search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vasanthakumar"

    • வசந்தகுமாரின் 3-ம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி பாளை மகாராஜ நகரில் உள்ள நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்றது.
    • வசந்தகுமாரின் படத்திற்கு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

    நெல்லை:

    காங்கிரஸ் முன்னாள் எம்.பி. வசந்தகுமாரின் 3-ம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி பாளை மகாராஜ நகரில் உள்ள நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., வசந்தகுமாரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார். அவரைத் தொடர்ந்து நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

    நிகழ்ச்சியில் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கமிட்டி பொறுப் பாளர் அழகிய நம்பி, மாவட்ட துணைத்தலைவர் செல்லப்பாண்டி, பாளை மேற்கு வட்டார தலைவர் கணேசன், பாளை தெற்கு வட்டார தலைவர் நளன், முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ் போர்டு, மாவட்ட இணை செயலாளர் ராம நாதன், கிராம கமிட்டி தலைவர் அப்பாதுரை மற்றும் காங்கிரஸ் நிர்வா கிகள் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

    நாங்குநேரி எம்எல்ஏ வசந்தகுமார் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் எச்.வசந்தகுமார், கடந்த சட்டமன்ற தேர்தலில் நாங்குநேரி தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். இந்த நிலையில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியில் காங்கிரசும் இடம்பெற்றது. இதில் கன்னியாகுமரி தொகுதியில் எச்.வசந்தகுமார் எம்.எல்.ஏ. போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    இனி எம்.பி. அடையாளத்துடன் மக்களவைக்கு செல்ல இருப்பதால் எச்.வசந்த குமார் ஏற்கெனவே வகித்து வந்த எம்எல்ஏ பதவியை இன்று ராஜினாமா செய்தார். சென்னை தலைமைச் செயலகத்திற்கு சென்று, சபாநாயகரை சந்தித்து, எம்எல்ஏ பதவியில் இருந்து விலகுவதாக கடிதம் கொடுத்தார். அவரது ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டார். இதையடுத்து நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவித்துள்ளார். 
    பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளதால் 14 நாட்களுக்குள் சட்டரீதியாக எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வதாக வசந்தகுமார் கூறியுள்ளார்.
    ஆலந்தூர்:

    கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எச்.வசந்தகுமார், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டத்தில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். நான் கூறிய அனைத்து திட்டங்களும் இன்னும் ஒரு வருடத்துக்குள் நிறைவேற்றப்படும்.

    பாராளுமன்றத்தில் நாங்கள் மக்களுக்காக குரல் கொடுத்து கொண்டேதான் இருப்போம். மக்களின் குறைகளை நிறைவேற்ற வேண்டியது மத்திய அரசின் கடமை. நிறைவேற்றவில்லை என்றால் நிச்சயம் தட்டி கேட்போம். சட்டமன்ற உறுப்பினராக உள்ள நான், பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளதால் 14 நாட்களுக்குள் சட்டரீதியாக எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வேன்.

    கூட்டணி கட்சிகள் அனைத்தும் வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே நோக்கில்தான் மு.க.ஸ்டாலின் கூட்டணி அமைத்தார். பா.ஜனதாவை எதிர்ப்பது மட்டும் எங்கள் நோக்கம் அல்ல. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதுதான் எங்களுடைய ஒரே நோக்கம்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் முதல் சுற்றிலேயே காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் 5 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றார்.
    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி தேர்தலில் பாரதிய ஜனதா சார்பில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் சார்பில் வசந்தகுமார் எம்.எல்.ஏ., அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் சார்பில் லட்சுமணன் உள்பட 15 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

    முதல் சுற்றிலேயே காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் 5 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் முன்னிலை பெற்றிருந்தார். 2-வது இடத்தில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் இருந்தார். தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டன. கன்னியாகுமரி தொகுதியில் 2 வாக்கு எந்திரங்களை திறக்க முடியாததால் முதல் சுற்று ஓட்டு எண்ணிக்கை விவரத்தை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது.
    மோடி அரசை தூக்கி எறிய கை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்யுங்கள் என்று காங். வேட்பாளர் வசந்தகுமார் பேசியுள்ளார். #Congress #pmmodi #vasanthakumar

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி பாராளு மன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் சுசீந்திரத்தில் இன்று பிரசாரத்தை தொடங்கினார். அப்போது வசந்தகுமார் பேசியதாவது:-

    கூட்டணி கட்சியினரும், பொதுமக்களும் எனக்கு வெற்றி வாய்ப்பை பெற்றுத்தர வேண்டும். பொதுமக்கள் அனைவரும் கை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்வதுடன் ராகுல்காந்தி பிரதமராவதற்கு துணை நிற்க வேண்டும்.

    குமரி மாவட்டத்தில் தொழிற்சாலைகளை கொண்டு வர வேண்டாம் என்று நான் கூறியதாக பாரதீய ஜனதா வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறி வருகிறார். நானும் ஒரு தொழில் செய்து வருபவன். தொழிற்சாலை இருந்தால்தான் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். பொன். ராதாகிருஷ்ணன் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்.

    கடந்த முறை தேர்தலில் போட்டியிட்ட பாரதீய ஜனதா வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன் இந்து மாணவர்களுக்கு கல்வித் தொகை வழங்குவேன் என்று பொய்யான வாக்கு றுதிகளை கூறி வெற்றி பெற்றார். 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று பிரதமர் மோடி கூறி இருந்தார். ஆனால் தற்போது இளைஞர்கள் வேலையின்றி தவித்து வருகிறார்கள்.

    ஆனால் நான், சமீப காலத்தில் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி 1,500 பேருக்கு வேலை கொடுத்துள்ளேன். மக்களுக்காகவே அரசாங்கம் இருக்க வேண்டும். ஆனால் மோடி அரசு மக்களை வஞ்சிக்கிறது. மோடி அரசை தூக்கி எறிய கை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்யுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கற்காடு, மருங்கூர் பகுதிகளில் திறந்த ஜீப்பில் சென்று பிரசாரம் செய்தார். எம்.எல்.ஏ.க்கள் சுரேஷ்ராஜன், ஆஸ்டின், காங்கிரஸ் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், தி.மு.க. நிர்வாகிகள் பார்த்த சாரதி, தாமரைபாரதி, மதியழகன், காங்கிரஸ் நிர்வாகிகள் அசோகன் சாலமன், கால பெருமாள் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர். #Congress #pmmodi #vasanthakumar

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் மோடியை எதிர்க்க பலமான கூட்டணி அமைக்க உள்ளோம் என வசந்தகுமார் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார். #pmmodi #vasanthakumarmla

    ராஜபாளையம்:

    ராஜபாளையம் அருகே உள்ள செட்டியார் பட்டியில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது.

    இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் வசந்த குமார் எம்.எல்.ஏ. ராஜபாளையம் பழைய பஸ் நிலையம் எதிரே உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    காங்கிரஸ் கட்சியில் இதுவரை புதியதாக யாரும் நியமனம் செய்யவில்லை. விரைவில் அறிவிப்பு வரும்.

    நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி, மோடியை கட்டி தழுவியது அன்பின் வெளிப்பாடு. மோடியை எதிர்க்க வேண்டும், நாட்டு மக்களையும், வியாபாரிகளையும் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பலமான கூட்டணி அமைக்க உள்ளோம். தி.மு.க., காங்கிரஸ் உறவு நிலையானது.

    தூத்துக்குடி விவகாரத்தில் அரசு எச்சரிக்கையாக இருந்தால் 13 உயிரிழப்பு ஏற்பட்டிருக்காது.

    இவ்வாறு அவர் கூறினார். #pmmodi #vasanthakumarmla 

    ×