என் மலர்
நீங்கள் தேடியது "vanigar sangam"
- ‘வணிகம் காக்க வெள்ளையன் இளைய தலைமுறை எழுச்சி மாநாடு’ என்ற தலைப்பில் நடைபெறுகிறது.
- அனைவரும் குடும்பத்தோடு வந்து இந்த மாநாட்டில் கலந்து கொண்டு மாநாட்டை சிறப்பிக்க வேண்டும் என்றார்.
சென்னை:
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாநில தலைவர் டைமண்ட் ராஜா வெள்ளையன் தலைமையில் பெரம்பூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
பொது செயலாளர் ராகவேந்திரா மணி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாநில பொருளாளர் ஹரிகிருஷ்ணன், செங்கல்பட்டு மாவட்ட தலைவர் இமானுவேல் ஜெயசீலன், தென் சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் கிச்சா ரமேஷ், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவர் ஏ.எஸ்.அந்தோணி மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் மாநில தலைவர் டைமண்ட் ராஜா வெள்ளையன் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் வருகின்ற மே 5-ந்தேதி வணிகர் தின மாநாடு சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலை பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ பள்ளி மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்த மாநாடு 'வணிகம் காக்க வெள்ளையன் இளைய தலைமுறை எழுச்சி மாநாடு' என்ற தலைப்பில் நடைபெறுகிறது. தலைவர் த.வெள்ளையன் மறைவுக்கு பின்னர் எனது தலைமையில் செயல்படும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஒன்று சேர்ந்து முதன் முதலாக என்னுடைய தலைமையில் நடத்த இருக்கும் முதல் மாநாடு என்பதால் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாநில, மாவட்ட மற்றும் கிளை சங்க நிர்வாகிகள் அனைவரும் குடும்பத்தோடு வந்து இந்த மாநாட்டில் கலந்து கொண்டு மாநாட்டை சிறப்பிக்க வேண்டும் என்றார்.
சென்னை:
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநாடு மே 5-ந்தேதி ராயப்பேட்டை ஒய்.எம். சி.ஏ. திடலில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் பல்லாயிரக் கணக்கான வியாபாரிகள் பங்கேற்க உள்ளனர். இதற்காக ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளுடனும் மாநில தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா ஆலோசனை நடத்தி வருகிறார்.
பேரமைப்பின் வட சென்னை வடக்கு மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம் மற்றும் மே 5 வணிகர் தின ஆலோசனை கூட்டம் கொளத்தூர் பேப்பர் மில்ஸ் ரோடு சண்முகா மஹாலில் மாவட்ட தலைவர் கொரட்டூர் த.ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மாநிலத் தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா கலந்து கொண்டு பேசினார்.
அப்போது புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்ததுடன் அனைத்து சங்கங்களும் முழு ஒத்துழைப்பு தந்து பேரமைப்பு நடத்தும் 36-வது மாநில மாநாட்டை வெற்றிகரமான மாநாடாக அமைய அனைவரும் பல்லாயிரக்கணக்கான வணிகர்களுடன் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
கூட்டத்தில் பொருளாளர் ஏ.எம்.சதக்கத்துல்லா, மண்டலத் தலைவர் கே.ஜோதிலிங்கம், மாநில இணைச் செயலாளர் எஸ்.எம்.பி.செல்லத்துரை, மாவட்ட தலைவர்கள் சாமுவேல், ஆதி குருசாமி, ஜெயபால், வடசென்னை வடக்கு மாவட்ட செயலாளர் ஜெ.சங்கர், பொருளாளர் ஜெய்சங்கர், அமைப்புச் செயலாளர் குணசேகரன்,
மாவட்ட நிர்வாகிகள் ரவிச்சந்திரன், பால்ராஜ், செல்வக்குமார், லட்சுமண ராவ், ரவிசெல்வம், புருசோத்தமன், அன்னைபாபு, முருகேசன், செல்வராஜ் பங்கேற்றனர்.
அனைவரையும் கொளத்தூர் பூம்புகார்நகர் வியாபாரிகள் சங்க துணைத் தலைவர் வி.பி.வில்லி யம்ஸ் வரவேற்க வி.சால மோன்ராஜா நன்றி கூறினார். கூட்ட ஏற்பாடுகளை மாவட்ட தலைவர் கொரட்டூர் த.ராமச்சந்திரன் சிறப்பாக செய்திருந்தார்.
முன்னதாக செரிமனி ஓட்டலில் மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் வருகிற 5-ந்தேதி 36-வது மாநில மாநாடு இந்திய வணிகர் எழுச்சி மாநாடாக நடைபெறுகிறது.
வணிகர்களுக்கு பென்ஷன் தருவது, ரூ.10 லட்சம் விபத்து காப்பீட்டுத் திட்டம், வணிகர் நல வாரியம் அமைத்தல், பிணையில்லா ரூ.50 லட்சம் கடன் உதவித் திட்டம், வணிகர்களுக்கு ஸ்மார்ட் கார்டு அளிக்கும் பாரதீய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையை எங்களது பேரமைப்பு வரவேற்கிறது.
மத்தியில் எந்த அரசு அமைந்தாலும் இந்த திட்டங்களை உறுதியாக நிறைவேற்றிட பேரமைப்பு போராடும்.
இவ்வாறு அவர் கூறினார். #vikramaraja #vanigarsangam