search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vadivudai amman temple"

    திருவொற்றியூரில் பழமை வாய்ந்த தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு தெப்பத்திருவிழா நடைபெற்றது.
    திருவொற்றியூரில் பழமை வாய்ந்த தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில் 2 ஆயிரம் ஆண்டுகள் பிரசித்தி பெற்றது. இக்கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச தினத்தன்று கோவில் வெளியே உள்ள ஆதிஷேச தீர்த்த குளத்தில், தெப்பத் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டு வெளிக்குளத்தில் தண்ணீர் இல்லாததால் தைப்பூச தெப்பத்திருவிழா கோவிலுக்குள் உள்ள பிரம்ம தீர்த்த குளத்தில் நிலை தெப்பத்திருவிழாவாக நடத்த முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி, பிரம்ம தீர்த்த குளத்தில் மேடை அமைக்கப்பட்டு, தெப்பம் வடிவமைக்கப்பட்டது. இதனை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை, தியாகராஜருக்கு அபிஷேகம் நடைபெற்றது. இரவு மங்கள வாத்தியங்கள் முழங்க கோவில் வளாகத்தில் உலா வந்த சந்திரசேகர் உடனுறை வடிவுடையம்மன், நிலை தெப்பத்தில் எழுந்தருளினார்.

    இதையொட்டி உற்சவருக்கு தீபஆராதனைகள், உபசாரங்கள், நடைபெற்றன. நிறைவாக, மங்கல வாத்தியங்கள் முழுங்க, தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.

    பக்தர்கள் பக்தி பரவசத்தில் நமச்சிவாயா ஒற்றீஸ்வரா என முழங்கினர். இரவு தியாகராஜர் திருநடனம், மாடவீதி உற்சவத்துடன், விழா நிறைவடைந்தது.
    ×