search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "van collision"

    • பெரியதம்பி அதே பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார்.
    • வேன் இவர்களது மோட்டார் சைக்கிளில் வேகமாக மோதியது.

    விழுப்புரம்:

    மயிலம் கீழ்எடையாலம் பகுதியை சேர்ந்தவர் பெரியதம்பி. இவரது மனைவி செல்வமணி (வயது 50) பெரியதம்பி அதே பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை பெரியதம்பி தனது மோட்டார் சைக்கிளில் மனைவி செல்வமணியுடன் கீழ்எடையாலம் பகுதியில் இருந்து கூட்டேரிபட்டிற்கு கடைக்கு தேவையான பல சரக்கு வாங்குவதற்கு சென்றனர். 

    இதனை யடுத்து பலசரக்கு வாங்கி விட்டு மோட்டார் சைக்கிளில் கூட்டேரிபட்டி லிருந்து கீழ்எடையாலத்திற்கு வந்தனர். அப்போது திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலை யில் வந்த போது பின்னால் வந்த வேன் இவர்களது மோட்டார் சைக்கிளில் வேகமாக மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கி ளிலிருந்து தூக்கி வீசப்பட்ட பெரியதம்பி, இவரது மனைவி செல்வமணியை அருகில் இருந்த வர்கள் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அப்போது 108 ஆம்புலன்சில் செல்லும் வழியிலே செல்வமணி பரிதாப மாக உயிர் இழந்தார். விபத்தில் படுகாயம் அடைந்த பெரிய தம்பிக்கு முண்டி யம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த மயிலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் இறந்த செல்வமணியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அதே ஆஸ்பத்திரியில் போலீசார் சேர்த்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வேன் மோதி முதியவர் பலியானார்.
    • வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    கிருஷ்ணாபுரம் காலனி முதல் தெருவை சேர்ந்தவர் ராமதாஸ் (வயது 62). இவர் தெற்குவெளிவீதி தவிட்டு சந்தை அருகே சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக சென்ற வேன் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இந்த விபத்து குறித்து ராமதாசின் மகன் அரவிந்தகுமார், போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசில் புகார் செய்தார்.

    போலீசார், வேன் டிரைவர் மேல சக்குடியைச் சேர்ந்த கருப்பசாமி மகன் அருண்குமார் (20) மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வேன் முருகன் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அடுத்த பி.மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 62) சப்போட்டா பழ வியாபாரி.

    இவர் நேற்று இரவு அந்தியூரில் வேலையை முடித்துக் கொண்டு ஆப்பக்கூடல் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

    அப்போது எதிரில் ஒரு வேன் வந்தது. அந்த வேன் எதிர்பாராதவிதமாக முருகன் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் முருகன் தூக்கி வீசப்பட்டு தலையில் அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவர் செல்போன் மூலம் அவரது மகன் பிரகாஷ் என்பவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    உடனடியாக அவர் சம்பவ இடத்திற்கு வந்து முருகன் உடலை பார்த்து கதறி அழுதார். இதை தொடர்ந்து அவரது உடலை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

    இது குறித்து அந்தியூர் சப் -இன்ஸ்பெக்டர் கார்த்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

    • 3 பேர் காயம்
    • போலீசார் விசாரணை

    செய்யாறு:

    செய்யாறு டவுன், டி.எஸ்.பழனிவேல் தெருவை சேர்ந்தவர் நரசிம்மன் (வயது 74). ஓய்வு பெற்ற கோர்ட்டு ஊழியர்.

    அதே பகுதியில் வசிக்கும் 12 நபர்களுடன் வேனில் அறுபடைவீடு முருகன் கோவிலுக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் சென்று விட்டு அதிகாலை 3.30 மணி அளவில் வந்தவாசி சாலையில் குளமந்தை பஸ் ஸ்டாப் அருகே வந்துகொண்டிருந்தனர்.

    அப்போது டிரைவர் தூக்க கலக்கத்தில் சாலை ஓர பனைமரத்தில் வேன் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் முன் சீட்டில் இருந்த நரசிம்மன் கண்ணாடி உடைந்து கீழே விழுந்து, பலத்த காயமடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் வழியிலேயே நரசிம்மன் பரிதாபமாக இறந்தார்.வேனில் இருந்து வேதாச்சலம், வடிவேலன், சின்னம்மா ஆகியோர்க ளுக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் செய்யாறு அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த விபத்து குறித்து அனக்காவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உளுந்தூர்பேட்டை அருகே வேன் மோதி விவசாயி பலியானார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா கிளியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யனார் (வயது49) இவர் வீட்டில் இருந்து புறப்பட்டு உளுந்தூர்பேட்டைக்கு சொந்த வேலையாக சென்று திரும்பிக் கொண்டிருந்தபோது திருவெண்ணைநல்லூர் ரோடு பாண்டூர் காலனி மாரியம்மன் கோவில் அருகே சென்று கொண்டிருந்தபோது திருக்கோவிலூரில் இருந்து கடம்பூர் நோக்கி சென்ற வேன் அய்யனார் மீது மோதி தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலே இறந்தார்.

    தகவலறிந்த உளுந்தூர்பேட்டை இன்ஸ்பெ க்டர் தமிழ்வாணன் சப்-இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து போன அய்யனாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • அய்யப்ப பக்தர்கள் படுகாயம்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    ஆந்திராவைச் சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் மினி வேனில் சபரிமலை சென்று விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தனர். இன்று அதிகாலை கணியம்பாடி அருகே உள்ள தனியார் பள்ளி அருகே வந்து கொண்டிருந்தபோது முன்னாள் வேலூர் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ் மீது வேன் மோதியது.

    இந்த விபத்தில் வேனின் முன்பகுதி நொறுங்கியது. அதில் இருந்த அய்யப்ப பக்தர்கள் 8 பேர் மற்றும் பஸ்சில் இருந்த 2 பயணிகள் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

    வேலூர் தாலுகா போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தால் வேலூர் திருவண்ணாமலை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    போலீசார் விபத்தில் சிக்கிய வாகனங்களை மீட்ட பிறகு போக்குவரத்து சீரானது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 2 மாணவிகளுக்கு கை மற்றும் கால களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
    • 2 மாணவிகளுக்கும் பிளேட் வைத்து அறுவை சிகிச்சை செய்யப்படும் என டாக்டர்கள் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

    டி.என்.பாளையம்:

    ஈரோடு மாவட்டம் டி.என். பாளையம் அடுத்த அத்தாணி-சத்தியமங்கலம் ரோட்டில் நேற்று மாலை ஒரு ஈச்சர் வேன் வந்தது. இந்த வேனை மூங்கில்பட்டி பகுதியை சேர்ந்த கண்ணன் (28) என்பவர் ஓட்டி வந்தார்.

    இந்த நிலையில் அந்த லாரி கள்ளிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி அருகே வந்து கொண்டு இருந்தது. அப்போது அந்த வழியாக சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் மீது மோதாமல் இருக்க வேனை டிரைவர் திருப்பினார்.

    அப்போது எதிர் பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து பள்ளி முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்த மாணவ- மாணவிகள் மீது வேன் மோதியது. தொடர்ந்து வேன் அருகே இருந்த தடுப்பு கல்லை உடைத்து கொண்டு மரத்தின் மீது மோதி நின்றது.

    வேன் மோதியதில் கணக்க ம்பாளையத்தை சேர்ந்த 12-ம் மாணவிகள் நந்தினி வித்யா பாரதி (17), கனி மொழி (17) ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

    இந்த விபத்தில் மாணவி நந்தினி வித்யா பாரதிக்கு வலது கை மற்றும் 2 கால்களிலும் எலும்பு முறிவும், கனிமொழிக்கு இடது கால் தொடையில் காயமும், தலையில் ரத்த காயமும் ஏற்பட்டது.

    இதை கண்ட அக்கம் பக்கத்தினர் மாணவிகளை மீட்டு கோபிசெட்டி பாளையத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவர்க ளுக்கு சிகிச்சை அளிக்க ப்பட்டு வருகிறது. இதையடுத்து டிரைவர் கண்ணன் தப்பி ெசல்ல முயன்றார். அப்போது மாணவர்கள் அவரை மடக்கி பிடித்து பங்களா ப்புதூர் போலீசில் ஒப்படைத்தனர்.

    இது குறித்து பங்களா ப்புதூர் போலீசார் வேன் டிரைவர் மற்றும் உரிமை யாளர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் வேன் டிரைவர் கண்ணன் மது போதையில் இருந்தது தெரியவந்தது.

    இந்நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 2 மாணவி களுக்கு கை மற்றும் கால களில் எலும்பு முறிவு ஏற்ப ட்டுள்ளது.

    இதையடுத்து 2 மாணவிகளுக்கும் பிளேட் வைத்து அறுவை சிகிச்சை செய்யப்படும் என டாக்டர்கள் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

    • கோவை மாவட்டம், பொள்ளாச்சி, உடுமலை ரோட்டை சேர்ந்த சையது இஸ்மாயில் மகன் ஆரியான்(வயது 20).
    • திருப்பூரில் உள்ள தனது சகோதரி வீட்டுக்கு திரும்பி வந்தார்.

    திருப்பூர் :

    கோவை மாவட்டம், பொள்ளாச்சி, உடுமலை ரோட்டை சேர்ந்த சையது இஸ்மாயில் மகன் ஆரியான்(வயது 20). இவர் கோவை அவிநாசி ரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம்., மூன்றாம் ஆண்டு படித்துவந்தார்.சில நாட்கள் முன்பு, கர்நாடக மாநிலம், உடுப்பிக்கு குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றார்.

    இவர் மட்டும், திருப்பூரில் உள்ள தனது சகோதரி வீட்டுக்கு திரும்பி வந்தார்.நேற்று காலை நண்பர் ஒருவரின் பைக்கை வாங்கி கொண்டு, பல்லடத்தில் உள்ள சித்தி வீட்டுக்கு புறப்பட்டார். குமார் நகர் சிக்னல் அருகே சென்ற போது, பின்னால் வந்த 'ஈச்சர்' சரக்கு வேன், பைக் மீது மோதியது.கீழே விழுந்த ஆரியான் மீது வேனின் பின்சக்கரம் ஏறியது. ஹெல்மெட் அணிந்திருந்தும் அது உடைந்து, தலைநசுங்கி உயிரிழந்தார். சரக்கு வேன், 20 மீட்டர் தூரத்திற்கு பைக்கை இழுத்து சென்றது.

    திருப்பூர் வடக்கு போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வேன் டிரைவரை பிடித்து விசாரித்துவருகின்றனர்.சம்பவத்தை தொடர்ந்து, குமார் நகர் சிக்னல் அருகே சாலையின் இருபுறமும் வேகத்தை கட்டுப் படுத்த போலீசார் இரும்புத்தடுப்புகளை வைத்துள்ளனர்.

    • விஜயமங்கலம் தேசிய நெடுஞ்சாலையை கடந்த போது விவசாயி மீது கார் எதிர்பாராத விதமாக பலமாக மோதியது.
    • இது தொடர்பாக தகவல் அறிந்த பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    பெருந்துறை:

    பெருந்துறையை அடுத்துள்ள கம்புளியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் தங்கமுத்து (வயது 59). இவர் அதே பகுதியில் விவசாயம் செய்து வருகிறார்.

    சம்பவத்தன்று இரவு 8 மணி அளவில் தங்கமுத்து தனது வீட்டில் இருந்து விஜயமங்கலம் வருவதற்காக மொபட்டில் தேசிய நெடுஞ்சாலையை கடந்த போது அந்த வழியாக சேலம் மார்க்கம் நோக்கி சென்ற ஒரு கார் எதிர்பாராத விதமாக இவர் மீது பலமாக மோதியது.

    இதில் தலை மற்றும் உடலில் பலத்த அடிபட்ட அவரை அக்கம் பக்கத்தினர் மீட்ட பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது தொடர்பாக தகவல் அறிந்த பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    • கோபிசெட்டிபாளையம் அருகே சரக்கு வேன் மோட்டார்சைக்கிள் மீது மோதியதில் பள்ளத்தில் தூக்கி வீசப்பட்ட தொழிலாளி பலியானார்.
    • இது குறித்து சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கல்லாகுளம் பகுதியை சேர்ந்தவர் குமார் (34). கூலி தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.

    இவர் கோபிசெட்டிபாளையம் அடுத்த கெட்டிசெவியூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் நம்பியூர் ரோட்டில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு சரக்கு வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் மோட்டார் சைக்கிள் மற்றும் சரக்கு வேன் அருகே இருந்த பள்ளத்தில் பாய்ந்தது. இதில் குமார் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கம் இருந்தவர்கள் அவரை மீட்டு கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

    மேலும் சரக்கு வேனில் பாலகுமார் மற்றும் அவரது மனைவி லோகேஸ்வரி ஆகியோர் வந்தனர். இதில் கணவன்-மனைவி இருவரும் படுகாயம் அடைந்தனர்.

    அவர்களை மீட்டு அருகே உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.இது குறித்து சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×