என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Vedasandur"
- கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த கிருஷ்ணசாமி நேற்று இரவு உயிரிழந்தார்.
- உறவினர்கள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
வேடசந்தூர்:
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகி கிருஷ்ணசாமி (வயது 100). கடந்த 1923ம் ஆண்டு ஆக.15-ல் பிறந்த இவர் பல்வேறு சுதந்திர போராட்டங்களில் கலந்து கொண்டவர். இவருக்கு ராஜம்மாள் என்ற மனைவியும், 2 மகன் மற்றும் 1 மகளும் உள்ளனர்.
கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த கிருஷ்ணசாமி நேற்று இரவு உயிரிழந்தார். அவருக்கு உறவினர்கள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று மாலை வேடசந்தூரில் அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது.
வேடசந்தூர்:
திண்டுக்கல் அருகே வேடசந்தூர் பாரதிநகரில் சவடமுத்து என்பவருக்கு சொந்தமான பிளாஸ்டிக் பொருட்கள் மறு சுழற்சி செய்யும் குடோன் இயங்கி வருகிறது. இங்கு பல்வேறு இடங்களில் இருந்து பெறப்படும் பிளாஸ்டிக் பொருட்களை தரம் பிரித்து மறு சுழற்சி செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை திடீரென பிளாஸ்டிக் குடோனில் இருந்து புகை கிளம்பியது. சிறிது நேரத்தில் தீ பற்றி மளமளவென எரியத் தொடங்கியது. குடோன் முழுவதும் பரவியதால் அப்பகுதி முழுவதும் இரவிலும் பகல் போல் காட்சியளித்தது.
இதை பார்த்து அக்கம் பக்கத்தினர் ஒன்று கூடினர். வேடசந்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நீண்ட நேரம் போராடியும் தீயை அணைக்க முடியாததால் திண்டுக்கல்லில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு போராடி தீயை அணைத்தனர்.
இருந்தபோதும் குடோனில் இருந்த பிளாஸ்டிக் பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பலானது. இது குறித்து வேடசந்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதல் கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர். மேலும் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள சேர்வைக்காரனூரில் கடந்த சில நாட்களாக மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வந்தது. குடும்பத்துக்கு ஒருவர் முதல் இருவர் வரை இக்காய்ச்சலால் அவதிப்பட்டு வீட்டுக்குள்ளேயே முடங்கினர். இது குறித்து வேடசந்தூர் பேரூராட்சி அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நடமாடும் மருத்துவ குழு மூலம் கடந்த 2 நாட்களாக அப்பகுதி மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருந்தபோதும் நோயின் தீவிரம் குறையவில்லை.
இதனால் சேர்வைக்காரனூரைச் சேர்ந்த கமலா (20), லெட்சுமி (25), பழனிச்சாமி (58) உள்பட 15-க்கும் மேற்பட்டோர் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு எந்தவித காய்ச்சல்? என டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட கிராமத்தில் மேலும் காய்ச்சல் பரவாமல் இருக்க சுகாதாரத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
நாகப்பட்டினம் அருகே கரையை கடந்த கஜா புயல் திண்டுக்கல் மாவட்டத்திலும் பெரும் சேதத்தை ஏற்படுத்திச் சென்றுள்ளது. குறிப்பாக கொடைக்கானல் மலைப்பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டது. இதே போல் மாவட்டத்தில் பிற பகுதிகளிலும் சூறைக் காற்றுக்கு பயிர்கள் நாசமடைந்தன.
வேடசந்தூர் அருகே வடுகம்பாடி, புளியம்பட்டி, சுப்பிரமணியபிள்ளை புதூர் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் வாழை, தென்னை சாகுபடி செய்தனர். சூறைக்காற்று பலமாக வீசியதால் 10 ஏக்கருக்கும் மேற்பட்ட வாழைகள் சேதமடைந்தன. பல இடங்களில் தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளது.
எரியோடு அருகே நாகையன்கோட்டை, பாகாநத்தம் ஆகிய பகுதிகளில் 350-க்கும் மேற்பட்ட ஏக்கரில் கண்வலி கிழங்கு சாகுபடி செய்யப்பட்டு இருந்தது கஜா புயலால் கடும் சேதமடைந்துள்ளது.
இதே போல் வடமதுரை பகுதியில் கரும்பு, வாழை சேதமடைந்தன. குஜிலியம்பாறை பகுதியில் கரிக்காலி, கூம்பூர், கோம்பை, வடுகம்பாடி குளம் உள்ளிட்ட இடங்களில் கடும் சேதத்தை ஏற்படுத்தி சென்றுள்ளது.
குச்சிக்கிழங்கு, 15 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட வாழை, உள்ளிட்டவை சேதமடைந்தன. மேலும் பல வீடுகளில் மேற்கூரைகள் பறந்து பொதுமக்கள் வீடு இன்றி தவித்து வருகின்றனர். மேலும் மின் கம்பங்களும் சேதமடைந்துள்ளதால் பல இடங்களில் பொதுமக்கள் இருளில் சிரமப்பட்டு வருகின்றனர்.
பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு சீரமைப்பு பணிகளை துரிதமாக செயல்பட அறிவுறுத்தினர். இதே போல் அரசு அதிகாரிகளும் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். ஆசையாக வளர்த்த தென்னை மரங்கள் மற்றும் வாழைகள் நாசமடைந்ததை கண்டு விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர். தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். #GajaCyclone
வேடசந்தூர்:
நாகப்பட்டினம் அருகே கரையை கடந்த கஜா புயல் திண்டுக்கல் மாவட்டத்திலும் பெரும் சேதத்தை ஏற்படுத்திச் சென்றுள்ளது. குறிப்பாக கொடைக்கானல் மலைப்பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டது. இதே போல் மாவட்டத்தில் பிற பகுதிகளிலும் சூறைக் காற்றுக்கு பயிர்கள் நாசமடைந்தன.
வேடசந்தூர் அருகே வடுகம்பாடி, புளியம்பட்டி, சுப்பிரமணியபிள்ளை புதூர் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் வாழை, தென்னை சாகுபடி செய்தனர். சூறைக்காற்று பலமாக வீசியதால் 10 ஏக்கருக்கும் மேற்பட்ட வாழைகள் சேதமடைந்தன. பல இடங்களில் தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளது.
எரியோடு அருகே நாகையன்கோட்டை, பாகாநத்தம் ஆகிய பகுதிகளில் 350-க்கும் மேற்பட்ட ஏக்கரில் கண்வலி கிழங்கு சாகுபடி செய்யப்பட்டு இருந்தது கஜா புயலால் கடும் சேதமடைந்துள்ளது.
இதே போல் வடமதுரை பகுதியில் கரும்பு, வாழை சேதமடைந்தன. குஜிலியம்பாறை பகுதியில் கரிக்காலி, கூம்பூர், கோம்பை, வடுகம்பாடி குளம் உள்ளிட்ட இடங்களில் கடும் சேதத்தை ஏற்படுத்தி சென்றுள்ளது.
குச்சிக்கிழங்கு, 15 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட வாழை, உள்ளிட்டவை சேதமடைந்தன. மேலும் பல வீடுகளில் மேற்கூரைகள் பறந்து பொதுமக்கள் வீடு இன்றி தவித்து வருகின்றனர். மேலும் மின் கம்பங்களும் சேதமடைந்துள்ளதால் பல இடங்களில் பொதுமக்கள் இருளில் சிரமப்பட்டு வருகின்றனர்.
பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு சீரமைப்பு பணிகளை துரிதமாக செயல்பட அறிவுறுத்தினர். இதே போல் அரசு அதிகாரிகளும் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். ஆசையாக வளர்த்த தென்னை மரங்கள் மற்றும் வாழைகள் நாசமடைந்ததை கண்டு விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர். தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
வேடசந்தூர்:
வேடசந்தூர் ஆர்.எச். காலனி குறிஞ்சி நகரில் வசிப்பவர் மாரிமுத்து (வயது40). இவரது மனைவி முத்துவேலம்மாள் (37). மாரப்பன்பட்டி அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியையாக உள்ளார்.
நேற்று காலை கணவன்- மனைவி 2 பேரும் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டனர். மாலையில் வீடு திரும்பியபோது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த துணிமணிகள் அனைத்தும் சிதறி கிடந்தன.
நகை பணம் எதுவும் கிடைக்காததால் கொள்ளையர்கள் ஏமாற்றத்துடன் சென்றது தெரிய வந்தது.
இதேபோல் அருகில் உள்ள சகுந்தலா (40) என்ற ஆசிரியையின் வீட்டுக்குள்ளும் கொள்ளையர்கள் புகுந்துள்ளனர். இவர் அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். அவரது வீட்டை உடைத்து உள்ளே சென்ற கொள்ளையர்கள் பீரோவில் இருந்த 20 பவுன் நகைகளை கொள்ளையடித்தனர். மேலும் சமுதாய கூடம் அருகில் உள்ள போக்குவரத்து ஏட்டு ரத்தினகிரி (40) என்பவரது வீட்டையும் உடைத்துள்ளனர். இவரது மனைவி நாகலட்சுமி கூத்தாங்கல்பட்டி அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக உள்ளார். இவர்கள் வீட்டிலும் நகை, பணம் எதுவும் சிக்க வில்லை. இதனால் அங்கிருந்த பொருட்களை வீசி விட்டு சென்று விட்டனர்.
அடுத்தடுத்து 3 வீடுகளை கொள்ளையர்கள் ஒரே நாளில் பட்டபகலில் உடைத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் காஜாநகரை சேர்ந்தவர் பொன்னுச்சாமி (வயது65). விவசாய கூலி வேலை பார்த்து வந்தார். மேலும் தனது தோட்டத்தில் இருந்து தென்னை நார் மூலம் துடைப்பம் தயாரித்து சந்தைக்கு விற்பனைக்கு அனுப்புவார்.
இவருக்கு திருமணம் ஆகி பாப்பாத்தி என்ற மனைவியும், 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். மகன் மற்றும் மகள்களுக்கு திருமணம் ஆகி தனித்தனியே வசித்து வருகின்றனர்.
பொன்னுச்சாமிக்கும் வெள்ளையகவுண்டனூரை சேர்ந்த சங்கர் மனைவி ஈஸ்வரி (55) என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தொடர்பு ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது.
வயதான காலத்தில் ஏற்பட்ட இந்த உறவு குறித்து அக்கம் பக்கத்தில் ஏளனமாக பேசினர். இதனால் ஈஸ்வரியை அழைத்துக்கொண்டு பொன்னுச்சாமி தனியாக வீடு எடுத்து அவரை குடி வைத்தார். ஊரில் உள்ள பெரியவர்களும், குடும்பத்தினரும் சொல்லியும் கேட்காமல் இவர்களது தொடர்பு நீடித்து வந்தது. நேற்று இரவு ஈஸ்வரிக்கும் பொன்னுசாமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
தகராறு முற்றிய நிலையில் பொன்னுச்சாமி ஈஸ்வரியை கல்லால் தாக்கி கொலை செய்தார். பின்னர் அவரது உடலை பார்த்து கதறி அழுத நிலையில் தன்னை போலீஸ் பிடித்து விடுமோ? என்ற அச்சத்தில் தனது வீட்டிற்கு வந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்று அதிகாலையில் ஈஸ்வரி கொலை செய்யப்பட்ட நிலையிலும் பொன்னுச்சாமி தற்கொலை செய்த நிலையில் இருந்ததை பார்த்து உறவினர்கள் ஒன்று திரண்டனர்.
இது குறித்து வேடசந்தூர் போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது. போலீசார் 2 பேரின் உடல்களையும் மீட்டு வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் கொலைக்கான காரணம் குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.