என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Veerappan"
- நாம் தமிழர் கட்சியில் இணைந்து தீவிரமாக பணியாற்ற தயாராக இருப்பதாக கூறினார்.
- அதிகாரப் பூர்வ அறிவிப்பை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவிக்க உள்ளார்.
சந்தன கடத்தல் வீரப்பனின் மகள் வித்யாராணி 4 ஆண்டுகளுக்கு முன்பு பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்து அரசியலில் ஈடுபட்டார். பாரதிய ஜனதாவில் தனக்கு முக்கிய பொறுப்புகள் தருவார்கள் என்று எதிர்பார்த்தார்.
ஆனால் பாரதிய ஜனதாவில் அவருக்கு உரிய இடம் கிடைக்கவில்லை. இதனால் பா.ஜ.க. கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருந்து வந்தார்.
இந்நிலையில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு மீண்டும் அவரது நடவடிக்கைகள் தீவிரமாகி உள்ளன. கடந்த மாதம் அவர் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானை சந்தித்து பேசினார். அப்போது நாம் தமிழர் கட்சியில் இணைந்து தீவிரமாக பணியாற்ற தயாராக இருப்பதாக கூறினார்.
அதை சீமானும் ஏற்றுக் கொண்டதால் வித்யாராணி நாம் தமிழர் கட்சியில் இணைந்து இருப்பதாக தெரிகிறது. அவரை மீண்டும் பாரதிய ஜனதாவில் செயல்பட வைக்க சிலர் முயற்சி செய்தனர். ஆனால் அதற்கு வெற்றி கிடைக்கவில்லை.
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி சார்பில் வித்யாராணி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது உறுதியாகி இருக்கிறது. அவர் கிருஷ்ணகிரி தொகுதியில் நாம் தமிழர் வேட்பாளராக களம் இறங்குகிறார். இன்று (சனிக்கிழமை) மாலை இதற்கான அதிகாரப் பூர்வ அறிவிப்பை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவிக்க உள்ளார்.
- இந்த சீரிஸ் பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பைக் குவித்துள்ளது.
- இந்த சீரிஸ் வீரப்பனின் முழு வாழ்க்கை கதையையும் விவரிக்கிறது.
மூன்று தசாப்தங்களாக தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளாவின் அடர்ந்த காடுகளை வேட்டையாடிய மிகப்பிரபலமான நபரான வீரப்பன், சிறப்பு அதிரடிப்படையின் (STF) என்கவுண்டரில் தனது முடிவை சந்தித்தார். இவரது வாழ்க்கை கதை 'கூச முனிசாமி வீரப்பன்' என்ற டாக்குமெண்ட்ரி சீரிஸாக உருவாகியுள்ளது. இந்த சீரிஸை சரத் ஜோதி இயக்கியுள்ளார்.
தீரன் புரொடக்ஷன்ஸ் சார்பில் பிரபாவதி இந்த டாக்குமெண்ட்ரி சீரிஸை தயாரித்துள்ளார். இந்த சீரிஸ் டிசம்பர் 14- ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியானது. இந்தியாவையே அதிரவைத்த வனக் கொள்ளைக்காரன் கூச முனிசாமி வீரப்பனின் வாழ்க்கையை, அவரது வாக்குமூலத்துடன் அலசும் இந்த சீரிஸ் பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பைக் குவித்துள்ளது.
ரசிகர்கள் மட்டுமல்லாது விமர்சகர்களும் இந்த சீரிஸை கொண்டாடி வருகின்றனர். தமிழின் இதுவரையிலும் மிகச்சிறந்த டாக்குமெண்ட்ரி சீரிஸ் என அனைத்துத் தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். இந்த சீரிஸின் தனிச்சிறப்பு என்னவென்றால், இது முதன்மையாக வீரப்பனின் வார்த்தைகளில், அவரது முழு வாழ்க்கைக் கதையையும் விவரிக்கிறது. இந்த சீரிஸ் இதுவரை 100 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.
கூச முனிசாமி வீரப்பன் போஸ்டர்
'கூச முனிசாமி வீரப்பன்' சீரிஸுக்கு கிடைத்திருக்கும் பார்வையாளர்களின் வரவேற்பைக் கொண்டாடும் வகையில் ஒரு வித்தியாசமான ஷோவை ஜீ5, மக்கள் கூடியிருக்கும் Urban Square இல் அரங்கேற்றியுள்ளது. மக்கள் கருத்தில் 'கூச முனிசாமி வீரப்பன்' நல்லவனா ? கெட்டவனா ? என்பதைத் தெரிவிக்கும் வகையில், அவர்களின் கருத்துக்களைப் பகிர்ந்து கோடுகளால் வரையப்பட்ட வீரப்பனின் ஓவியத்திற்கு, தங்கள் கருத்தையொட்டிய வண்ணங்களைத் தீட்டலாம். இதில் ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.
- வீரப்பன் வாழ்க்கை கதை 'கூச முனிசாமி வீரப்பன்' என்ற டாக்குமெண்ட்ரி சீரிஸாக உருவாகியுள்ளது.
- இந்த டாக்குமெண்ட்ரி சீரிஸை சரத் ஜோதி இயக்கியுள்ளார்.
மூன்று தசாப்தங்களாக தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளாவின் அடர்ந்த காடுகளை வேட்டையாடிய மிகப்பிரபலமான நபரான வீரப்பன், சிறப்பு அதிரடிப்படையின் (STF) என்கவுண்டரில் தனது முடிவை சந்தித்தார். இவரது வாழ்க்கை கதை 'கூச முனிசாமி வீரப்பன்' என்ற டாக்குமெண்ட்ரி சீரிஸாக உருவாகியுள்ளது. இந்த சீரிஸை சரத் ஜோதி இயக்கியுள்ளார்.
தீரன் புரொடக்ஷன்ஸ் சார்பில் பிரபாவதி இந்த டாக்குமெண்ட்ரி சீரிஸை தயாரித்துள்ளார். இந்த சீரிஸ் டிசம்பர் 14- ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியானது. வீரப்பனின் பெரும்பாலான கதைகளை போலீஸ் மற்றும் ஊடகங்கள் சொல்ல கேட்டிருப்போம். ஆனால், இந்த சீரிஸில் வீரப்பனே தன் கதையைச் சொல்வதனால் சுவாரஸ்யம் கூடுகிறது. 6 எபிசோடுகளை கொண்ட இந்த சீரிஸில் சில புனைவுக் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது. இது ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் கூட்டுகிறது.
இந்நிலையில், 'கூச முனிசாமி வீரப்பன்' சீரிஸ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து அதிக பார்வைகளை குவித்து வரவேற்பை பெற்று வருகிறது. இதன் அடுத்த பாகத்தின் வெளியீட்டை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
- வீரப்பன் வாழ்க்கை கதை 'கூச முனிசாமி வீரப்பன்' என்ற டாக்குமெண்ட்ரி சீரிஸாக உருவாகியுள்ளது.
- இந்த சீரிஸ் டிசம்பர் 14- ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
மூன்று தசாப்தங்களாக தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளாவின் அடர்ந்த காடுகளை வேட்டையாடிய மிகப்பிரபலமான நபரான வீரப்பன், சிறப்பு அதிரடிப்படையின் (STF) என்கவுண்டரில் தனது முடிவை சந்தித்தார். இவரது வாழ்க்கை கதை 'கூச முனிசாமி வீரப்பன்' என்ற டாக்குமெண்ட்ரி சீரிஸாக உருவாகியுள்ளது.
தீரன் புரொடக்ஷன்ஸ் சார்பில் பிரபாவதி இந்த டாக்குமெண்ட்ரி சீரிஸை தயாரித்துள்ளார். இந்த சீரிஸ் டிசம்பர் 14- ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதையடுத்து இந்த சீரிஸ் பத்திரிக்கையாளர்களுக்காக சிறப்பு திரையிடல் செய்யப்பட்டது. திரையிடலுக்குப் பின்னர் படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
இந்த நிகழ்ச்சியில், இயக்குனர் சரத் ஜோதி பேசியதாவது, எல்லா இயக்குனருக்கும் முதல் புராஜக்ட் ரொம்ப முக்கியமானது. ஷங்கர் சார் கிட்ட இருந்து வெளியே வந்து ஒரு சீரிஸுக்காக உழைத்தோம். கோவிடால அது தடங்கல் ஆயிடுச்சு. அந்த நேரத்தில தான் இந்த வாய்ப்பு வந்ததது. இந்த புராஜக்ட் கேக்க அவ்வளவு பிரமிப்பாக இருந்தது. முதல்ல வீரப்பன எனக்கு அடையாளப்படுத்தியது நக்கீரன் புத்தகம் தான். இந்தக்கதையை எந்தக்காரணத்துக்காகவும் சினிமாத் தனமாக்கிவிட கூடாது என்பதில் தெளிவா இருந்தோம்.
எல்லாத்துக்கும் உண்மையான வீடியோ பதிவுகள் சாட்சியங்கள் இருக்கு. அதை அப்படியே வீரப்பனோட பக்கத்துல இருந்து உங்களுக்கு சொல்லனும்னு முயற்சி பண்ணினோம். மூணு டிராஃப்ட் எழுதி அதில் ஃபைனலா வந்தது தான் திரையில் பார்க்குறீங்க. சிலர் வீரப்பன ஹீரோவா காட்டுற கதையானு கேக்குறாங்க, இல்ல எந்த வகையிலும் அப்படி ஆகிடக்கூடாதுன்றது தான் எங்கள் நோக்கம். இப்ப வடநாட்டில் அடக்குமுறை நடக்குது, அத பதிவும் பண்றாங்க. இனி வர்ற காலத்தில் அதுவும் டாக்குமெண்ட்ரியா வரலாம். தமிழில் இது முதல் முறையா இருக்கும். பல சொல்லப்படாத கதைகள் இன்னும் இருக்கு. இன்னும் எக்கச்சக்க வீடியோக்கள், பேட்டிகள், பலரோட துயரங்கள் இருக்கு. எல்லாத்தையும் நாங்க ஆய்வு செஞ்சு, அத 6 எபிசோடா கொண்டு வந்திருக்கோம் என்று பேசினார்.
- வீரப்பன், என்கவுண்டரில் தனது முடிவை சந்தித்தார்.
- 'கூச முனிசாமி வீரப்பன்' சீரிஸானது டிசம்பர் 8-ஆம் தேதி வெளியாகுகிறது.
மூன்று தசாப்தங்களாக தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளாவின் அடர்ந்த காடுகளை வேட்டையாடிய மிகப்பிரபலமான நபரான வீரப்பன், சிறப்பு அதிரடிப்படையின் (STF) என்கவுண்டரில் தனது முடிவை சந்தித்தார். இவரது வாழ்க்கை கதை 'கூச முனிசாமி வீரப்பன்' என்ற டாக்குமெண்ட்ரி சீரிஸாக உருவாகியுள்ளது.
இந்த சீரிஸ் வனக் கொள்ளைக்காரன் கூஸ் முனிசாமி வீரப்பனின் வாழ்க்கை மற்றும் அவரது குற்றச் சரித்திரம் பற்றிய நெருக்கமான பார்வையை வழங்குகிறது. நிஜ வாழ்க்கைக் காட்சிகள் மற்றும் அவருக்கு நெருக்கமான நபர்கள் மற்றும் அவரைப் பிடிக்க அயராது முயன்ற அதிகாரிகளின் நேரடி வாக்குமூலங்கள் ஆகியவற்றின் மூலம், இந்த சீரிஸ் உருவாக்கப்பட்டுள்ளது.
'கூச முனிசாமி வீரப்பன்' சீரிஸானது டிசம்பர் 8 முதல் தமிழ், கன்னடம், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்த சீரிஸின் டிரைலர் வெளியாகி சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.
Koose Munisamy Veerappan – A true crime docu-series with UNSEEN VEERAPPAN TAPES premieres on Dec 8th in Tamil, Kannada, Telugu and Hindi. pic.twitter.com/b3yFftzEpz
— ZEE5 (@ZEE5India) November 24, 2023
- கடந்த ஏப்ரல் 9-ந் தேதி, 13.9 கிலோ எடையுள்ள யானை தந்தத்தை வைத்திருந்ததற்காக அவரை அகமதாபாத் நகர குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
- 2006-ம் ஆண்டு வரை சேலத்தில் முகாமிட்டு வனவிலங்குகளை வேட்டையாடியதாக வனத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
அகமதாபாத்:
சந்தன கடத்தல் வீரப்பனின் கூட்டாளியாக 1992-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டுவரை செயல்பட்டவர் பிரகாஷ் ஜெயின்(வயது56). குஜராத் மாநிலம் போடக்தேவ் பகுதியை சேர்ந்த ஜவுளி வியாபாரியான இவர் வன விலங்குகளை வேட்டையாடி அதன் பொருட்களை விற்பனை செய்து வந்ததாக தெரிகிறது. கடந்த ஏப்ரல் 9-ந் தேதி, 13.9 கிலோ எடையுள்ள யானை தந்தத்தை வைத்திருந்ததற்காக அவரை அகமதாபாத் நகர குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். பின்பு ஒரு மாதத்திற்குப் பிறகு ஜெயின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் புலித்தோல் வைத்திருந்ததாக அவரை போலீசார் மீண்டும் கைது செய்தனர். அவர் மீது வன விலங்குகள் (பாது காப்பு) சட்டம், 1972 இன் பிரிவுகள் 2, 39 (பி), 44, 49 (பி), 50 மற்றும் 51 உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது, அவர் தமிழ்நாட்டின் திருச்சி வனச்சரக பகுதியில் விலங்குகளை வேட்டையாடியதாக தெரிகிறது. அவரிடம் இருந்து ஒரு புலித்தோல், 2 யானை தந்தம், இரண்டு கொம்புகள் மற்றும் நரியின் வால்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதை தொடர்ந்து அவரை அகமதாபாத் போலீசார் தமிழக வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
ஜெயினுடன் மேலும் 7 பேரும் கைது செய்யப்பட்டார்கள். இதனிடையே கைதான ஜெயின் மற்றும் 7 பேரையும் வனத்துறையினர் காவலில் எடுத்து விசாரித்தனர். கைதான ஜெயின், வீரப்பன் சுட்டுக்கொல்லப்பட்ட பிறகும் 2006-ம் ஆண்டு வரை சேலத்தில் முகாமிட்டு வனவிலங்குகளை வேட்டையாடியதாக வனத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
- வீரப்பனுடன் கடைசி கட்ட நிமிடங்கள் மறக்க முடியாது
- வீரப்பன் சரணடைய நிறைய வாய்ப்புகளை அளித்தோம்.
சென்னை :
சந்தன கடத்தல் மன்னன் வீரப்பனை அவ்வளவு எளிதாக யாரும் மறந்திருக்க முடியாது. தமிழ்நாடு-கர்நாடக, கேரளா என 3 மாநில போலீசாருக்கும் பெரும் சவாலாகவும், சிம்ம சொப்பனமாகவும் இருந்தவர் வீரப்பன். காட்டு ராஜாவின் ஆட்டத்திற்கு மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
அ.தி.மு.க. ஆட்சியில் முன்னாள் டி.ஜி.பி. விஜயகுமார் தலைமையில் சிறப்பு அதிரடிப்படை அமைக்கப்பட்டது. தற்போது டெல்லி கமிஷனராக உள்ள கூடுதல் டி.ஜி.பி. சஞ்சய் ஆரோரா உள்ளிட்டோர் கொண்ட குழுவினர் தங்களுக்கான பொறுப்பை வெற்றிகரமாக நிறைவேற்றி காட்டினர்.
2004-ம் ஆண்டு ஆகஸ்டு 18-ந்தேதி தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி என்ற இடத்தில் வீரப்பன் மற்றும் அவனது கூட்டாளிகளை அதிரடிப்படை என்கவுன்ட்டரில் சுட்டு வீழ்த்தியது. இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை 'வீரப்பன்-சேசிங் தி பிரிகாண்ட்' என்ற ஆங்கில புத்தக வடிவில் முன்னாள் டி.ஜி.பி. விஜயகுமார் எழுதியுள்ளார்.
இந்த புத்தகம் தற்போது ஒலி வடிவமாக்கப்பட்டு ஆடிபிள் ஆடியோ புக்ஸ் அண்டு போட்காஸ்டஸ் என்ற செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதனை சென்னை தரமணியில் உள்ள இதழியல் கல்லூரி ஒன்றில் விஜயகுமார் வெளியிட்டார். தொடர்ந்து மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கும் சுவராசியமாக பதில் அளித்தார். அவர் பேசியதாவது:-
சந்தன மர கடத்தல், தந்தங்களுக்காக யானையை வேட்டையாடுதல் என வீரப்பன் வாழ்க்கை சட்டம்-ஒழுங்குக்கு எதிராகவே இருந்தது. தன்னை பிடிக்க வந்த போலீசார், வன அதிகாரிகள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்களை அவன் கொன்று குவித்தான்.
வீரப்பனை பிடிப்பது எங்களுக்கு பெரும் சவாலாக இருந்தது. பூலான்தேவி போல அவருக்கு அரசியல்வாதி ஆக ஆசை இருந்தது. அவருக்கு திருச்சி, பெரம்பலூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து செயல்பட்டு வந்த அமைப்புகள் உதவி செய்தது.
மலைவாழ் மக்களுக்கு வீரப்பன் பாதுகாப்பாக இருந்தார் என்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. அந்த மக்களின் வாழ்வாதாரத்திற்கு வீரப்பன் உதவி செய்தார். இதனால் அவரை அந்த மக்கள் கொண்டாடினர்.
அதேநேரத்தில் எங்களை பொறுத்தவரையில் வீரப்பன் சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்கும் குற்றவாளி. ஆதாரங்களின் அடிப்படையில் வீரப்பன் சரணடைய நிறைய வாய்ப்புகளை அளித்தோம். வீரப்பன் இதற்கு ஒத்துழைக்கவில்லை. அந்தவகையில் வீரப்பனை உயிருடன் பிடிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் எனக்கும் இன்றும் இருக்கிறது.
இந்த ஆடியோ கேட்கும்போது, வீரப்பன் பற்றிய எங்களது தனிப்படையினரின் பார்வை குறித்து தெளிவான புரிதல் உருவாகும். 1989-ம் ஆண்டு வீரப்பனால் நிகழ்த்தப்பட்ட அந்த சம்பவம் தான் வீரப்பனை பிடிப்பதற்கான தீவிரம் அதிகப்படுத்தப்பட்டது. இதுபோன்று பல விஷயங்கள் அந்த ஆடியோவில் பேசி உள்ளோம். அதிலும் குறிப்பாக இப்போது போன்று எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலக்கட்டத்தில் வீரப்பனை பிடிக்க பல யுத்திகளை கையாண்டோம். வீரப்பனின் மரணத்தின் கடைசிக்கட்ட நிமிடங்கள் மறக்க முடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.
- வீரப்பனின் வாழ்க்கை வரலாற்றை பேசும் வீரப்பன்: சேஸிங் தி ப்ரிகாண்ட் பிராட்கேஸ்ட் உருவாகியுள்ளது.
- இதன் வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்ட விஜயகுமார் ஐபிஎஸ் வீரப்பன் குறித்து பேசியுள்ளார்.
ஆசியாவில்லே, ஒரு முன்னணி கிரியேட்டர் எகானமி வென்ச்சர், ஒரு புதிய உண்மை-குற்றம் போட்காஸ்ட், வீரப்பன்: சேஸிங் தி ப்ரிகாண்ட் ஆன் தி ஆடிபிள் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. 20 அத்தியாயங்களைக் கொண்ட இந்த போட்காஸ்ட், தமிழ்நாடு சிறப்பு அதிரடிப் படையை (STF) முன்னின்று நடத்திய கே.விஜய் குமார், ஐபிஎஸ்-இன் வார்த்தைகளில், இந்தியாவின் மிகவும் பயங்கரமான வனக் கொள்ளைக்காரன் கூஸ் முனிசாமி வீரப்பனின் எழுச்சி மற்றும் வீழ்ச்சியை உயிர்ப்பிக்கிறது. பாட்காஸ்ட் ஆடிபிள் உறுப்பினர்களுக்கு கூடுதல் கட்டணமின்றி கிடைக்கும்.
ஏசியாவில்லே தயாரித்த, இந்த ஆடிபிள் ஒரிஜினல் போட்காஸ்ட் வீரப்பனின் தோற்றம் மற்றும் வியத்தகு மரணத்தைச் சுற்றி கேட்கும் அனுபவத்தைத் தருகிறது. வீரப்பன் 1952-ல் கோபிநத்தத்தில் பிறந்தது முதல் 2004-ம் ஆண்டு பாடியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இறந்தது வரை வீரப்பனின் வாழ்க்கையை உருவாக்கிய பல்வேறு சம்பவங்களை நினைவுபடுத்தும் வகையில் ஐபிஎஸ் கே.விஜய் குமாரின் ஐபிஎஸ் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டாரான மறைந்த டாக்டர் ராஜ்குமார் கடத்தப்பட்ட 108 நாள் சோதனையும் அடங்கும்.
இதன் வெளியீட்டு விழாவில் பேசிய கே.விஜய் குமார், ஐ.பி.எஸ்., "போட்காஸ்ட் என்பது மில்லினியல்கள் மற்றும் ஜெனரல் z கேட்போர்களை சென்றடைவதற்கான எங்கள் முயற்சி. இன்றைய இளைஞர்கள் ஐஎஸ்ஐஎஸ் மற்றும் பிற பயங்கரவாத குழுக்களின் போதுமான எண்ணிக்கையிலான உறுப்பினர்களை வெளிப்படுத்தியிருப்பார்கள். இருப்பினும், 'கொள்ளைக்காரன்,' பெரும்பாலும் தி பாண்டிட் கிங் ஆஃப் இந்தியாவின் அழைக்கப்படுகிறது பலருக்குத் தெரியவில்லை. இந்த கதையில் ஒருபுறம், வீரப்பன் ஒரு ராபின் ஹூடாக சித்தரிக்கப்பட்டார். அவரை அரசு அதிகாரிகள் துன்புறுத்துகிறார்கள். மறுபுறம், அவர் ஒரு கொடூரமான கொலையாளியாக சித்தரிக்கப்பட்டார். அதன் கத்தி எப்போதும் இரத்தம் சொட்டுகிறது. இந்த பாட்காஸ்ட் அவரையும் சிறப்புப் பணிக்குழுவின் எங்கள் முயற்சிகளையும் கேட்போர் நன்கு புரிந்துகொள்ள உதவும் என்றார்.
- சந்தன கடத்தல் வீரப்பன் வாழ்க்கையை வெப் தொடராக இயக்குனர் ஏ.எம்.ஆர். ரமேஷ் இயக்கி வருகிறார்.
- இந்த தொடருக்கு எதிராக வீரப்பன் மனைவி முத்துலட்சுமி தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சந்தன கடத்தல் வீரப்பன் வாழ்க்கையை 'வனயுத்தம்' என்ற பெயரில் இயக்குனர் ஏ.எம்.ஆர். ரமேஷ் திரைப்படமாக இயக்கினார். இவர் தமிழில் குப்பி, காவலர் குடியிருப்பு போன்ற படங்களை இயக்கியுள்ளார். தற்போது சந்தன கடத்தல் வீரப்பன் வாழ்க்கையை வெப் தொடராக இயக்கி வருகிறார். இதில் வீரப்பன் கதாபாத்திரத்தில் நடிகர் கிஷோர் நடிக்கிறார்.
கிஷோர்
இந்த வெப்தொடரின் படப்பிடிப்பு சத்தியமங்கலம் காடுகளில் தொடங்கி உள்ளது. இதில், வீரப்பனை வேட்டையாடும் போலீஸ் அதிகாரியாக விவேக் ஓபராயும், வீரப்பனின் தந்தை கதாபாத்திரத்தில் கயல் தேவராஜும், குற்ற உளவியல் நிபுணராக டைரக்டர் ரமேஷ் மகள் விஜேதாவும், நடிகர் ராஜ்குமார் வேடத்தில் விவேக் ஓபராயின் தந்தை சுரேஷ் ஓபராயும் நடிக்கின்றனர்.
கிஷோர்
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி மொழிகளில் இந்த தொடர் உருவாகிறது. இத்தொடருக்கு தடை விதிக்கக்கோரி வீரப்பன் மனைவி முத்துலட்சுமி தரப்பில் பெங்களூரு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு இருப்பதாகவும், இந்த வழக்கை சட்டப்படி சந்திப்பேன் என்றும் இயக்குனர் ஏ.எம்.ஆர்.ரமேஷ் தெரிவித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து, வீரப்பன் வெப் தொடருக்கு எதிரான தடையை நீக்கி நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்துள்ளது. இதனால் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கும் என்று இயக்குனர் ஏ.எம்.ஆர்.ரமேஷ் அறிவித்து உள்ளார்.
- சந்தன கடத்தல் வீரப்பன் வாழ்க்கையை வெப் தொடராக இயக்குனர் ஏ.எம்.ஆர். ரமேஷ் இயக்கி வருகிறார்.
- இந்த தொடருக்கு வீரப்பன் மனைவி முத்துலட்சுமி தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சந்தன கடத்தல் வீரப்பன் வாழ்க்கையை 'வனயுத்தம்' என்ற பெயரில் இயக்குனர் ஏ.எம்.ஆர். ரமேஷ் திரைப்படமாக இயக்கினார். இவர் தமிழில் குப்பி, காவலர் குடியிருப்பு போன்ற படங்களை இயக்கியுள்ளார். தற்போது சந்தன கடத்தல் வீரப்பன் வாழ்க்கையை வெப் தொடராக இயக்கி வருகிறார். இதில் வீரப்பன் கதாபாத்திரத்தில் நடிகர் கிஷோர் நடிக்கிறார்.
கிஷோர்
இந்த வெப்தொடரின் படப்பிடிப்பு சத்தியமங்கலம் காடுகளில் தொடங்கி உள்ளது. இதில், வீரப்பனை வேட்டையாடும் போலீஸ் அதிகாரியாக விவேக் ஓபராயும், வீரப்பனின் தந்தை கதாபாத்திரத்தில் கயல் தேவராஜும், குற்ற உளவியல் நிபுணராக டைரக்டர் ரமேஷ் மகள் விஜேதாவும், நடிகர் ராஜ்குமார் வேடத்தில் விவேக் ஓபராயின் தந்தை சுரேஷ் ஓபராயும் நடிக்கின்றனர்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி மொழிகளில் இந்த தொடர் உருவாகிறது. வெப் தொடருக்கு தணிக்கை இல்லை என்பதால் வீரப்பனின் முழு வாழ்க்கையையும் இந்த தொடரில் கொண்டு வருவேன் என்று இயக்குனர் ரமேஷ் கூறினார். இந்த நிலையில் இத்தொடருக்கு தடை விதிக்கக்கோரி வீரப்பன் மனைவி முத்துலட்சுமி தரப்பில் பெங்களூரு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு இருப்பதாகவும், இந்த வழக்கை சட்டப்படி சந்திப்பேன் என்றும் டைரக்டர் ஏ.எம்.ஆர்.ரமேஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையொட்டி கடந்த சில மாதங்களில் 1457 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அதேநேரத்தில் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு 25 ஆண்டுகளாக சிறையில் வாடும் வீரப்பனின் சகோதரர் மாதையனை விடுதலை செய்ய தமிழக அரசு மறுத்து வருகிறது. தமிழக அரசின் இந்த மனிதநேயமற்றப் போக்கு கண்டிக்கத்தக்கது ஆகும்.
வீரப்பனின் மூத்த சகோதரரான 70 வயது மாதையன் கடந்த 1987ஆம் ஆண்டு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். அந்த வழக்கிலோ அல்லது அவர் மீது தொடரப்பட்ட மற்ற வழக்குகளிலோ மாதையனுக்கு எந்த தொடர்பும் இல்லை.
மாதையன் மீது தொடரப்பட்ட மற்ற வழக்குகளில் இருந்து அவர் விடுதலை செய்யப்பட்டு விட்ட நிலையில், பொய்யாக புனையப்பட்ட கொலை வழக்கில் மட்டும் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கடந்த 1997-ம் ஆண்டு கீழமை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அந்த வழக்கில் விசாரணைக் கைதியாகவும், தண்டனைக் கைதியாகவும் கடந்த 25 ஆண்டுகளாக அவர் சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார். அவர் சிறையில் அடைக்கப்பட்ட பிறகு 8 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அனுபவித்த ஆயுள் தண்டனை கைதிகள் பலமுறை விடுதலை செய்யப்பட்டனர்.
அதற்கான தகுதிகளின்படி பார்த்தால் மாதையன் பத்தாண்டுகளுக்கு முன்பே விடுதலை செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ஏனோ அவர் இன்னும் விடுவிக்கப்படவில்லை.
வழக்கமாக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் 14 ஆண்டு சிறை வாசத்திற்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டு விடுவார்கள். அந்த வகையிலும் மாதையனை தமிழக அரசு விடுவிக்கவில்லை. இதை எதிர்த்து மாதையன் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அரசியலமைப்புச் சட்டத்தின் 161-வது பிரிவின்படி மாதையனை விடுதலை செய்வது குறித்து பரிசீலிக்கும்படி தமிழகம் அரசுக்கு 16.12.2015-ந்தேதி ஆணையிட்டது.
ஆனால், உயர்நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காத தமிழக அரசு மாதையனை விடுதலை செய்ய மறுத்து விட்டது. அதை எதிர்த்து செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, மாதையனை விடுவிக்க சிறை நிர்வாகத்தின் பரிந்துரை வாரியம் ஒப்புக் கொள்ளவில்லை என்றும், அதனால் தான் மாதையன் விடுதலை செய்யப்பட வில்லை என்றும் தமிழக அரசு வாதிட்டது.
ஆனால், அதை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், மாதையனை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு கனிவுடன் பரிசீலிக்க வேண்டும் என்று ஆணையிட்டது.
எனினும், உச்சநீதிமன்றத்தின் ஆணையையும் தமிழக அரசு மதிக்கவில்லை. இதனால் 25 ஆண்டுகளாக சிறையில் வாடும் மாதையன் தமது இருண்ட சிறை வாழ்வு எப்போது விடியும் என்ற எதிர்பார்ப்புடன் ஏங்கிக் கொண்டிருக்கிறார்.
70 வயதைக் கடந்த மாதையன் நீரிழிவு நோய், அதிக இரத்த அழுத்தம், பார்வைக் குறைபாடு உள்ளிட்ட நோய்களால் அவதிப்பட்டு வருகிறார். கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவருக்கு கடந்த இரு ஆண்டுகளில் பலமுறை மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையில் வழக்கறிஞராக பணியாற்றி வந்த அவரது மகன் ஓராண்டுக்கு முன் சாலைவிபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
அதன்பின்னர் அவரது உடல்நிலை மிகவும் மோசமாகி விட்டது. மனதளவிலும் அவர் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறார். இந்த நேரத்தில் விடுதலையும், சொந்த ஊர் வாசமும் மட்டுமே அவரை இயல்பு நிலைக்கு கொண்டு வரும்.
ஆனால், ஏனோ இந்த உண்மையை ஏற்றுக் கொள்ள தமிழக அரசு மறுக்கிறது. சிறைத் தண்டனை என்பது குற்றம் செய்தவர்களை திருத்துவதற்காகத் தான். மாதையனைப் பொறுத்த வரை அவர் எந்த குற்றமும் செய்யவில்லை.
அதுமட்டுமின்றி, 70 வயதைக் கடந்து, உடல்நலக் குறைவால் வாழ்க்கையின் இறுதி நாட்களை எண் ணிக் கொண்டிருக்கும் ஒரு முதியவரை, 25 ஆண்டு களுக்கும் மேலாக சிறையில் அடைத்து வைத்துக் கொடுமைப்படுத்துவதில் ஆட்சியாளர்களுக்கு அப்படி என்ன இன்பம்? என்பது தான் தெரியவில்லை.
எம்.ஜி.ஆர் நூற்றாண்டை முன்னிட்டு 10 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த 1775 கைதிகளை விடுதலை செய்ய முடிவெடுத்து 1457 பேரை விடுதலை செய்த அரசு, மீதமுள்ளோரையும் அடுத்த சில நாட்களில் விடுதலை செய்யவுள்ளது. அவர்களுடன் சேர்த்து மாதையனையும் விடுதலை செய்வதில் தமிழக அரசுக்கு என்ன இழப்பு ஏற்பட்டு விடப் போகிறது? என்பது தான் புரியவில்லை.
மாதையனின் வயது மற்றும் உடல்நிலையையும், அவர் செய்யாத குற்றத்துக்காக ஏற்கனவே 25 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து விட்டார் என்பதையும் கருத்தில் கொண்டு அவரை உடனடியாக அரசு விடுதலை செய்ய வேண்டும். மாதையனைப் போலவே தண்டனைக் காலத்தை நிறைவு செய்தோரையும், வயது முதிர்ந்தவர்களையும் விடுதலை செய்வதற்கும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். #Ramadoss #Veerappan
தமிழகம் மற்றும் கர்நாடக வனப்பகுதிகளில் சிம்ம சொப்பனமாக சந்தனக் கடத்தல் வீரப்பன் இருந்து வந்தார். அவரை பிடிப்பதற்காக தமிழக அரசு சார்பில் அப்போது போலீஸ் சூப்பிரண்டாக இருந்த கோபாலகிருஷ்ணன் தலைமையில் அதிரடிப்படை அமைத்தது.
தமிழக-கர்நாடக எல்லைப் பகுதியான பாலாறு பகுதிகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது கன்னிவெடியில் சிக்கி அவர் படுகாயம் அடைந்தார். தகவல் அறிந்த அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்பேரில் அரசு சார்பில் அவருக்கு உயரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.
அப்போது கோபால கிருஷ்ணன், வீரப்பனை பிடிக்காமல் தான் திருமணம் செய்து கொள்ளமாட்டேன் என சபதம் ஏற்று, கடைசி வரை திருமணம் செய்து கொள்ளவில்லை.
இந்த நிலையில் கோபால கிருஷ்ணன் டி.ஐ.ஜி.-ஆக பதவி உயர்வு பெற்றார். பின்னர் கமிஷனராக பதவி உயர்வு பெற்று சேலத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றார்.
கடந்த 2 வருடங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக கோபால கிருஷ்ணன் இறந்தார். மேட்டூர் தங்கமாபுரிப்பட்டணம் அருகே உள்ள பெரியார் நகரில் குடும்பத்தினருக்கு சொந்தமான இடத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
நேற்று 2-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் உறவினர்கள், குடும்பத்தினர், நண்பர்கள் மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.
இந்த நிலையில் அவரது நினைவிடத்தில் சிலை அமைக்க முடிவு செய்து, வெண்கலத்தில் கோபாலகிருஷ்ணன் சிலை செய்து கொண்டு வரப்பட்டு வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த சிலையை அவரது நினைவிடத்தில் நிறுவுவதற்கான பணிகள் அங்கு மும்முரமாக நடந்து வருகின்றன. போலீஸ் அதிகாரி கோபால கிருஷ்ணன் பிறந்த நாளான டிசம்பர் 5-ந்தேதி அன்று அவரது சிலையை நினைவிடத்தில் நிறுவி நண்பர்கள், உறவினர்கள் முன்னிலையில் திறக்க குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்