என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vaadivaasal"

    • இயக்குநர் வெற்றி மாறன் மற்றும் நடிகர் சூர்யா கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் வாடிவாசல்.
    • வாடிவாசல் படத்தின் இசை பணிகள் துவங்கிவிட்டதாக இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் அறிவித்து இருந்தார்.

    இயக்குநர் வெற்றி மாறன் மற்றும் நடிகர் சூர்யா கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் வாடிவாசல். இந்தப் படம் தொடர்பான அறிவிப்பு வெளியானது முதல், இப்படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சமீபத்தில், வாடிவாசல் படத்தின் இசை பணிகள் துவங்கிவிட்டதாக இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் அறிவித்து இருந்தார்.

    இந்த நிலையில், வாடிவாசல் திரைப்படம் குறித்த புதிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது. திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் வரும் ஜூலை மாதம் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் திரைப்படம் அடுத்தாண்டு கோடை விடுமுறையில் திரைப்படம் வெளியாகும் என தயாரிப்பாளர் தானு கூறியுள்ளார்.

    வாடிவாசல் திரைப்படம் ஜல்லிக்கட்டு சம்பந்தப்பட்ட கதையை கொண்டிருக்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. மேலும், இதற்காக சூர்யா சிறப்பு பயிற்சிகள் எடுத்து வருவதாகவும், படத்தில் பயன்படுத்துவதற்காக மாடு ஒன்றும் வாங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

    வாடிவாசல் திரைப்படத்தை கலைப்புலி எஸ் தானு தயாரிக்கிறார். இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்தப் படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்களை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

    • நடிகர் சூர்யா இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’ திரைப்படத்தில் நடிக்கிறார்.
    • இந்த படத்திற்காக மாடுபிடி வீரர்களுடன் சூர்யா பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது.

    நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் 'சூர்யா 42' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார். 3டி முறையில் உருவாகும் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு அண்மையில் நிறைவுற்றது.


    சூர்யா - வெற்றிமாறன்

    இதனிடையே இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் 'வாடிவாசல்' திரைப்படத்திலும் சூர்யா நடிக்கிறார். ஜல்லிக்கட்டை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்திற்காக மாடுபிடி வீரர்களுடன் சூர்யா பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ கடந்த சில மாதங்களுக்கு முன்பு படக்குழு வெளியிட்டது.

    சமீபத்தில் பாலா இயக்கும் 'வணங்கான்' படத்தில் நடித்து வந்த சூர்யா, சில காரணங்களால் படத்தில் இருந்து விலகினார். இதைத்தொடர்ந்து 'வாடிவாசல்' படத்தில் இருந்தும் சூர்யா விலக முடிவெடுத்துள்ளதாகவும் இந்த படம் கைவிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.


    வாடிவாசல்

    இந்நிலையில், இந்த வதந்திகள் உண்மை இல்லை என்று தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு விளக்கமளித்துள்ளார். சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது, "இது ஆதாரமற்ற வதந்திகள். மக்கள் தங்கள் பத்து நிமிட புகழுக்காக இது போன்ற வதந்திகளை பரப்புகின்றனர். யாரும் அதனை நம்ப வேண்டாம். படத்தின் ப்ரீ புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது" என்று கூறியுள்ளார்.

    • 2002 ஆம் ஆண்டு சூர்யா மற்றும் திரிஷா இணைந்து நடித்து வெளியான மௌனம் பேசியதே திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமாகினார் அமீர்.
    • வெற்றி மாறன் இயக்கத்தில் வெளிவந்த வட சென்னை திரைப்படத்தில் ராஜன் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் பதிந்தார்.

    2002 ஆம் ஆண்டு சூர்யா மற்றும் திரிஷா இணைந்து நடித்து வெளியான மௌனம் பேசியதே திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமாகினார் அமீர். அதைத் தொடர்ந்து ஜீவா நடிப்பில் வெளிவந்த ராம் திரைப்படத்தை இயக்கினார்.

    மேலும் 2007 ஆம் ஆண்டு நடிகர் கார்த்தியின் முதல் படமான பருத்தி வீரன் திரைப்படத்தை இயக்கினார். இப்படம் அமீருக்கு மிகப் பெரிய பேரும் புகழையும் சம்பாதித்து கொடுத்தது. அதைதொடர்ந்து சிலப் படங்களில் கவுரவ தோற்றத்திலும், முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடித்து வந்தார்.

    2009 ஆம் ஆண்டு வெளிவந்த யோகி திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். வெற்றி மாறன் இயக்கத்தில் வெளிவந்த வட சென்னை திரைப்படத்தில் ராஜன் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் பதிந்தார்.

    நேற்று வெளியான உயிர் தமிழுக்கு திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படம் மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. அப்படத்திற்கான கொடுத்த நேர்காணலில் வாடிவாசல் திரைப்படத்தின் சுவாரசிய தகவல்களை கூறியுள்ளார்.

    தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களுள் வெற்றிமாறன் தவிர்க்க முடியாதவர். அவர் அடுத்ததாக விடுதலை 2 படத்திற்கு பிறகு சூர்யா நடிப்பில் வாடிவாசல் என்ற படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தை குறித்து எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.

    சமீபத்தில் நடந்த நேர்காணலில் அமீர் கூறியதாவது " படத்தின் படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்கவுள்ளதாகவும். படம் திட்டமிட்ட படியே நடக்கும் எனவும், வெற்றிமாறன் விடுதலை பாகம் 2 வேலைகளில் பிசியாக இருப்பதால் அதை முடித்துவிட்டு வாடிவாசல் திரைப்படத்தை இயக்கவுள்ளார் என்றும் , முழுக்க முழுக்க ஹீரோவுடன் பயணிக்கும் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறேன், பல ஆண்டுகளுக்கு பிறகு சூர்யாவுடன் இணையும் தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்" என கூறியுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • வெற்றிமாறன் இயக்கத்தில் சமீபத்தில் விடுதலை 2 திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
    • அடுத்து வெற்றிமாறன் வாடிவாசல் திரைப்படத்தை இயக்குவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    நடிகர் சூர்யா அடுத்ததாக கார்த்தி சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா 44 திரைப்படத்தில் நடித்துள்ளார். தற்பொழுது ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

    அதை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் 'வாடிவாசல்' திரைப்படத்தில் சூர்யா நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ஜல்லிக்கட்டை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்திற்காக மாடுபிடி வீரர்களுடன் சூர்யா பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ கடந்த சில மாதங்களுக்கு முன்பு படக்குழு வெளியிட்டது.

    வெற்றிமாறன் இயக்கத்தில் சமீபத்தில் விடுதலை 2 திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதற்கு அடுத்து வெற்றிமாறன் வாடிவாசல் திரைப்படத்தை இயக்குவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. சூர்யாவும் 45 திரைப்படத்தை தொடர்ந்து இப்படத்தில் நடிக்கவுள்ளார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. திரைப்படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

    இந்நிலையில் திரைப்படம் மூன்று பாகங்களாக உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான கதை மற்றும் திரைக்கதையை வெற்றிமாறன் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது. இதைக்குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வரும் நிலையில் ‘வாடிவாசல்’ படம் குறித்த அப்டேட்டால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
    • தற்போது நடிகர் சூர்யா ஆர்.ஜே.பாலாஜி இயக்கி வரும் படத்தில் நடித்து வருகிறார்.

    இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் 'வாடிவாசல்' படத்தில் நடிகர் சூர்யா நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ஜல்லிக்கட்டை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்திற்காக மாடுபிடி வீரர்களுடன் சூர்யா பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவை கடந்த ஆண்டு படக்குழு வெளியிட்டது. இதனால் உடனே படப்பிடிப்பு பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படப்பிடிப்பு பணிகள் தொடங்கவில்லை.

    இந்த நிலையில், 'வாடிவாசல்' படத்தை தயாரிக்க உள்ள கலைப்புலி எஸ். தாணு எக்ஸ் தள பக்கத்தில், அகிலம் ஆராதிக்க 'வாடிவாசல்' திறக்கிறது என்று பதிவிட்டுள்ளார். இதனால் வாடிவாசல் படத்திற்கான படப்பிடிப்புகள் விரைவில் தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வரும் நிலையில் 'வாடிவாசல்' படம் குறித்த அப்டேட்டால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    'வாடிவாசல்' படத்தை தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறன் தனுசை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். தற்போது நடிகர் சூர்யா ஆர்.ஜே.பாலாஜி இயக்கி வரும் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வாடிவாசல் திரைப்படத்தை தானு தயாரிக்கிறார்.
    • வாடிவாசல் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.

    நடிகர் சூர்யா, இயக்குநர் வெற்றி மாறன் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் வாடிவாசல். இந்தப் படத்தை கலைப்புலி எஸ் தானுவின் வி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

    இந்தப் படத்தின் படப்பிடிப்புக்கு முந்தைய பணிகள் நடைபெற்று வருவதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வந்தன. இது குறித்து இயக்குநர் வெற்றி மாறன் கூறும் போது, படத்திற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்து வந்தார்.

    இந்த நிலையில், வாடிவாசல் படத்தின் பாடல்களுக்கு இசையமைக்கும் பணிகள் துவங்கிவிட்டதாக இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    அந்த பதிவில், வாடிவாசல் பாடல் இசையமைக்கும் பணிகள் தொடங்கின என்று குறிப்பிட்டுள்ளார். இத்துடன் வி கிரியேஷன்ஸ் மற்றும் நடிகர் சூர்யாவை டேக் செய்துள்ளார். மேலும், இயக்குநர் வெற்றி மாறனுடன் அவர் அமர்ந்து இருக்கும் புகைப்படத்தையும் இணைத்துள்ளார். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் வாடிவாசல் திரைப்படத்தின் அப்டேட் வெளியாகி இருப்பதை அடுத்து ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வாடிவாசல் திரைப்படத்தை கலைப்புலி எஸ் தானு தயாரிக்கிறார்.
    • இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.

    இயக்குநர் வெற்றி மாறன் மற்றும் நடிகர் சூர்யா கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் வாடிவாசல். இந்தப் படம் தொடர்பான அறிவிப்பு வெளியானது முதல், இதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து விட்டது. சமீபத்தில், வாடிவாசல் படத்தின் இசை பணிகள் துவங்கிவிட்டதாக இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் அறிவித்து இருந்தார்.

    இந்த நிலையில், வாடிவாசல் திரைப்படம் குறித்த புதிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி இந்தப் படத்தின் திரைக்கதை சார்ந்த பணிகள் இன்னும் முழுமை பெறவில்லை என்றும், இதன் காரணமாக படப்பிடிப்பு தொடங்க தாமதமாகி வருவதாக கூறப்படுகிறது.

    திரைக்கதை சார்ந்த பணிகள் முழுமை பெற்ற பிறகு, இந்த ஆண்டு இறுதியில் வாடிவாசல் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாடிவாசல் திரைப்படம் ஜல்லிக்கட்டு சம்பந்தப்பட்ட கதையை கொண்டிருக்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. மேலும், இதற்காக சூர்யா சிறப்பு பயிற்சிகள் எடுத்து வருவதாகவும், படத்தில் பயன்படுத்துவதற்காக மாடு ஒன்றும் வாங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

    வாடிவாசல் திரைப்படத்தை கலைப்புலி எஸ் தானு தயாரிக்கிறார். இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்தப் படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்களை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் வாடிவாசல்.
    • இப்படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கிறார்.

    வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் வாடிவாசல். வி.கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இப்படம் ஜல்லிக்கட்டு விளையாட்டை மையமாக வைத்து தயாராக உள்ளது. இந்த படத்தில் நடிகர் சூர்யா தந்தை, மகன் என இருவேடங்களில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.


    வாடிவாசல் 

    இப்படம் சி.சு. செல்லப்பா எழுதிய 'வாடிவாசல்' நாவலை மையமாக வைத்து உருவாகவுள்ளது. இந்நிலையில் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு 'வாடிவாசல்' படத்தின் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், நடிகர் சூர்யா படத்திற்காக தன்னை தயார் படுத்திக்கொள்ள, மாடுபிடி வீரர்களுடன் பயிற்சி மேற்கொள்கிறார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

    மேலும் இந்த வீடியோவில், "சூர்யா மாடு பிடி வீரர்களிடமிருந்து ஏறுதழுவலின் நுட்பங்களை பயின்றபோது படம் பிடிக்கப்பட்ட காட்சிகளின் தொகுப்பு. வாடி வாசல் திரைப்படத்தின் முன்னோட்டம் அல்ல" என்று படக்குழு குறிப்பிட்டுள்ளது.



    ×