என் மலர்
நீங்கள் தேடியது "vadachery"
நாகர்கோவில்:
வடசேரி கருத்த விநாயகர்கோவில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 25). அவரது நண்பர் மணிகண்டன் (36). இவர் கிருஷ்ணன்கோவில் பகுதியை சேர்ந்தவர்.
இரண்டுபேருக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் இருந்துவந்தது. இந்த நிலையில் மணிகண்டன் தனது நண்பர் சுரேசிடம் பணம் கொடுத்திருந்தார். அவற்றை திருப்பி கேட்டார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
இந்த நிலையில் நேற்று காலையில் சுரேஷ் குளிப்பதற்காக வீட்டில் இருந்து ஒழுகினசேரி சுடுகாடு வழியாக நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மணிகண்டன் தனது நண்பர் சுரேசை வழிமறித்து பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதில் அவர்களுக்குள் தகராறு முற்றியது. ஆத்திரம் அடைந்த மணிகண்டன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சுரேசை வெட்ட முயன்றர். இதில் சுதாரித்துக் கொண்ட அவர் விலகினார். மேலும் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்து வடசேரி போலீசில் சுரேஷ் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பெர்னார்ட் சேவியர், சிறப்பு சப்-இன்ஸ் பெக்டர் சாம்ஜி ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு நண்பனை வெட்டி கொல்ல முயன்ற மணிகண்டனை கைது செய்தனர்.
மேலும் கைது செய்து செய்யப்பட்ட மணிகண்டன் 2009-ம் ஆண்டு வடசேரி பகுதியில் நடந்த ஒரு கொலை வழக்கிலும் கைது செய்யப்பட்டவர் என்பது செய்யப்பட்டது குறிப்பிடத் தக்கது.