search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vegetable Price"

    • சமையலுக்கு பீன்ஸ் வாங்குவதை இல்லத்தரசிகள் குறைத்து உள்ளனர்.
    • ஒரு கிலோ பீன்ஸ் ரூ200-க்கும், அவரைக்காய் ஒரு கிலோ ரூ.100-க்கும் விற்கப்படுகிறது.

    கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு இன்று 450 லாரிகளில் காய்கறி விற்பனைக்கு வந்தது.

    வரத்து குறைவால் பீன்ஸ், அவரைக்காய் விலை தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது.

    மொத்த விற்பனையில் ஒரு கிலோ பீன்ஸ் ரூ200-க்கும், அவரைக்காய் ஒரு கிலோ ரூ.100-க்கும் விற்கப்படுகிறது. சில்லரை விற்பனை கடைகளில் பீன்ஸ் ரூ.250 வரை விற்கப்படுகிறது. இதனால் சமையலுக்கு பீன்ஸ் வாங்குவதை இல்லத்தரசிகள் குறைத்து உள்ளனர்.

    அதேபோல் கோடை வெயிலின் தாக்கம் காரணமாக விளைச்சல் பாதிப்பால் கத்தரிக்காய், பீர்க்கங்காய், முருங்கைக்காய், கொத்தவரங்காய், புடலங்காய், சவ்சவ் உள்ளிட்ட பச்சை காய்கறிகளின் விலையும் கடந்த வாரத்தை காட்டிலும் கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.20 வரை அதிகரித்து உள்ளது.

    கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை விபரம் வருமாறு (கிலோவில்) :-

    உஜாலா கத்தரிக்காய்-ரூ.50, வரி கத்தரிக்காய்-ரூ.35, வெண்டைக்காய்-ரூ.35, பீன்ஸ்-ரூ.200, அவரைக்காய்-ரூ.100, ஊட்டி கேரட்-ரூ.45, பீட்ரூட்-ரூ.25, முள்ளங்கி-ரூ.30, நூக்கல்-ரூ.30, சவ்சவ்-ரூ.50, சுரக்காய்-ரூ.15, வெள்ளரிக்காய்-ரூ.25, முருங்கைக்காய்-ரூ.60, கோவக்காய்-ரூ.20, பாகற்காய்-ரூ.40, நைஸ் கொத்தவரங்காய்-ரூ.50, மாங்காய்-ரூ.25, பீர்க்கங்காய்-ரூ.50, புடலங்காய்-ரூ.50, தக்காளி-ரூ.22, நாசிக் வெங்காயம்-ரூ.26, சின்ன வெங்காயம்-ரூ.60, உருளைக்கிழங்கு-ரூ.26, பச்சை மிளகாய்-ரூ.60, இஞ்சி-ரூ.135.

    • சென்னை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே நாளை காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
    • போராட்டத்தில் ஒருங்கிணைந்த சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொள்கிறார்கள்.

    சென்னை:

    காய்கறி மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைவாசி உயர்வை தி.மு.க. அரசு கட்டுப்படுத்த தவறியதாக கூறி அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுவதும் நாளை நடைபெறுகிறது.

    சென்னை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே காலை 10 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

    போராட்டத்தில் ஒருங்கிணைந்த சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொள்கிறார்கள்.

    இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர்கள் ஜெயக்குமார், பாலகங்கா, ஆதிராஜாராம், விருகை ரவி, வெங்கடேஷ்பாபு, தி.நகர் சத்யா, ஆர்.எஸ்.ராஜேஷ், எம்.கே.அசோக், கே.பி.கந்தன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    • கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட அனைத்து மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் இந்த விலைவாசி உயர்வை சரிசெய்ய முடியாமல் திண்டாடி வந்தனர்.
    • கடலூரில் 1 கிலோ தக்காளி 20 ரூபாய்க்கு விற்பனை செய்ததும் அரங்கேறியது.

    கடலூர்:

    தமிழகம் முழுவதும் சில நாட்களுக்கு முன்பு தக்காளி விலை யாரும் எதிர்பாராத வகையில் கிடுகிடுவென அதிகரித்தது. இதனால் இல்லத்தரசிகள் அனைவரும் என்ன செய்வதென ெதரியாமல் திண்டாடி வந்தனர். இதனையடுத்து தக்காளி விலை உயர்வை தொடர்ந்து பழங்கள், காய்கறிகள் உள்பட அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்தது. இதனால் குறிப்பாக கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட அனைத்து மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் இந்த விலைவாசி உயர்வை சரிசெய்ய முடியாமல் திண்டாடி வந்தனர். தக்காளி விலையை கட்டுப்படுத்த கடலூரில் 1 கிலோ தக்காளி 20 ரூபாய்க்கு விற்பனை செய்ததும் அரங்கேறியது. கடலூரில் மாவட்டத்தில் இன்று காய்கறிகளின் விலைபட்டியல் வருமாறு:-

    மிளகாய் ரூ. 80, வெங்காயம் ரூ. 24, தக்காளி ரூ. 88, உருளை ரூ.20, பல்லாரி ரூ.26, சின்ன வெங்காயம் ரூ. 90, கேரட் ரூ. 46, பீன்ஸ் ரூ. 95, கோஸ் ரூ.20, சவுசவ் ரூ.26, பீட்ரூட் ரூ. 35, இஞ்சி ரூ.255, முள்ளங்கி ரூ. 22, கத்தரிக்காய் ரூ.50, வெண்டை ரூ.30, கோஸ் ரூ.20, குடைமிளகாய் ரூ.65, பஜ்ஜிமிளகாய் ரூ.60, காளிபிளவர் ரூ. 30, நூக்கோல் ரூ. 80, அவரைக்காய் ரூ.40, மாங்காய் ரூ.22, கருணைகிழங்கு ரூ.50, முருங்கை ரூ. 35, சேம்பு ரூ. 45, பிடிகருணை ரூ. 40, பாகற்காய் ரூ. 50, புடலை ரூ. 20, சுரக்காய் ரூ. 20, சுவிட்கான் ரூ. 22.

    • தக்காளி சிறிய வெங்காயம் போன்ற பொருட்கள் கூட்டுறவு கடைகளில் குறைந்த விலைக்கு விற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் கீழ் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் காய்கறி-மளிகை பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் அதை கட்டுப்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இன்று அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    இந்த கூட்டத்தில் வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் மற்றும் அரசுத்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் என்னென்ன பொருட்கள் விலை உயர்ந்துள்ளது, அதை கட்டுப்படுத்த என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று ஆலோசிக்கப்பட்டது.

    கடந்த சில நாட்களாக தக்காளி, சிறிய வெங்காயம் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து வரும் நிலையில் அதை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

    இப்போது தக்காளி சிறிய வெங்காயம் போன்ற பொருட்கள் கூட்டுறவு கடைகளில் குறைந்த விலைக்கு விற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை இன்னும் அதிகப்படுத்த வேண்டும்.

    இது தொடர்பாக பல்வேறு துறையை சார்ந்த நீங்கள் உங்கள் துறை மூலமாக அத்தியாவசிய பொருட்களை கூட்டுறவு அங்காடிகளிலும், நியாய விலை கடைகளிலும் சந்தை விலையை விட குறைவாக விற்க ஏற்பாடு செய்திட வேண்டும்.

    தேவைப்பட்டால் இதற்கென தமிழ்நாடு உணவுப் பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் கொள்முதல்களை மேற்கொள்ள வேண்டும்.

    அதே சமயம் அத்தியாவசிய பொருட்கள் பதுக்கப்படுவதை கடுமையாக கண்காணித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிமைப் பொருள் காவல் துறையினர் இதில் தனி கவனம் செலுத்த வேண்டும்.

    அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் கீழ் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

    தமிழ்நாடு முழுவதிலும் உள்ள உழவர் சந்தைகளில் காய்கறிகள் விற்பனையை அதிகப்படுத்த வேண்டும்.

    காய்கறி விலை உயர்ந்தாலும், அதன் பலன் நேரடியாக விவசாயிகளுக்கு செல்லவில்லை என்று கேள்விப்படுகிறேன். இதனை சரி செய்ய உழவர் சந்தைகளின் செயல்பாடுகள் பெரிதும் உதவும்.

    எனவே வேளாண் துறை இதில் தனி கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    கொரோனா காலத்தில் செயல்படுத்தப்பட்டது போல் நடமாடும் காய்கறி அங்காடிகளை தற்போது பெருமளவு மாநகராட்சி மற்றும் தோட்டக் கலைத் துறை மூலம் தொடங்கலாம்.

    இவ்வாறு நீங்கள் உங்கள் துறைகள் மூலம் மேற் கொண்ட மற்றும் மேற்கொள்ள உள்ள நடவடிக்கைகள் பற்றி தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • முருங்கைக்காய் விலை ரூ.30 வரை உயர்ந்திருக்கிறது.
    • தக்காளி விலை கணிசமாக உயர்ந்திருக்கிறது.

    சென்னை

    'மாண்டஸ்' புயல் கரையை கடந்தாலும் சென்னையில் தொடர்ந்து மழை பெய்துகொண்டே இருக்கிறது. வங்கக்கடலில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் கனமழை பெய்தும் வருகிறது.

    தொடர் மழை காரணமாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரும் காய்கறி வரத்து பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதன் தாக்கம் காய்கறி விலையில் எதிரொலித்துள்ளது. இதனால் காய்கறி விலை ஓரிரு நாளிலேயே 'கிடுகிடு'வென உயர்ந்து இருக்கிறது.

    இதுகுறித்து சென்னை கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் சங்க செயலாளர் அப்துல் காதர் கூறியதாவது:-

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வழக்கமான காய்கறி வரத்து மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் காய்கறி விலை உயர்ந்திருக்கிறது. குறிப்பாக 2 நாட்களுக்கு முன்பு ரூ.20 வரை விற்பனையான ஒரு கிலோ பீன்ஸ், அவரை உள்ளிட்ட காய்கறி தற்போது ரூ.30 முதல் ரூ.35 வரை விற்பனை ஆகிறது. பாகற்காய், கத்தரி, பீர்க்கங்காய் உள்ளிட்டவற்றின் விலை ரூ.10 அதிகரித்துள்ளது. தக்காளி விலை கணிசமாக உயர்ந்திருக்கிறது. ரூ.12 முதல் ரூ.17 வரை விற்பனையான தக்காளி, தற்போது ரூ.30 வரை விற்பனை ஆகிறது. முருங்கைக்காய் விலையும் ரூ.30 வரை உயர்ந்திருக்கிறது.

    தற்போது மழை குறைந்திருப்பதால் விலை சற்று மீண்டு வருகிறது. நிலைமை சீரடையும் பட்சத்தில் காய்கறி விலை ஓரிரு நாளில் குறைந்து முன்புபோலவே விற்பனை செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை மழை காரணமாக மார்க்கெட்டுக்கு மக்கள் வருகை கணிசமாக குறைந்திருப்பதால், வாங்க ஆளில்லாமல் காய்கறி வீணாகி அழுகி போய் குப்பையில் கொட்டும் நிலைமை ஏற்பட்டு இருக்கிறது. இது அனைவருக்குமே கவலையை தந்துள்ளது. வரும் நாட்களில் இந்த நிலைமை மாறும் என்று எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று விற்பனை செய்யப்பட்ட காய்கறி விலை நிலவரம் வருமாறு:- (மொத்தவிலையில்/கிலோவில்)

    பீன்ஸ்- ரூ.30, அவரை- ரூ.30 முதல் ரூ.35 வரை, பாகற்காய் (பன்னீர்) - ரூ.50, பாகற்காய் (பெரியது) - ரூ.50, கத்தரி-ரூ.30 முதல் ரூ.40 வரை, வெண்டை-ரூ.40, புடலங்காய்-ரூ.30 முதல் ரூ.40 வரை, சுரைக்காய்-ரூ.30, பீர்க்கங்காய்-ரூ.40, பச்சை மிளகாய்-ரூ.40, பீட்ரூட்-ரூ.40 முதல் ரூ.50 வரை, கேரட் (ஊட்டி) - ரூ.50, கேரட் (மாலூர்) -ரூ.35, முள்ளங்கி- ரூ.20 முதல் ரூ.25 வரை, முட்டைக்கோஸ்- ரூ.15 முதல் ரூ.20 வரை, இஞ்சி- ரூ.65, சாம்பார் வெங்காயம் - ரூ.50 முதல் ரூ.100 வரை, பல்லாரி வெங்காயம் (நாசிக்) - ரூ.20 முதல் ரூ.25 வரை, பல்லாரி வெங்காயம் (ஆந்திரா) - ரூ.15 முதல் ரூ.20 வரை, தக்காளி- ரூ.30, சேனைக்கிழங்கு- ரூ.40 முதல் ரூ.50 வரை, சேப்பங்கிழங்கு- ரூ.40 முதல் ரூ.50 வரை, காலிபிளவர் (ஒன்று) - ரூ.20, முருங்கைக்காய்- ரூ.120 முதல் ரூ.130 வரை, உருளைக்கிழங்கு- ரூ.30 முதல் ரூ.35 வரை, எலுமிச்சை- ரூ.40 முதல் ரூ.50.

    வெளிச்சந்தையில்...

    கோயம்பேடு மார்க்கெட் விலையை காட்டிலும் ஆள் கூலி, வாகன வாடகை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வெளிச்சந்தையில் ரூ.10 முதல் ரூ.25 வரை கூடுதலாக காய்கறி விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த வாரம் வரை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினசரி 450-க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு குவிந்து வந்தது.
    • இன்று 300 லாரிகளில் மட்டுமே காய்கறிகள் விற்பனைக்கு வந்துள்ளன. இதனால் காய்கறி விலை திடீரென அதிகரித்து உள்ளது.

    போரூர்:

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா கேரளா, உத்திரபிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து காய்கள் விற்பனைக்கு வருகிறது.

    விவசாய பணியில் ஈடுபட்டு வரும் தொழி லாளர்களில் பெரும்பா லானவர்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாட 3 நாட்கள் வரை விடுமுறை எடுத்து சென்றுவிட்டனர். இதனால் காய்கறி உற்பத்தி மற்றும் அறுவடை செய்வதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

    இதன் காரணமாக கோயம்பேடு சந்தைக்கு வரும் காய்கறி வரத்து கடந்த 2 நாட்களாகவே வெகுவாக குறைந்துவிட்டது.

    கடந்த வாரம் வரை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினசரி 450-க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு குவிந்து வந்தது. இந்த நிலையில் இன்று 300 லாரிகளில் மட்டுமே காய்கறிகள் விற்பனைக்கு வந்துள்ளன. இதனால் காய்கறி விலை திடீரென அதிகரித்து உள்ளது.

    கடந்த வாரம் மொத்த விற்பனை கடைகளில் ரூ.40-க்கு விற்ற பீன்ஸ் தற்போது விலை அதிகரித்து ரூ.70-க்கும், ரூ.50-க்கு விற்ற ஊட்டி கேரட் ரூ90-க்கும், ரூ.70-க்கு விற்ற முருங்கைக்காய் ரூ.90-க்கும், ஒரு கிலோ ரூ.10-க்கு விற்ற வெண்டைக்காய் ரூ.25-க்கும் விற்கப்படுகிறது.

    அதேபோல் கத்தரிக்காய், முட்டை கோஸ், அவ ரைக்காய் உள்ளிட்ட பெரும்பாலான பச்சை காய்கறிகளின் விலையும் கிலோவுக்கு ரூ.5 முதல் ரூ.10 வரை அதிகரித்து உள்ளது.

    தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வரும் சின்ன வெங்காயம் இன்று ஒரு கிலோ ரூ.110-க்கு விற்கப்பட்டு வருகிறது. வெளி மார்க்கெட்டில் உள்ள மளிகை மற்றும் காய்கறி கடைகளில் ஊட்டி கேரட் ஒரு கிலோ ரூ.120 வரையிலும், பீன்ஸ் ஒரு கிலோ ரூ.100 வரையிலும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.130 வரையும் விற்கப்படுகிறது.

    சமையலுக்கு தினசரி பயன்படுத்தப்படும் பச்சை காய்கறிகள் விலை திடீரென அதிகரித்து உள்ளது இல்லத்தரசிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் இன்றைய காய்கறிகள் மொத்த விற்பனை விலை விபரம் வருமாறு (கிலோவில்):-

    தக்காளி-ரூ.23.

    நாசிக் வெங்காயம்-ரூ.36

    ஆந்திரா வெங்காயம்- ரூ.20

    சின்ன வெங்காயம்- ரூ.110

    உருளைக்கிழங்கு-ரூ.27

    ஹாசன் உருளைக்கிழங்கு- ரூ.42

    கத்திரிக்காய்- ரூ.20

    வரி கத்திரிக்காய்- ரூ.15

    அவரைக்காய்- ரூ.40

    வெண்டைக்காய்- ரூ.25

    பீன்ஸ்- ரூ.70

    ஊட்டி கேரட்-ரூ.90

    பீட்ரூட்- ரூ.25

    முள்ளங்கி- ரூ.22

    வெள்ளரிக்காய்- ரூ.12

    கோவக்காய்- ரூ.35

    பன்னீர் பாகற்காய்- ரூ.40

    முட்டை கோஸ்- ரூ.20

    காலி பிளவர் ஒன்று - ரூ.25

    முருங்கைக்காய்- ரூ.90

    சுரக்காய்- ரூ.15

    புடலங்காய்-ரூ.15

    பீர்க்கங்காய்-ரூ.35

    சவ்சவ்-ரூ.15

    இஞ்சி-ரூ.65.

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழை காரணமாக பீன்ஸ், அவரைக்காய், கேரட் ஆகிய காய்கறிகளின் வரத்து பாதியாக குறைந்து விலை திடீரென அதிகரித்தது.
    • மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ பீன்ஸ் ரூ100-க்கும், கேரட் கிலோ ரூ.70-க்கும், அவரைக்காய் கிலோ ரூ.60- க்கும் விற்கப்பட்டது.

    போரூர்:

    சென்னை கோயம்பேடு மார்கெட்டுக்கு இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து 430 லாரிகளில் காய்கறி வந்து விற்பனைக்கு குவிந்துள்ளது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழை காரணமாக பீன்ஸ், அவரைக்காய், கேரட் ஆகிய காய்கறிகளின் வரத்து பாதியாக குறைந்து விலை திடீரென அதிகரித்தது. இதையடுத்து மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ பீன்ஸ் ரூ100-க்கும், கேரட் கிலோ ரூ.70-க்கும், அவரைக்காய் கிலோ ரூ.60- க்கும் விற்கப்பட்டது.

    இந்த நிலையில் மழை குறைந்து மீண்டும் காய்கறி வரத்து வழக்கம் போல அதிகரித்து உள்ளது. இதனால் பீன்ஸ், அவரைக்காய் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இன்று ஒரு கிலோ பீன்ஸ் ரூ.50-க்கும், அவரைக்காய் கிலோ ரூ.30-க்கும், கேரட் கிலோ ரூ.60-க்கும் விற்கப்படுகிறது. அதேபோல் வரத்து அதிகரிப்பு காரணமாக வெண்டைக்காய் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. ஒரு கிலோ ரூ.7-க்கு விற்கப்படுகிறது. ஆனாலும் அதை வாங்கி செல்ல சில்லரை வியாபாரிகள் யாரும் ஆர்வம் காட்டவில்லை.

    இன்றைய காய்கறி மொத்த விற்பனை விலை (கிலோவில்) வருமாறு:-

    தக்காளி-ரூ.15, ஆந்திரா வெங்காயம்-ரூ.11, நாசிக் வெங்காயம்-ரூ.22, சின்ன வெங்காயம்-ரூ.50, ஹாசன் உருளைக்கிழங்கு-ரூ.30, ஆக்ரா உருளைக்கிழங்கு-ரூ.25, கத்தரிக்காய்-ரூ.15, வரி கத்தரிக்காய்-ரூ.8, அவரைக்காய்-ரூ.30, பீன்ஸ்-ரூ.50, ஊட்டி கேரட்-ரூ.60, ஊட்டி பீட்ரூட்-ரூ.35, பீட்ரூட்-ரூ.25,

    முட்டை கோஸ்-ரூ.12, வெண்டைக்காய்-ரூ.7, முள்ளங்கி-ரூ.7, நூக்கல்-ரூ.35, முருங்கைக்காய்-ரூ.30, கோவக்காய்-ரூ.15, பாகற்காய்-ரூ.35, சுரக்காய்-ரூ15, புடலங்காய்-ரூ.15, நைஸ் கொத்தவரங்காய்-ரூ.35, காலி பிளவர் ஒன்று-ரூ.12, பீர்க்கங்காய்-ரூ.40, வெள்ளரிக்காய்-ரூ.20, பச்சை மிளகாய்-ரூ.40, இஞ்சி-ரூ.42, எலுமிச்சை பழம்-ரூ.100.

    தொடர் மழை காரணமாக வரத்து குறைந்துள்ளதால் தக்காளி விலை தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. இதேபோல் மற்ற காய்கறிகள் வரத்தும் கனமழையால் குறைந்துள்ளதால் விலை அதிகரித்து காணப்படுகிறது.
    ஈரோடு:

    தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு இடங்களில் லேசான மழை முதல் கனமழை பெய்து வருகிறது.

    தொடர் மழை காரணமாக காய்கறி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டு வரத்து குறைந்துள்ளது. இதனால் காய்கறி விலை தாறுமாறாக ஏறி உள்ளது. ஈரோடு வ.உ.சி பூங்காவில் தற்காலிகமாக செயல்பட்டு வரும் நேதாஜி பெரிய மார்க்கெட்டில் வெளி மாநிலங்கள் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் காய்கறிகள் வரத்து தொடர்ந்து குறைந்து வருவதால் விலை தாறுமாறாக ஏறி உள்ளது.

    கடந்த வாரத்தை காட்டிலும் இந்த வாரம் காய்கறிகளின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. கடந்த வாரம் ரூ.80-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ கத்தரிக்காய் இன்று ரூ.120-க்கு விற்கப்படுகிறது. இதேப்போல் வெண்டைக்காய் போன வாரம் ரூ.60, இந்த வாரம் ரூ.100, பீர்க்கங்காய் போன வாரம் ரூ.40, இந்த வாரம் ரூ.70, வாழைக்காய் போன வாரம் ரூ.30, இந்த வாரம் ரூ.50, கேரட் போன வாரம் ரூ.55 இந்த வாரம் ரூ.80, பீட்ரூட் போன வாரம் ரூ.40, இந்த வாரம் ரூ.50, கருப்பு அவரைக்காய் போன வாரம் ரூ.90, இந்த வாரம் ரூ.130, முருங்கைக்காய் போன வாரம் ரூ.100, இந்த வாரம் ரூ.150 -க்கும் விற்கப்பட்டது.

    தொடர்ந்து தக்காளி விலை ஏறுமுகமாகவே இருந்து வருகிறது.

    கடந்த வாரம் ரூ.100-க்கு விற்ற தக்காளி விலை இந்த வாரம் சில்லரை விற்பனையில் ரூ.120-க்கு விற்கப்படுகிறது. தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஆந்திரா, மேச்சேரி, தாளவாடி பகுதியில் இருந்து அதிக அளவில் தக்காளி ஏற்றுமதி செய்யப்படும்.

    இந்நிலையில் தொடர் மழை காரணமாக வரத்து குறைந்துள்ளதால் தக்காளி விலை தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. இதேபோல் மற்ற காய்கறிகள் வரத்தும் கனமழையால் குறைந்துள்ளதால் விலை அதிகரித்து காணப்படுகிறது.

    காய்கறிகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
    ×