search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vadipatti area"

    வாடிப்பட்டி பகுதியில் மதுரை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் விபத்தை குறைப்பது குறித்து போலீஸ் டிஎஸ்பி தலைமையில் ஆய்வு நடந்தது.
    வாடிப்பட்டி:

    வாடிப்பட்டி பகுதியில் மதுரை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி வாகன விபத்து ஏற்படுகிறது. மாவட்ட எல்லையான பாண்டியராஜபுரம் தொடங்கி சமயநல்லூர் காவல் சரகத்திற்குட்பட்ட சாணாம்பட்டி பிரிவு, பழனியாண்டவர் கோவில் பிரிவு, விராலிப்பட்டி விலக்கு, வாடிப்பட்டி பிரிவு, ஆண்டிபட்டி சோழவந்தான் பிரிவு, தனிச்சியம்பிரிவு, நகரி, கட்டப்புளிநகர், துவரிமான் பிரிவு, புதுக்குளம்பிரிவு, சீனிவாசாநகர், மொட்ட மலை வரை 40 கி.மீ. தூரத்திற்கு விபத்தை குறைக்க மற்றும் அதனை தடுக்க தேவையான வழிமுறைகள் குறித்து சமயநல்லூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மோகன்குமார் தலைமையில் ஆய்வு நடந்தது.

    இதில் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் ராஜமகேந்திரன், தேசிய நெடுஞ்சாலை பொறியாளர் அருண்குமார், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பாலசுப்பிரமணியன், ரெஜினா, முத்துபாண்டி, முத்து, சப்-இன்ஸ்பெக்டர் விஜயராம் ஆகியோர் பங்கேற்றனர்.

    அப்போது பொதுமக்கள் சாலையை அதிகம் கடக்கும் இடங்களில் பேரிகாடு, வெள்ளைகோடுகள் வரைவது, இரவு நேரங்களில் மிளிரும் ஒளிவிளக்குகள் அமைப்பது பற்றி ஆய்வு செய்யப்பட்டது. மேலும் அதற்கான இடத்தினை தேர்வு செய்து நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது. #tamilnews
    ×