என் மலர்
நீங்கள் தேடியது "veerapandi"
- காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை இந்த துணை மின் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
- உயர் அழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
திருப்பூர்
திருப்பூர் வீரபாண்டி துணை மின் நிலையத்தில் உள்ள முருகம்பாளையம் மின் பாதையில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (புதன்கிழமை) இந்த துணை மின் நிலையத்தில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை இந்த துணை மின் நிலையத்துக்குட்பட்ட கண்ணன் காட்டேஜ், பாறக்காடு 1 முதல் 6-வது வீதி வரை, ஆசாரி தோட்டம், கோடிஸ்வரா கார்னர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
இதுபோல் திருப்பூர் பலவஞ்சிபாளையம் துணை மின் நிலையத்தில் செட்டிபாளையம் உயர் அழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை இந்த துணை மின்நிலையத்தில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த துணை மின் நிலையத்துக்குட்பட்ட செட்டிபாளையம், தாராபுரம் ரோடு, கிருஷ்ணா நகர், பாலாஜி நகர், வெங்கடேசா நகர், செல்வலட்சுமி நகர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
அதுபோல் திருப்பூர் திருநகர் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை இந்த துணை மின்நிலையத்தில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி நாைள காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை இந்த துணை மின் நிலையத்துக்குட்பட்ட ஆலாங்காடு, வெங்கிடாசலபுரம், காதி காலனி, கதர் காலனி, கே.பி.ஆர்.தோட்டம், பூசாரி தோட்டம், கருவம்பாளையம் எலிமெண்டரி பள்ளி முதல் மற்றும் 2-ம் வீதி, பொன்னுசாமி கவுண்டர் வீதி, முதசாமி கவுண்டர் வீதி, நடராஜ் தியேட்டர் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.
இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
- மின்வாரிய செயற்பொறியாளா் வி.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளாா்.
- பாலாஜி நகா் மின்பாதையில் பராமரிப்புப் பணிகள் நடக்கிறது.
- தண்ணீர் தேங்கியதால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.
- தண்ணீர் தேங்கியதால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.
வீரபாண்டி :
திருப்பூர் மாநகராட்சி 4ம் மண்டல கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய பெரும்பான்மை கவுன்சிலர்கள் குடிநீர் பிரச்சனை பற்றி பேசிய நிலையில், வீரபாண்டி பேருந்துநிலையத்திலிருந்து ஜே.ஜே.நகர் செல்லும் வரை 3 இடங்களில் குடிநீர் குழாய் உடைந்து வீணாக தண்ணீர் வெளியேறியது. அங்கு தண்ணீர் தேங்கியதால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர், எனவே உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- 100க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டனர்.
- குறைபாடுகள் கண்டறியப்பட்டு காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவசமாக அறுவை சிகிச்சையும் செய்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
திருப்பூர் :
திருப்பூர் 54-வது வார்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கவுன்சிலர் சி .அருணாச்சலம் தலைமையில், மாவட்ட பார்வை இழப்பு சங்கம் மற்றும் திருப்பூர் ஐ பவுண்டேஷன் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் திருப்பூர் வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக திருப்பூர் துணை மேயர் பாலசுப்பிரமணியம் கலந்து கொண்டு கண் சிகிச்சை முகாமை தொடங்கி வைத்தார். 54 -வது வார்டு கவுன்சிலரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 4ம் மண்டல பொறுப்பாளர் அருணாச்சலம் மற்றும் கட்சி உறுப்பினர்கள் பாரதி, ஜெயக்குமார், ஜீவானந்தம், ஜீவா ஆகியோர் உடனிருந்தனர்.
சிகிச்சை முகாமில் அப்பகுதியை சேர்ந்த மக்கள் 100க்கு ம் மேற்பட்டோர் கலந்துகொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டனர். கண் பரிசோதனையில் குறைபாடுகள் கண்டறியப்பட்டு தமிழ்நாடு முதலமைச்சர் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவசமாக அறுவை சிகிச்சையும் செய்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
- மின்சார வயர் கையில் தொடும் அளவிற்கு செல்லுகிறது.
- மின்சார வயர் வாகனங்களில் சிக்கினால் பெரிய விபத்து ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது.
வீரபாண்டி :
திருப்பூர் வீரபாண்டி பிரிவு பேருந்து நிறுத்தத்திலிருந்து இடது புறமாக செல்லும் சாலைபோக்குவரத்து நிறைந்த சாலையாகும். இந்த சாலையில் ஏ.எஸ்.என். மருத்துவமனை அருகே சாலையை கடந்து செல்லும் மின்சார வயர் கையில் தொடும் அளவிற்கு செல்லுகிறது.
இந்த சாலையில் கனரக வாகனங்கள் அதிகமாக செல்லும் சாலையாகும். இந்த மின்சார வயர் வாகனங்களில் சிக்கினால் பெரிய விபத்து ஏற்பட வாய்ப்பு அதிகம்உள்ளது. இது குறித்து வீரபாண்டி மின்வாரிய அலுவலகத்தில் பலமுறை புகார் செய்தும் இதுவரைக்கும் நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே உடனே நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.