என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Vertigo"
- கழுத்தெலும்பு தேய்மானம் என்பது சித்த மருத்துவத்தில் 'சகன வாதம்' எனப்படும்.
- உடற்பருமன் இருந்தாலும் கழுத்துவலி வரும்.
கழுத்தெலும்பு தேய்மானம் என்பது சித்த மருத்துவத்தில் 'சகன வாதம்' எனப்படும். செர்விகல் ஸ்பாண்டிலைட்டிஸ்' என்பது இதன் மருத்துவப்பெயர். கழுத்து முள்ளெலும்புகளுக்கு இடையில் உள்ள 'டிஸ்க்' அல்லது சவ்வு தேய்ந்து போவது அல்லது விலகி விடுவது போன்ற காரணங்களால் கழுத்து வலி வருகிறது.
தொழில் ரீதியாக ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை பார்ப்பது, எடுத்துக்காட்டாக, கம்ப்யூட்டர் டெய்லரிங், டிரைவிங் போன்ற வேலைகளில் தொடர்ச்சியாக ஈடுபடுவது. இரு சக்கர வாகனங்களை ஓட்டிச் செல்லும்போது செல்போனில் பேசிக்கொண்டு செல்வது மற்றும் தொடர்ச்சியாக பயணம் செய்வதும் கழுத்துவலியை வரவழைத்து விடும்.
உடற்பருமன் இருந்தாலும் கழுத்துவலி வரும். இந்த நோயின் ஆரம்பத்தில் கழுத்தில் மட்டும் வலி ஏற்படும். பிறகு தோள்பட்டைக்கு வலி பரவும். கைகளில் குடைவது போல் வலிக்கும். விரல்கள் வரை வலி பரவக்கூடும். சிலருக்குக் கை, விரல்கள் மரத்துப்போவதும் உண்டு. நாளாக ஆக கழுத்தைத் திருப்பும் போது கழுத்து வலியுடன், தலைச்சுற்றலும் ஏற்படும்.
வாழ்க்கை முறை:
எப்போதும் நேராக நிமிர்ந்து உட்கார வேண்டும். நீண்ட நேரம் உட்காரும் போது அடிக்கடி கழுத்தை மெதுவாக வலது, இடது பக்கம் திருப்ப வேண்டும். அதுபோன்று மேலேயும் கீழேயும், அசைக்க வேண்டும். மிருதுவான சிறிய தலையணையை பயன்படுத்த வேண்டும். உடல் பருமனை குறைக்க வேண்டும்.
சித்த மருத்துவம்:
1) அமுக்கிரா சூரணம் 1 கிராம், ஆறுமுகச் செந்தூரம் 200 மி.கி., சிவனார் அமிர்தம் 200 மி.கி., முத்துச் சிப்பி பற்பம் 200 மி.கி., குங்குலிய பற்பம் 200 மி.கி. இவைகளை தேன் அல்லது வெந்நீரில் இருவேளை உணவுக்கு பின் சாப்பிட வேண்டும்.
2) அமுக்கரா லேகியம் அல்லது தண்ணீர் விட்டான் கிழங்கு லேகியம் 1 முதல் 2 கிராம் வீதம் காலை, இரவு இருவேளை சாப்பிட வேண்டும்.
3) தண்டுவட பிரச் சினைகளுக்கு எண்ணெய் மசாஜ் மற்றும் வர்ம முறை மசாஜ் மிகவும் சிறந்தது. இதற்காக வாத கேசரி தைலம், விடமுட்டி தைலம், சுக்கு தைலம், உளுந்து தைலம் இவைகளில் ஏதேனும் ஒன்றை மேலி ருந்து கீழ் நோக்கி நன்றாக தேய்த்து விட வேண்டும். வெந்நீரில் குளிப்பது மிகவும் சிறந்தது.
4) வாத மடக்கி, வாத நாராயணன், தழுதாழை, நொச்சி, முடக்கத்தான், பழுத்த எருக்கம் இலை இவை களை, ஆமணக்கு எண்ணெய்யில் வதக்கி வலியுள்ள இடங்களில் ஒத்தடமிட வேண்டும். 5)உணவில் கால்சியம், வைட்டமின் டி சத்து அதிகம் உள்ள பால், தயிர், முட்டை, மீன், இறைச்சி, பசலைக் கீரை, முருங்கைக்கீரை, பிரண்டைத் தண்டு, பாலக் கீரை, உளுந்து, வெந்தயம், பாதாம், வால்நட், எலும்பு சூப் இவைகளை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
Vertigo எனப்படும் தலைசுற்றல், மயக்கம். சிலவகை பிரிவுகள் தானாகவே சரியாகும். இது Vertigo தான் என்பதனை எப்படி உணருவது? Vertigo வின் முக்கிய காரணம் உள் காது பிரச்சினைதான். நரம்பு மண்டல செயல்பாட்டின் முறையின்மை காரணமாகவும் இருக்கலாம்.
Vertigoவின் அறிகுறிகள்:
* எதிரிலுள்ளவை வேகமாய் சுற்றுவது போல் தோன்றுதல்
* உடல் நிலை தடுமாறுதல்
* ஒரு பக்கமாய் இழுப்பது போல் இருத்தல்
* வயிற்று பிரட்டல்
* வாந்தி,
* அதிக வியர்வை,
* தலைவலி,
* காதில் சத்தம் (அ) காது கேளாமை
ஆகியவை ஆகும்.
உள் காது பாதிப்பு வீக்கம், கிருமி, தாக்குதலில் ஏற்பட்ட அடி, மருந்தின் நச்சு ஆகியவைகளின் காரணமாக இருக்கலாம். மேலும் சில மருத்துவ காரணங்கள் இருக்கலாம்.
முறையான மருத்துவ பரிசோதனையும், சிகிச்சையும் மிக அவசியம். கூடவே யோகா முறையில் இதற்கு மிகச் சிறந்த முன்னேற்றம் அளிக்க முடிகின்றதனை அனுபவ ரீதியாக காண முடிவதால் முறையான யோகா பயிற்சியாளரிடம் பயிற்சி பெறவும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்