search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Venus Williams"

    • அமெரிக்க ஓபனில் இதுவரை 100 போட்டிகளுக்கு மேல் விளையாடியுள்ளார்
    • இதுபோன்று மோசமான தோல்வியை எதிர்கொண்டது கிடையாது

    அமெரிக்கா கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் சுற்றில் வீனஸ் வில்லியம்ஸ், இத்தொடருக்கான தரவரிசை பெறாத பெல்ஜியத்தை சேர்ந்த கிரீட் மின்னென்-ஐ எதிர் கொண்டார்.

    இதில் 43 வயதான வீனஸ் வில்லியம்ஸ் 1-6, 1-6 எனத் தோல்வியடைந்தார். 2000 மற்றும் 2001-ல் அமெரிக்கா கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற வீனஸ் வில்லியம்ஸ், 100 போட்டிகளுக்கு மேல் விளையாடியுள்ளார். அதில் இதுதான் மிகவும் மோசமான தோல்வியாக பார்க்கப்படுகிறது.

    வீனஸ் வில்லியம்ஸ் ஆட்டத்தை பார்க்க ஏராளமான ரசிகர்கள் வந்திருந்தனர். ரசிகர்களின் ஆதரவு குறித்து வீனஸ் வில்லியம்ஸ் கூறுகையில் ''ரசிகர்களின் ஆதரவை பார்ப்பது மிகவும் சிறப்பாக உள்ளது. எப்போதும் ரசிகர்கள் எனக்காக இங்கே வருவார்கள் என்பது எனக்குத் தெரியும். முன்னெப்போதையும் விட இன்னும் அந்த ஆதரவைக் கொண்டிருப்பது அருமையானது'' என்றார்.

    • சுவிட்டோலினா (உக்ரைன்) 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வீனஸ் வில்லியம்சை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
    • 7-வது வரிசையில் இருக்கும் கோகோ கவூப்பூம் (அமெரிக்கா) தொடக்க சுற்றிலேயே அதிர்ச்சிகரமாக தோற்றார்.

    லண்டன்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நேற்று தொடங்கியது.

    விம்பிள்டன் பட்டத்தை 5 முறை வென்ற முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா) முதல் சுற்றிலேயே வெளியேறினார்.

    சுவிட்டோலினா (உக்ரைன்) 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வீனஸ் வில்லியம்சை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    இதேபோல 7-வது வரிசையில் இருக்கும் கோகோ கவூப்பூம் (அமெரிக்கா) தொடக்க சுற்றிலேயே அதிர்ச்சிகரமாக தோற்றார். சோபியா கெனின் 6-4, 4-6, 6-2 என்ற கணக்கில் சக நாட்டைச் சேர்ந்த கவூப்பை வீழ்த்தினார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த மற்ற ஆட்டங்களில் முதல்நிலை வீராங்கனையான இகாஸ்வியா டெக் (போலந்து), 4-வது வரிசையில் உள்ள பெகுலா (அமெரிக்கா), கரோலினோ கார்சியா (பிரான்ஸ்) ஆகியோர் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 4-வது வரிசையில் உள்ள கேஸ்பர் ரூட் (நார்வே) தொடக்க சுற்றில் பிரான்சை சேர்ந்த லவுரென்ட் லோகோலியை எதிர்கொண்டார். இதில் கேஸ்பர் ரூட் 6-1, 5-7, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வென்றார்.

    • உண்மையைச் சொல்லபோனால் காயத்தால் நான் மிகவும் துன்பத்தை அனுபவித்தேன்.
    • ஓடுவதற்கு முன்னால் நடைப்பயிற்சி செய்ய வேண்டும். நான் கூடிய விரைவில் ஓட்டப்பயிற்சியில் ஈடுபடுவேன்.

    7 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற வீனஸ் வில்லியம்சுக்கு இப்போது 42 வயது ஆகிறது. கடந்த மாதம் நடந்த ஆஸ்திரேலிய ஓபனில் வைல்டு கார்டு வாய்ப்பை பெற்று விளையாடியபோதிலும் அதற்கு முன் ஆக்லாந்து போட்டியில் பங்கேற்பதற்காக பயிற்சியில் ஈடுபட்ட போது காயம் காரணமாக போட்டியிலிருந்து வீனஸ் விலக வேண்டிய சூழல் ஏற்பட்டது.

    இந்நிலையில், அவர் தனக்கு ஏற்பட்ட காயம் குறித்து அப்டேட்டை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவரது யூ-டியூப் சேனலில் அவர் கூறியிருப்பதாவது:

    உண்மையைச் சொல்லபோனால் காயத்தால் நான் மிகவும் துன்பத்தை அனுபவித்தேன். இப்போது எனக்கு நீண்ட கால காயம் ஏற்பட்டுள்ளது. இப்போதைக்கு என்னால் மீண்டு வர முடியாது.

    சுமார் ஒரு வாரத்திற்குப் பிறகு, நான் எனது மருத்துவர்களுடான சந்திப்புகளை அமைக்கத் தொடங்கினேன். மேலும் எனக்கு அடுத்தது என்ன என்பதைப் பற்றி சிந்திக்கத் தொடங்கினேன். நான் திரும்பி வருவதற்கு எவ்வளவு நேரம் ஆகும் என்பதைத் தெரிந்துகொள்ள முயற்சிக்கிறேன்.

    ஓடுவதற்கு முன்னால் நடைப்பயிற்சி செய்ய வேண்டும். நான் கூடிய விரைவில் ஓட்டப்பயிற்சியில் ஈடுபடுவேன். ஆனால், இப்போதைக்கு நான் டென்னிஸ் விளையாட மாட்டேன் என்று யூ-டியூப் சேனலில் அவர் தெரிவித்துள்ளார்.

    5 முறை விம்பிள்டன் ஓபனிலும், 2 முறை யு.எஸ். ஓபனிலும் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் வீனஸ் வில்லியம்ஸ். மகளிர் ஒற்றையர் பிரிவில் சர்வதேச தரவரிசையில் அவர் 664ஆவது இடத்தில் உள்ளார்.

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதி போட்டியில் நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட செரினா வில்லியம்ஸ்க்கு அமெரிக்க டென்னிஸ் சங்கம் ரூ.12 லட்சம் அபராதம் விதித்துள்ளது. #USOpen #SerenaWilliams
    வாஷிங்டன் :

    நேற்று நடைபெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் 6-2, 6-4 எனும் நேர் செட்டில் செரீனாவை வீழ்த்தி நவோமி ஒசாகா கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார்.

    இந்த போட்டியின் போது நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட செரீனா வில்லியம்ஸ் மிகவும் கோபத்துடன் நடுவரை தீட்டி தீர்த்தார். அவர் 3 விதிமுறை மீறலில் ஈடுபட்டார்.

    முதலில் அவரது பயிற்சியாளர் சைகை மூலம் ஆட்டம் நுணுக்கம் பற்றி விவரித்தார். ஏடிபி போட்டிகளில் பார்வையாளர் வரிசையில் இருந்து பயிற்சியாளர் ஆலோசனைகள் தெரிவிக்கலாம். ஆனால் கிராண்ட்சிலாம் போட்டிகளில் அதற்கு அனுமதி இல்லை.

    2-வதாக டென்னிஸ் ராக்கெட்டை வீசி எறிந்தது. செரீனாவின் இந்த செயலுக்காக நடுவர் பெனால்டி நடவடிக்கை எடுத்து செரினாவின் புள்ளியை குறைத்தார்.

    3-வதாக நடுவர் ராமோஸ் ஒரு பொய்யர். என்னிடம் இருந்து மன்னிப்பை எதிர்பார்க்கிறார், என்னுடையை புள்ளியை பறித்த அவர் ஒரு திருடர் என கோபத்தில் நடுவரை கடுமையான வார்த்தைகளால் திட்டி தீர்த்தார்.

    இந்நிலையில், செரினாவின் இந்த நடவடிக்கைகளை கண்டித்துள்ள அமெரிக்க டென்னிஸ் சங்கம் அவருக்கு அபராதம் விதித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    நடுவரை நோக்கி கடினமான வார்த்தைகளை பயன்படுத்தியதற்கு ரூ.7 லட்சத்து 21 ஆயிரம் (10 ஆயிரம் அமெரிக்க டாலர்), பயிற்சியார் சைகை செய்ததற்கு ரூ. 2 லட்சத்து 88 ஆயிரம் (4 ஆயிரம் அமெரிக்க டாலர்), டென்னிஸ் ராக்கெட்டை வீசி எரிந்ததற்கு ரூ. 2 லட்சத்து 16 ஆயிரம் (3 ஆயிரம் அமெரிக்க டாலர்) என மொத்தம் ரூ. 12 லட்சம் அபராதம் விதித்துள்ளது.



    அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதி போட்டிக்கு முன்னேறிய செரினா வில்லியம்ஸ்க்கு பரிசுத்தொகையாக ரூ.13 கோடி தரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. #USOpen #SerenaWilliams
    அமெரிக்கா கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரில் செரீனா வில்லியம்ஸ், வீனஸ், ஸ்டீபன்ஸ் முதல் சுற்றில் வெற்றி பெற்றனர். #USOpen2018
    கிராண்ட் ஸ்லாம் டென்னிஸின் கடைசி தொடரான அமெரிக்கா ஓபன் நேற்று தொடங்கியது. இன்றைய 2-வது நாள் ஆட்டத்தில் முன்னணி வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் முதல் சுற்றில் எம் எலினேட்டை எதிர்கொண்டார். இதில் செரீனா வில்லியம்ஜ் 6-4, 6-0 என எளிதாக வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு ஆட்டத்தில் 9-ம் நிலை வீராங்கனையான ஜூலியா ஜார்ஜஸ் 6-2, 6(5)-7(7), 6-2 என கலின்ஸ்கயாவை வீழ்த்தினார். 8-ம் நிலை வீராங்கனை பிளிஸ்கோவோ 6-4, 7(7)-6)4) என வெற்றி பெற்றார். 16-ம் நிலை வீராங்கனையான வீனஸ் வில்லியம்ஸ் 6-3, 7-5, 6-3 என வெற்றி பெற்றார். 3-ம் நிலை வீராங்கனை ஸ்லோன் ஸ்டீபன்ஸ் ஸ்டீபன்ஸ் 6-1, 7-5 என வெற்றி பெற்றார்.

    7-ம் நிலை வீராங்கனை ஸ்விடோலினா, 15-ம் நிலை வீராங்கனை மெர்ட்டென்ஸ், 12-ம் நிலை வீராங்கனை முகுருசா ஆகியோரும் வெற்றி பெற்றனர்.
    அமெரிக்காவில் நடைபெற்ற சர்வதேச டென்னிஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவு கால்இறுதி ஆட்டத்தில் வீனஸ் வில்லியம்ஸ் தோல்வி அடைந்து வெளியேறினார். #VenusWilliams
    கலிபோர்னியா:

    அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் சிலிகான் வாலி கிளாசிக் சர்வதேச டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு கால்இறுதி ஆட்டம் ஒன்றில் உலகின் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா), உலக தரவரிசையில் 50-வது இடத்தில் உள்ள மரியா சக்காரியை (கிரீஸ்) எதிர்கொண்டார்.



    இதில் வீனஸ் வில்லியம்ஸ் 4-6, 6-7 (2-7) என்ற நேர்செட்டில் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். 38 வயதான வீனஸ் வில்லியம்ஸ் 2 செட்டிலும் முதலில் முன்னிலை பெற்றாலும் அதனை கடைசி வரை தக்க வைத்து கொள்ள முடியவில்லை. இந்த ஆட்டம் 1 மணி 43 நிமிடம் நடந்தது. அரைஇறுதியில் மரியா சக்காரி, அமெரிக்க வீராங்கனை டானிலே காலின்சை சந்திக்கிறார். #VenusWilliams
    விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் 5 முறை சாம்பியனான அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். #Wimbledon #VenusWilliams
    லண்டன்:

    ‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் தென்ஆப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சன் 6-3, 7-5, 7-5 என்ற நேர் செட் கணக்கில் கோல்ஸ்கிரீபரை (ஜெர்மனி) விரட்டி 4-வது சுற்றை எட்டினார்.

    மற்றொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) 6-3, 7-5, 6-2 என்ற நேர் செட் கணக்கில் லினார்ட் ஸ்டிரப்பை (ஜெர்மனி) வீழ்த்தி அடுத்த சுற்றை எட்டினார்.



    ஆண்கள் இரட்டையர் 2-வது சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, பிரான்சின் ரோஜர் வாசெலின் ஜோடி 4-6, 6-7 (4-7), 1-2 என்ற செட் கணக்கில் பிரிடெரிக் நீல்சென் (டென்மார்க்)- ஜோ சிலிஸ்பரி (இங்கிலாந்து) இணைக்கு எதிராக பின்தங்கி இருந்த போது, போபண்ணா காயமடைந்தார். இதனால் அவர் பாதியில் விலக, நீல்சென்-சிலிஸ்பரி ஜோடி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

    பெண்கள் ஒற்றையர் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 5 முறை சாம்பியனான வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா) 2-6, 7-6 (7-5), 6-8 என்ற செட் கணக்கில் நெதர்லாந்தின் கிகி பெர்டென்சிடம் அதிர்ச்சிகரமாக தோற்று வெளியேறினார்.

    அதே சமயம் 7 முறை சாம்பியனான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் தன்னை எதிர்த்த மிலாடெனோவிச்சை (பிரான்ஸ்) 7-5, 7-6 (7-2) என்ற நேர் செட்டில் வீழ்த்தி கால்இறுதிக்கு முந்தைய 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    முன்னதாக நேற்று முன்தினம் இரவு நடந்த 2-வது சுற்றில் நடப்பு சாம்பியன் கார்பின் முகுருஜா (ஸ்பெயின்) 7-5, 2-6, 1-6 என்ற செட் கணக்கில் அலிசன் வான் உய்ட்வான்கிடம் (பெல்ஜியம்) மண்ணை கவ்வினார். #wimbledon2018 #VenusWilliams
    பிரெஞ்ச் ஓபனில் பெண்களுக்கான இரட்டையர் பிரிவில் விளையாடுவதற்காக செரீனா - வீனஸ் ஜோடிக்கு வைல்டுகார்டு வழங்கப்பட்டுள்ளது. #FrenchOpen
    கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் நாளைமறுநாள் (25-ந்தேதி) தொடங்குகிறது. இதில் 1999 மற்றும் 2010-ல் பெண்கள் இரட்டையர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற செரீனா வில்லியம்ஸ் - வீனஸ் வில்லியம்ஸ் ஜோடி விளையாடுகிறது. இவர்களுக்கு போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் வைல்டுகார்டு அளித்துள்ளனர். இந்த ஜோடி 2013-ம் ஆண்டு முதல் சுற்றிலும், 2016-ல் 3-வது சுற்றிலும் தோல்வியடைந்து வெளியேறியது.

    இருவரும் இணைந்து 14 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளனர். கடைசியாக இவர்கள் 2016-ல் விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றிருந்தனர். அதன்பின் இணைந்து விளையாடவில்லை. தற்போது மீண்டும் இணைந்துள்ளனர்.



    செரீனா 2017-ம் ஆண்டின் முதல் தொடரான ஆஸ்திரேலியா ஓபனில் விளையாடி சாம்பியன் பட்டம் வென்றார். அதன்பின் கர்ப்பம் காரணமாக மற்ற மூன்று, இந்த வருடத்தின் ஆஸ்திரேலியா ஓபனில் விளையாடவில்லை. குழந்தை பெற்ற பிறகு முதன்முறையாக கிராண்ட் ஸ்லாம் தொடரில் களம் இறங்குகிறார்.
    ×