search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Valparai girl harassment"

    கோவை மாவட்டம் வால்பாறையில் 7வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 12-ம் வகுப்பு மாணவனை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
    கோவை:

    கோவை மாவட்டம் வால்பாறையை சேர்ந்த கூலித் தொழிலாளியின் 7 வயது மகள் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    சம்பவத்தன்று சிறுமியின் தாய் அந்த பகுதியில் உள்ள கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக சென்றார். அப்போது சிறுமி வீட்டில் இருந்தார். திரும்பி வந்து பார்த்த போது சிறுமி மாயமாகி இருந்தார்.

    இதனையடுத்து அவரது தாயார் அவரை அக்கம் பக்கத்தில் தேடினார். அப்போது எதிரே உள்ள வீட்டின் கதவை தட்டினார். கதவு உள்பக்கமாக பூட்டி இருந்தது. சிறிது நேரத்துக்கு பின்னர் அந்த வீட்டில் வசிக்கும் 12-ம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுவன் கதவை திறந்தான்.

    அப்போது வீட்டில் உள்ள இரும்பு கட்டில் அடியில் இருந்து சிறுமி அழுது கொண்டே வெளியே ஓடி வந்தார். இதனை பார்த்து சிறுமியின் தாய் அதிர்ச்சியடைந்தார்.

    சிறுமியிடம் விசாரித்த போது சிறுமிக்கு 12-ம் வகுப்பு மாணவன் பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது.

    இது குறித்து சிறுமியின் தாய் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 12-ம் வகுப்பு மாணவனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.
    ×