search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Veerakumara Swamy"

    • கடந்த 1-ந் தேதி காலை தேர் முகூர்த்தம் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கோவில் குலத்தவர்கள் செய்து வருகின்றனர்.

     வெள்ளகோவில் :

    திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் உள்ள வீரக்குமாரசாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவிலில் ஆண்டு தோறும் மாசி மகா சிவராத்திரியை முன்னிட்டு 3 நாட்களுக்கு தேரோட்டம் நடைபெறும். அந்தவகையில் இந்த ஆண்டு 140-வது ஆண்டு மாசி மகா சிவராத்திரி தேர்த்திருவிழா நடத்தப்படுகிறது.

    விழாவையொட்டி கடந்த 1-ந் தேதி காலை தேர் முகூர்த்தம் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று மாலை 5.30 மணிக்கு மேல் பள்ளய பூஜை நடக்கிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்ட திருவிழா நாளை 19-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி அன்று மாலை 3 மணிக்கு மேல் அவிட்ட நட்சத்திரத்தில் சாமி திருத்தேருக்கு எழுந்தருளச் செய்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் மாலை 6 மணி அளவில் திருத்தேர் நிலைபெயர்த்தல் நிகழ்ச்சி (தேரோட்டம்) நடைபெறுகிறது. 20-ந் தேதி மாலை 5 மணிக்கு மேல் 2-ம் நாள் தேரோட்டம் நடைபெறுகிறது. 21-ந் தேதி மாலை 5 மணிக்கு மேல் திருத்தேர் நிலை சேர்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    தேர்த்திருவிழாவை முன்னிட்டு வருகிற 22-ந் தேதி உள்ளூர் ஆந்தை குலத்தவர்கள், 23-ந் தேதி தனஞ்செயக்குலத்தவர்கள், 24-ந் தேதி மாடகுலத்தவர்கள், 25-ந் தேதி தென்முக ஆந்தை குலத்தவர்கள், 26 -ந் தேதி வடமுக ஆந்தை குலத்தவர்கள், 27-ந் தேதி ஓதாள குலத்தவர்கள், 28-ந் தேதி இலுப்பைக்கிணறு தனஞ்செய குலத்தவர்கள், மார்ச் 1-ந் தேதி கல்லி குலத்தவர்கள், 2-ந் தேதி வண்ணக்கன் குலத்தவர்கள், 3-ந் தேதி நரிப்பழனிகவுண்டர் வகையறா ஆந்தை குலத்தவர்கள், 4-ந் தேதி ஆதிகருப்பன்வலசு நஞ்சப்ப கவுண்டர் வகையறா தனஞ்செய குலத்தவர்கள், 5-ந் தேதி பலிஜவார்கள் குலத்தவர்கள், 6-ந் தேதி திருக்கோவில் முறை பூசாரிகள் மண்ட கட்டளையும் நடக்கிறது. 6-ந் தேதி மஞ்சள் நீர் பூஜையுடன் விழா நிறைவடைகிறது. 22-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை 13 நாட்கள் குலத்தவர்களின் மண்டப கட்டளைதாரர் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    தேர்த்திருவிழா நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கலெகடர், காவல்துறை அதிகாரிகள், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், கோவில் குலத்தவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

    விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கோவில் குலத்தவர்கள் செய்து வருகின்றனர். தேர்த்திருவிழாவையொட்டி இன்று முதல் 21 -ந் தேதி வரை 4 நாட்களுக்கு தொடர்ந்து இரவு புராண நாடகம், இசை நிகழ்ச்சிகள், பல்சுவை நிகழ்ச்சி, பட்டிமன்றம் ஆகியன நடைபெற உள்ளன.

    ×