என் மலர்
நீங்கள் தேடியது "Vada Chennai"
- தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான வடசென்னை திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
- இப்படத்தின் இடண்டாம் பாகம் குறித்த அப்டேட்டை சந்தோஷ் நாராயணன் கொடுத்துள்ளார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் 2018ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் வடசென்னை. தனுஷ், அமீர், சமுத்திரக்கனி, கிஷோர், டேனியல் பாலாஜி, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருந்த இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். திரையரங்கில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

வடசென்னை
இதில் அமீர் நடித்திருந்த ராஜன் கதாப்பாத்திரம் பலரின் பாராட்டுக்களை பெற்றது. மேலும் ராஜன் கதாப்பாத்திரத்தை தனி படமாக வெளியிட வேண்டும் என்றும் ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது. அதேபோல் இப்படத்தின் இரண்டாம் பாகம் வரவேண்டும் என்றும் பலரின் கோரிக்கையாக உள்ளது.

வடசென்னை
இந்நிலையில் 'வடசென்னை' படம் குறித்து இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் சமீபத்திய பேட்டியில் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், 'வடசென்னை' படத்தில் அமீரின் ராஜன் கதாபாத்திரத்தை மட்டும் வைத்து 'ராஜன் வகையறா' என்ற படத்தை வெற்றிமாறன் தயாராக வைத்துள்ளார். 2 மணி நேரத்திற்கும் மேலாக இருக்கும் இந்த படத்தை தயவு செய்து வெற்றிமாறன் ரிலீஸ் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்த படம் ரிலீஸ் ஆனால் தமிழ் சினிமாவின் சிறந்த படங்களில் ஒன்றாக இருக்கும் என்று கூறினார்.
- தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான வடசென்னை திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
- இப்படத்தின் இடண்டாம் பாகம் குறித்து இயக்குனர் வெற்றிமாறன் பேசியுள்ளார்.
பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசூரன், விடுதலை உள்ளிட்ட படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்தவர் இயக்குனர் வெற்றிமாறன். இவர் இயக்கத்தில் 2018ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் வடசென்னை. இதில் தனுஷ், அமீர், சமுத்திரக்கனி, கிஷோர், டேனியல் பாலாஜி, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருந்த இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.

திரையரங்கில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் அமீர் நடித்திருந்த ராஜன் கதாப்பாத்திரம் பலரின் பாராட்டுக்களை பெற்றது. மேலும் ராஜன் கதாப்பாத்திரத்தை தனி படமாக வெளியிட வேண்டும் என்று ரசிகர்களின் விருப்பமாக இன்றுவரை இருக்கிறது. அதேபோல் இப்படத்தின் இரண்டாம் பாகம் வரவேண்டும் என்றும் பலரின் கோரிக்கையாக உள்ளது.

இந்நிலையில் தமிழ்த் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் விழாவில் கலந்து கொண்ட வெற்றிமாறன், வடசென்னை 2 படம் குறித்து பேசியுள்ளார். அதில், தற்போது விடுதலை 2ஆம் பாகத்திற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது. அதன் பிறகு வாடிவாசல் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. அதன்பின் வடசென்னை 2 ஆம் பாகத்தை இயக்குவேன் என்று உறுதியளித்தார். இந்த அறிவிப்பு வடசென்னை 2 படத்தை எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.
- கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’வட சென்னை’.
- இப்படத்தை வெற்றிமாறன் இயக்கியிருந்தார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'வட சென்னை'. இந்த படத்தில் தனுஷ், இயக்குனர் அமீர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். தனுஷ் தயாரிந்திருந்த இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.

வட சென்னை பகுதியில் உள்ள மக்களை மையமாக வைத்து உருவான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமல்லாமல் இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், 'வட சென்னை' திரைப்படம் வெளியாகி 5 ஆண்டுகள் நிறைவு செய்ய உள்ள நிலையில், சென்னை கமலா திரையரங்கில் வரும் 12-ஆம் தேதி முதல் நான்கு நாட்களுக்கு மாலை மற்றும் இரவு காட்சிகள் திரையிடப்பட உள்ளதாகவும் இதுவரை இப்படத்திற்காக 4,150 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில் மொத்தம் 5 அலகுகள் உள்ளன.
- ஒப்பந்த ஊழியர்களுக்கு 3 மாதமாக ஊதியம் வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
பொன்னேரி:
சென்னையில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மீஞ்சூரை அடுத்த காட்டுப்பள்ளியில் கடந்த 2010-ம் ஆண்டு ரூ.600 கோடி செலவில் கடல் நீரை குடிநீராக்கும் ஆலை தொடங்கப்பட்டது. இங்கிருந்து மணலி, மாதவரம், புழல் உள்ளிட்ட வடசென்னை பகுதிகளுக்கு தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.
இந்த கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில் மொத்தம் 5 அலகுகள் உள்ளன. இதில் மொத்தம் 100 மில்லியன் லிட்டர் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு வந்தது. இதில் 3 அலகுகள் பழுதான நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக 2 அலகுகள் மட்டுமே செயல்பட்டு குடிநீரை உற்பத்தி செய்து வந்தது. இதனால் வடசென்னை பகுதிக்கு ஆலையில் இருந்து குறைவான அளவே கடல் நீர் சுத்திகரிக்கப்பட்டு அனுப்பப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் முதல் செயல்பட்டு வந்த மற்ற 2 அலகுகளிலும் எந்திரம் பழுதால் தண்ணீர் சுத்திகரிப்பு முழுவதும் நின்று போனது. கடந்த 4 மாதங்களாக அங்கு எந்த பணியும் நடைபெற வில்லை என்று தெரிகிறது. மேலும் ஒப்பந்த ஊழியர்களுக்கு 3 மாதமாக ஊதியம் வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

பழுதான எந்திரத்தில் மின் மோட்டார் பழுது, கார்பன் பில்டர் மைக்ரோ பில்டர், குழாய் உடைப்பு உளிட்ட பழுதுகளை சரி செய்ய போதிய பொருட்கள் இல்லாமலும் அதனை மாற்ற உடியாக நடவடிக்கை எடுக்காததே தண்ணீர் உற்பத்தி முழுமையாக நின்றதற்கு காரணம் என்று அங்குள்ள ஊழியர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
காட்டுப்பள்ளி கடல்நீராக்கும் ஆலை பழுதால் கடந்த 4 மாதங்களாக வடசென்னை பகுதிக்கு முற்றிலும் அங்கிருந்த குடிநீர் அனுப்பப்படாமல் உள்ளது. இதனை சமாளிக்கும் வகையில் தற்போது புழல் ஏரியிலிருந்து குடிநீர் சுத்திகரிக்கப்பட்டு அனுப்பப்பட்டு வருகிறது. கோடை காலம் தொடங்க உள்ள நிலையில் தண்ணீர் தேவை அதிகரிக்கும் போது வடசென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே அதிகாரிகள் காட்டுப்பள்ளியில் உள்ள கடல் நீரை குடிநீராக்கும் ஆலையில் உள்ள எந்திர பழுதுகளை சரி செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.












