வழங்கப்பட்டது. கோரிக்கைகளை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் கூறினார்.
இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்த பா.ஜ.க.தலைவர் அண்ணாமலைக்கு நன்றி இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்