search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Valmiki Corporation Scam"

    • நாகேந்திரா மீது 18 கிரிமினல் வழக்குள் உள்ளதாக ஜனார்த்தன ரெட்டி விமர்சனம்.
    • 100 வழக்குகள் உள்ளவர்கள் முதல்வரான சம்பவம் நடந்துள்ளதாக நாகேந்திரா பதிலடி.

    கர்நாடக மாநில மந்திரியாக இருந்தவர் நாகேந்திரா. வால்மீகி கார்ப்பரேசன் மோசடி வழக்கில், மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். இந்த வழக்கில் சிறைக்குச் சென்ற அவர் நேற்று ஜாமினில் விடுதலையானார். ஜாமினில வெளியே வந்த நாகேந்திரா, தனக்கு கர்நாடக மாநில முதல்வராகும் தகுதி உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

    நாகேந்திரா மீது 18 கிரிமினல் வழக்குகள் இருப்பதாக ஜனார்த்தன ரெட்டி எம்.எல்.ஏ. கூறியிருந்த நிலையில் "100 கிரிமினல் வழக்குகள் உள்ளவர் முதலமைச்சராகிய சம்பவம் உள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

    89.63 கோடி ரூபாய் மோசடி குற்றச்சாட்டு காரணமாக நாகேந்திரா தனது பழங்குடியினர் நலத்துறை மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். அமலாக்கத்துறை அவரை கைது செய்த நிலையில் சுமார் மூன்றரை மாதங்கள் கழித்து நேற்று ஜாமினில் வெளியே வந்தார்.

    தன்மீது உள்ள குற்றச்சாட்டுகள் குறித்து நாகேந்திரா கூறுகையில் "வெறும் 18 வழக்குகள் அல்ல. 100 வழக்குகள் உள்ளவர்கள் முதல்வராகி இருக்கிறாரக்ள். வரும் நாட்களில் எனக்கும் சிறப்பான எதிர்காலம் உள்ளது. நான் காங்கிரசுக்காக அர்ப்பணிப்புடன் உழைத்தால், நான் ஏன் முதலமைச்சராக ஆகக்கூடாது?. என்னைப் போன்ற சாதாரண உழைப்பாளியை காங்கிரஸ் அமைச்சராக்கவில்லையா? சாதாரணவர்களையும் கவுரவிக்கும் பாரம்பரியம் காங்கிரசுக்கு உண்டு" என்றார்.

    • மோசடி தொடர்பாக இதுவரை 11 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
    • நாகேந்திரன் மற்றும் பசனகவுடா தாடால் ஆகியோரிடமும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    பெங்களூரு:

    பெங்களூருவில் கர்நாடகா மகரிஷி வால்மீகி பழங்குடியின வளர்ச்சி வாரியம் செயல்பட்டு வருகிறது. இங்கு பணியாற்றிய அக்கவுண்ட் சூப்பிரண்டு சந்திரசேகரன் (52) என்பவர் கடந்த மே மாதம் 26-ந்தேதி தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில் மாநகராட்சி வங்கி கணக்கில் இருப்பு வைக்கப்பட்டு இருந்த கர்நாடக வால்மீகி வளர்ச்சிக்கழகத்தின் நிதி தொகை ஊழல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்து இருந்தார்.

    இதனை தொடர்ந்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை, பழங்குடியினர் நலத்துறை அமைச்சராக இருந்த நாகேந்திரன் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். இதுதொடர்பாக நடந்த விசாரணையில் ஐதராபாத்தை சேர்ந்த முதல் நிதிக் கடன் கூட்டுறவு சங்கத்தின் வங்கி கணக்குகளுக்கு மாநகராட்சி கணக்கில் இருந்து முறைகேடாக பணம் மாற்றப்பட்டதும் பின்னர் அங்கிருந்து வெவ்வேறு கணக்குகளுக்கு மாற்றி பணத்தை எடுத்துள்ளதும் தெரியவந்தது. இந்த மோசடி தொடர்பாக இதுவரை 11 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    இந்த முறைகேட்டில் பழங்குடியினர் நலத்துறை அமைச்சராக இருந்த நாகேந்திரன் மற்றும் ராய்ச்சூர் ஊரக சட்டசபை தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும், மாநில மகரிஷி வால்மீகி நிகாம் தலைவருமான பசனகவுடா தாடால் என்பவருக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்தது. இதையடுத்து நாகேந்திரன் மற்றும் பசனகவுடா தாடால் ஆகியோரிடமும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும் 20-க்கும் மேற்பட்ட இடங்களிலும் சோதனை நடத்தினர்.

    இந்த நிலையில் பெங்களூரு சதாசிவ நகரில் உள்ள டாலர்ஸ் காலனி வீட்டில் இருந்த முன்னாள் அமைச்சரும், பெல்லாரி ஊரக சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான நாகேந்திரனை அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை கைது செய்து அழைத்து சென்றனர். அப்போது நாகேந்திரனிடம் ரூ.187 கோடி ஊழல் தொடர்பான பல்வேறு கேள்விகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்வைத்தனர். தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. ஊழல் குற்றச்சாட்டில் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்ட சம்பவம் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • சட்ட விரோதமாக பண பரிமாற்றம் செய்த வழக்கில் இதுவரை 11 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
    • முறைகேடு செய்த பணத்தில் வாங்கிய தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    பெங்களூரு:

    பெங்களூர் வசந்த்நகரில் கர்நாடகா மகரிஷி வால்மீகி பழங்குடியின வளர்ச்சி வாரியம் செயல்படுகிறது. இந்த கழகத்தின் அக்கவுண்ட் சூப்பிரண்டு சந்திரசேகரன் (வயது 52) என்பவர் கடந்த மே மாதம் 26-ந்தேதி ஷிமோகாவில் உள்ள வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில் மாநகராட்சி வங்கி கணக்கில் இருப்பு வைக்கப்பட்டு இருந்த கர்நாடக வால்மீகி வளர்ச்சிக்கழகத்தின் நிதி தொகை ரூ.94.97 கோடி ஊழல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்து இருந்தார்.

    இதனை தொடர்ந்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுதறை, பழங்குடியினர் நலத்துறை மந்திரியாக இருந்த நாகேந்திரன் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து இந்த ஊழல் வழக்கை கர்நாடக மாநில அரசு சிறப்பு புலனாய்வுப் பிரிவுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது.

    ரூ.94.97 கோடி பணம் ஐதராபாத்தை சேர்ந்த முதல் நிதிக் கடன் கூட்டுறவு சங்கத்தின் வங்கி கணக்குகளுக்கு மாநகராட்சி கணக்கில் இருந்து முறைகேடாக மாற்றப்பட்டது. பின்னர் அங்கிருந்து வெவ்வேறு கணக்குகளுக்கு மாற்றி பணத்தை எடுத்துள்ளனர் என்பது தெரியவந்தது.

    இந்த கணக்கில் இருந்து சட்ட விரோதமாக பண பரிமாற்றம் செய்த வழக்கில் இதுவரை 11 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் முறைகேடு செய்த பணத்தில் வாங்கிய தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    இந்த முறைகேட்டில் பழங்குடியினர் நலத்துறை அமைச்சராக இருந்த நாகேந்திரன் மற்றும் ராய்ச்சூர் ஊரக சட்டசபை தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும், மாநில மகரிஷி வால்மீகி நிகாம் தலைவருமான பசனகவுடா தாடால் என்பவருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. பண பரிமாற்ற வழக்கில் இருவரின் பங்கு குறித்து விசாரணை நடத்துவதற்காக கடந்த 5-ந்தேதி நோட்டீசு அனுப்பிய சிறப்பு புலனாய்வுப் பிரிவு விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டது.

    இதையடுத்து ஆஜரான நாகேந்திரன், பசனகவுடா தாடால் ஆகியோரிடம் சிறப்பு புலனாய்வுப் பிரிவு தலைவர் மணீஷ் கர்பிகர் தலைமையில் விசாரணை நடத்தி பல்வேறு கேள்விகள் கேட்டு வாக்குமூலம் பதிவு செய்தனர். இருவரின் வாக்குமூலம் வீடியோ பதிவு செய்யப்பட்டது.

    இது ஒருபுறம் இருக்க மறுபுறம் இந்த சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை சார்பாக ஆஷாபூர் சாலை 2-வது வார்டு ராம் ரஹீம் காலனியில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. 3 அதிகாரிகள் தலைமையில் 2 குழுக்கள் நடத்திய சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த ஆவணங்கள் சரிபார்ப்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    மேலும் இது தொடர்பாக காங்கிரஸ் எம்.எல்.ஏ. பசனகவுடா தாடாவிடமும் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×