என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
முகப்பு » vendors protest
நீங்கள் தேடியது "vendors protest"
- தலை சுமையாக ஈடுபடும் தொழிலாளர்களை முறையாக கணக்கெடுக்க வேண்டும்.
- நிகழ்ச்சியில் சி.ஐ டி.யூ., நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
உடுமலை :
சி.ஐ.டி.யு உடுமலை நடைபாதை வியாபாரிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 2014 ஆம் ஆண்டு சாலையோர வியாபாரிகள் ஒழுங்கு சட்டத்தின் முறையை அமல்படுத்த வேண்டும். உடுமலை நகர பகுதியில் வியாபாரம் செய்யும் தள்ளுவண்டிகள், தலை சுமையாக ஈடுபடும் தொழிலாளர்களை முறையாக கணக்கெடுக்க வேண்டும்.
நடைபாதை வியாபாரிகள் அனைவருக்கும் தள்ளுவண்டி வழங்கிட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். வங்கியில் கடன் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் ,விற்பனை கூழு கூட்டத்தை குறிப்பிட்ட இடைவெளியில் நடத்த வேண்டும்.
பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வை குறைக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.இந்த நிகழ்ச்சியில் சி.ஐ டி.யூ., நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
×
X