search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vellakoil"

    • பல்வேறு பகுதிகளில் இருந்து 50 விவசாயிகள் தங்களுடைய 916 மூட்டை சூரியகாந்தி விதைகளை விற்பனை செய்ய கொண்டு வந்திருந்தனா்.
    • முத்தூரில் இருந்து 8 வணிகா்கள் சூரியகாந்தி விதைகளை வாங்க வந்திருந்தனா்.

    வெள்ளகோவில்:

    வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.21.46 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது.

    இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு வள்ளிப்பட்டி, வாகரை, காவல்பட்டி, விராலிபட்டி, சுள்ளெறும்பு, கொத்தயம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 50 விவசாயிகள் தங்களுடைய 916 மூட்டை சூரியகாந்தி விதைகளை விற்பனை செய்ய கொண்டு வந்திருந்தனா். இவற்றின் எடை 45 ஆயிரத்து 87 கிலோ.ஈரோடு, சித்தோடு, நடுப்பாளையம், முத்தூரில் இருந்து 8 வணிகா்கள் சூரியகாந்தி விதைகளை வாங்க வந்திருந்தனா்.

    சூரியகாந்தி விதை கிலோ ரூ. 42.89 முதல் ரூ.51.39 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 47.52.ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ. 21.46 லட்சம் அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக விற்பனைக்கூட கண்காணிப்பாளா் சி. மகுடீஸ்வரன் தெரிவித்தாா். 

    • 1,313 மூட்டை சூரியகாந்தி விதைகளை விற்பனை செய்யக் கொண்டு வந்திருந்தனா்.
    • சூரியகாந்தி விதை கிலோ ரூ.45.49 முதல் ரூ.52.29 வரை விற்பனையானது.

    வெள்ளகோவில் :

    வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.32.53 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை நடைபெற்றது.இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு செங்காட்டூா், சீத்தப்பட்டி, அக்கரைப்பட்டி, காசிபாளையம், கன்னிவாடி உள்ளிட்ட ஊா்களில் இருந்து 67 விவசாயிகள் தங்களுடைய 1,313 மூட்டை சூரியகாந்தி விதைகளை விற்பனை செய்யக் கொண்டு வந்திருந்தனா். இவற்றின் எடை 64,892 கிலோ.காரமடை, ஈரோடு, கோபி, சித்தோடு, காங்கயத்தில் இருந்து 8 வணிகா்கள் சூரியகாந்தி விதைகளை வாங்க வந்திருந்தனா்.சூரியகாந்தி விதை கிலோ ரூ.45.49 முதல் ரூ.52.29 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.48.66.

    ஒட்டுமொத்த விற்பனை தொகை ரூ.32.53 லட்சம் அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக விற்பனைக் கூட கண்காணிப்பாளா் சி.மகுடீஸ்வரன் தெரிவித்தாா்.

    வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.1.27 கோடிக்கு பருத்தி விற்பனை நடைபெற்றது.இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு கோவை, திருப்பூா், ஈரோடு, திருச்சி, கரூா், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 598 விவசாயிகள் தங்களுடைய 5,675 பருத்தி மூட்டைகளை விற்பனை செய்ய கொண்டு வந்திருந்தனா். மொத்த வரத்து 1,778 குவிண்டால்.

    திருப்பூா், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களை சோ்ந்த 23 வணிகா்கள் பருத்தியை வாங்க வந்திருந்தனா். பருத்தி விலை குவிண்டால் ரூ.6,250 முதல் ரூ.8,089 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.7,350. ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.1.27 கோடி என்று விற்பனைக்கூட அதிகாரிகள் தெரிவித்தனா்.ஏலத்துக்கான ஏற்பாடுகளை திருப்பூா் விற்பனைக்குழு முதுநிலைச் செயலாளா் (பொறுப்பு) கண்ணன், விற்பனைக்கூட கண்காணிப்பாளா் சிவகுமாா் ஆகியோா் செய்திருந்தனா்.

    • 116 விவசாயிகள் தங்களுடைய 1,305 மூட்டை கொப்பரைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.
    • கொப்பரை அதிகபட்சமாக கிலோ ரூ. 60 முதல் ரூ. 83.15 வரை விற்பனையானது.

    வெள்ளகோவில் :

    வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 49.20 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு அரியலூா், கரூா், அப்பியம்பட்டி, மாம்பாடி, தாராபுரம், சின்னதாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 116 விவசாயிகள் தங்களுடைய 1,305 மூட்டை கொப்பரைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இவற்றின் எடை 67 டன்.

    காங்கயம், வெள்ளக்கோவில், நஞ்சை ஊத்துக்குளி, ஊத்துக்குளி ஆா்.எஸ், சிவகிரி ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 10 வணிகா்கள் கொப்பரையை வாங்க வந்திருந்தனா்.இதில் கொப்பரை அதிகபட்சமாக கிலோ ரூ. 60 முதல் ரூ. 83.15 வரை விற்பனையானது. சராசரி விலை கிலோ ரூ. 78.35. ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ. 49.20 லட்சம் அந்தந்த விவசாயிகளின் வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்டதாக விற்பனைக்கூட கண்காணிப்பாளா் சி.மகுடீஸ்வரன் தெரிவித்தாா். 

    • 29ந் தேதி வசூல் ஆன ரூ.2 லட்சம் ரொக்கம் மற்றும் பைக் ஆர்சி புக் ஆகியவற்றை டேபிளில் வைத்து பூட்டிவிட்டார்.
    • பைனான்சின் கண்ணாடி கதவை மட்டும் பூட்டிவிட்டு சட்டரை பூட்டாமல் வெளியே சென்று விட்டார்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் அருகே உள்ள தாசவநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த கந்தசாமி மகன் சுபாஷ். இவர் வெள்ளகோவிலில், பழைய பஸ் நிலையம் அருகே ஆட்டோ பைனான்ஸ் நடத்தி வருகின்றார்.

    இவர் ஜூலை மாதம் 29ந் தேதி வசூல் ஆன ரூ.2 லட்சம் ரொக்கம் மற்றும் பைக் ஆர்சி புக் ஆகியவற்றை டேபிளில் வைத்து பூட்டிவிட்டு, பைனான்சின் கண்ணாடி கதவை மட்டும் பூட்டிவிட்டு சட்டரை பூட்டாமல் வெளியே சென்று விட்டார். பிறகு வந்து பார்த்தபோது கண்ணாடி கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார், உடனே உள்ளே சென்று டேபிளை பார்க்கும்போது டேபிளினுடைய பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த ரூ.2 லட்சம் மற்றும் ஆர் .சி. புக் காணாமல் போனது தெரிய வந்தது. உடனே அக்கம் பக்கம் விசாரித்து பார்த்தும் தகவல் எதுவும் கிடைக்கவில்லை,

    இது குறித்து வெள்ளகோவில் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ரமாதேவி, சப் இன்ஸ்பெக்டர் ராஜமூர்த்தி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருந்த ஈரோடு, எல்லப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் மகன் சந்தோஷ் (வயது 24)என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த ரூ.10 ஆயிரம் மற்றும் இந்த திருட்டுக்கு பயன்படுத்திய பைக்கை கைப்பற்றி சந்தோஷை காங்கேயம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

    இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட தலைமறைவாக இருந்த 2 பேரை வெள்ளகோவில் போலீசார் தேடி வந்த நிலையில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது பைக்கில் வந்த நபரை பிடித்து விசாரித்த போது வெள்ளகோவிலில் ஜூலை மாதம் நடந்த திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட ஈரோடு, கோணவாய்க்கால் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் மணிகண்டன் (38) என்பது தெரியவந்தது .உடனே மணிகண்டனை கைது செய்து காங்கயம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இவர் மீது திருப்பூர் ஈரோடு, சேலம், மதுரை, விழுப்புரம், கரூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் 30க்கும் மேற்பட்ட வீடு புகுந்து திருடிய வழக்கு நிலுவையில் உள்ளது.

    நீதிபதி திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட மணிகண்டனை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன் பேரில் தற்போது கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் .இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட மற்றும் ஒருவரை வெள்ளகோவில் போலீசார் தேடி வருகின்றனர்.

    • முருகனுக்கு சிறப்பு அலங்கார அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
    • 6 நாட்களுக்கு தினசரி மாலை 6.30 மணியளவில் சிறப்பு வழிபாடு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில், எல்.கே.சி நகர் புற்றுக்கண் ஆனந்த விநாயகர் கோவிலில் கந்த சஷ்டி விழா முதல் நாளான நேற்று முருகனுக்கு சிறப்பு அலங்கார அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

    நேற்று செவ்வாய் கிழமை முதல் தொடர்ந்து 6 நாட்களுக்கு தினசரி மாலை 6.30 மணியளவில் சிறப்பு வழிபாடு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.இதற்கான ஏற்பாடுகளை அப்பகுதி பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

    • 32 ஆயிரத்து 986 கிலோ தேங்காய் பருப்பு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
    • தேங்காய் பருப்பு அதிகபட்சமாக ரூ. 78.95க்கும், குறைந்தபட்சம் ரூ.63.15க்கும் கொள்முதல் செய்தனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம்தோறும் செவ்வாயன்று தேங்காய் பருப்பு வியாழனன்று சூரியகாந்தி விதை ஏலம் நடைபெறும்.

    இந்த ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு வாணியம்பாடி, மூலனூர், கரூர், ஸ்ரீரங்கம், திருச்சி பகுதி விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதையை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். நேற்று செவ்வாய்கிழமை 76விவசாயிகள் கலந்து கொண்டு 32 ஆயிரத்து 986 கிலோ தேங்காய் பருப்பு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில், வெள்ளகோவில், காங்கேயம், முத்தூர், ஊத்துக்குளி பகுதியைச் சேர்ந்த 10 வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்சமாக ரூ. 78.95க்கும், குறைந்தபட்சம் ரூ.63.15க்கும் கொள்முதல் செய்தனர், நேற்று மொத்தம் ரூ.23லட்சத்து 48ஆயிரத்து 82க்கு வணிகம் நடைபெற்றது. இத்தகவலை வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சி. மகுடேஸ்வரன் தெரிவித்தார்.

    • 90 விவசாயிகள் 20 டன் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
    • ஒரு கிலோ முருங்கை ரூ.15 முதல் ரூ.25 வரைக்கும் கொள்முதல் செய்தனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவிலில் வாரச்சந்தையையொட்டி ஞாயிற்றுக்கிழமைதோறும் முருங்கைக்காய் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த கொள்முதல் நிலையத்திற்கு வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.

    அந்தவகையில் இந்த வாரம் 90 விவசாயிகள் 20 டன் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கயம், மூலனூர் பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் கலந்துகொண்டு ஒரு கிலோ செடிமுருங்கை ரூ.15 முதல் ரூ.17 வரைக்கும், மரம் முருங்கை ரூ.12 முதல் ரூ.15 வரைக்கும், கரும்பு முருங்கை ரூ.18 முதல் ரூ.25 வரைக்கும் கொள்முதல் செய்தனர்.

    • கம்பெனிகளுக்கு வேலை ஆட்களை கூட்டிச்செல்லும் வாகனங்கள் ஏராளமாக வந்து செல்கின்றன.
    • முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் நகரில் திருச்சி -கோவை பிரதான சாலைகள் முக்கிய வழித்தடமாக உள்ளது. வெள்ளகோவில் வழியாக ஏராளமான கனரக மற்றும் சுற்றுலா வாகனங்கள், வெளியூர்களிலிருந்து பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள், திருப்பூர்,கரூர் போன்ற பகுதியில் உள்ள பனியன் கம்பெனிகளுக்கு வேலை ஆட்களை கூட்டிச்செல்லும் வாகனங்கள் ஏராளமாக வந்து செல்கின்றன. இப்பகுதியில் 300க்கும் மேற்பட்ட நூற்பாலைகள் உள்ளன. பிரசித்தி பெற்ற வீரக்குமாரசாமி கோவில், நாட்ராயசாமி கோவில், சோளீஸ்வரர்கோவில் ஆகியவை உள்ளன.

    இப்பகுதியில் உள்ள நூற்பாலைகளில் ஆயிரக்கணக்கான வட மாநில தொழிலாளர்கள் வந்து தங்கி வேலை செய்து வருகின்றனர். இதனால் வெள்ளகோவில் பகுதியில் நடைபெறும் குற்ற சம்பவங்கள், வாகன விபத்துக்கள், போக்குவரத்து இடையூறுகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்கும் நோக்கத்தில் வெள்ளகோவில் நகர் முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

    வெள்ளகோவில் அருகே கார் மீது டெம்போ மோதி கேபிள் டிவி ஆபரேட்டர் பலியானார்.

    வெள்ளகோவில்:

    கோவை பாப்பநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் அன்புராஜ்(65). கேபிள் டி.வி.ஆபரேட்டர். இவரது மனைவி ஞானமணி(60). இவர்கள் நாமக்கல் மாவட்டம் மோகனூரில் ஒரு விஷேச வீட்டிற்கு காரில் சென்றனர். இவர்களுடன் அன்புராஜ் உறவினர் ஆறுமுகம் (70). அவரது மனைவி ஜெகதீஸ்வரி(62) ஆகியோரும் சென்றனர். இந்த கார் காங்கயம்-வெள்ளகோவில் சாலையில் எல்லை காட்டு வலசு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தது.

    அப்போது எதிரே டெம்போ வந்தது. திடீரென காரும் டெம்போவும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் அன்புராஜ் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ஞானமணி, ஆறுமுகம், ஜெகதீஸ்வரி ஆகியோர் காயம் அடைந்தனர். அவர்கள் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து வெள்ளகோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே அரசு கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    வெள்ளக்கோவில்:

    திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் முத்தூர் ரோடு அருகே உள்ளது கொங்கு நகர். இந்த பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகள் லாவண்யா (வயது 20). கங்கயம் அரசு கல்லூரியில் பி.எஸ்.சி. இறுதி ஆண்டு படித்து வந்தார்.

    நேற்று வழக்கம்போல் லாவண்யா கல்லூரிக்கு சென்றார். கல்லூரி முடிந்து மதியம் 3 மணிக்கு மேல் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டில் யாரும் இல்லை. வீட்டின் கதவை தாழ்போட்ட லாவண்யா தனது துப்பாட்டாவில் தூக்குப்போட்டார்.

    சிறிது நேரத்தில் அவர்களது பெற்றோர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது லாவண்யா தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே லாவண்யாவை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்.

    இதுகுறித்து வெள்ளக்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாவண்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காங்கயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மாணவி தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வெள்ளகோவில் அருகே வேன் மோதி அசாம் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் அருகே வேன் மோதி அசாம் வாலிபர் பலியானார். அவரது நண்பர் படுகாயம் அடைந்தார்.

    அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் அலாதீன் (20) இவரது நண்பர் அஜ்ராவுல் அலோன் (20). இவர்கள் இருவரும் திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள முத்தூர் தொட்டிய பாளையத்தில் தங்கி அங்குள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர்.

    நேற்று இரவு 8.30 மணிக்கு இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் முத்தூர் கடை வீதிக்கு வந்தனர். பின்னர் ஊருக்கு திரும்பினார்கள். அலாதீன் மோட்டார் சைக்கிளை ஓட்ட அஜ்ராவுல் அலோன் பின்னால் உட்கார்ந்து இருந்தார்.

    முத்தூர் - கொடுமுடி சாலையில் மேட்டுக்கடை என்ற இடத்தில் சென்ற போது அந்த வழியாக வந்த வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அலாதீன் தலையில் பலத்த அடிபட்டு மூளை சிதறி சம்பவ இடத்திலே இறந்தார்.

    அவரது நண்பர் அஜ்ராவுல் அலோன் பலத்த காயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு காங்கயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். விபத்து குறித்து வெள்ளகோவில் சப்-இன்ஸ்பெக்டர் அன்புராஜ் விசாரணை நடத்தி வருகிறார்.

    வெள்ளகோவில் வடமாநில மில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் நாட்ராயசாமி கோவில் அருகே தனியார் மில் உள்ளது. இங்கு வடமாநில தொழிலாளர்கள் தங்கி வேலை செய்து வருகிறார்கள். இதில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சதானந்த தாஸ் (வயது 26) என்பவரும் வேலை செய்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று மில் விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் கிடைத்ததும் வெள்ளகோவில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சதானந்த தாசுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காங்கயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சதானந்த தாஸ் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×