search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vasu"

    • இயக்குனர் பி. வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் படம் சந்திரமுகி 2.
    • சந்திரமுகி 2 படத்தின் படப்பிடிப்பு மைசூரில் நடைபெற்று வருகிறது.

    இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் 'சந்திரமுகி 2'. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும், வடிவேலு, ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைக்கிறார்.


     சந்திரமுகி 2 படக்குழு

    இதையடுத்து மைசூரில் சந்திரமுகி 2 படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பை முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், சந்திரமுகி 2 படப்பிடிப்பு தளத்தில் நடிகர் வடிவேலு 'சுறா' படத்தின் கச்சேரி சீனை நடித்து காண்பித்துள்ளார்.

    இந்த வீடியோவை தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ள ராதிகா, வடிவேலு செய்யும் காமெடி எந்த படத்தில் இடம்பெறும்? என  குறிப்பிட்டுள்ளார். அதற்கு ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

    ×