என் மலர்
நீங்கள் தேடியது "vetri maaran"
- விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு தொடர்ந்து பல இடங்களில் நடைபெற்றது.
- திரைப்படம் வருகிற டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகவுள்ளது
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி இணைந்து நடித்து கடந்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் விடுதலை. இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்த நிலையில், படத்திற்கு எதிர்பார்ப்பைக் கூட்டும் வகையில் முதல் பாகத்தின் இறுதியில் இரண்டாம் பாகத்தில் நடக்கும் சில காட்சிகளை வைத்திருந்தார் வெற்றிமாறன்.
இதையடுத்து, விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு தொடர்ந்து பல இடங்களில் நடைபெற்றது. இதில் விஜய் சேதுபதி, சூரி, எஸ்.ஜே சூர்யா மற்றும் மஞ்சு வாரியர், அட்டகத்தி தினேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
திரைப்படம் வருகிற டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டப்பிங் பணிகள் இன்று ஆரம்பித்தது. இதில் விஜய் சேதுபதி, சூரி, போஸ் வெங்கட் ,வெற்றி மாறன் கலந்துக்கொண்டனர். இதுக்குறித்த புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- விடுதலை இரண்டாம் பாகத்தை இயக்குநர் வெற்றிமாறன் இயக்கியுள்ளார்.
- விடுதலை 2 திரைப்படம் இந்தாண்டு டிசம்பர் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் விடுதலை. இந்தப் படத்தில் சூரி, விஜய் சேதுபதி நடித்திருந்தனர். இந்தப் படத்தின் முதல் பாகத்தில் சூரி, விஜய் சேதுபதியுடன் கௌதம் வாசுதேவ் மேனன், சேத்தன், பவானி ஸ்ரீ, இளவரசு போன்ற நடிகர்கள் நடித்திருந்தனர்.
சூரியின் திரைப்பயணத்தில் இப்படம் திருப்பு முனையாக அமைந்தது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பல்வேறு தரப்பினரால் பாராட்டப்பட்டது. இளையராஜாவின் இசையில் வெளியான பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இதைத் தொடர்ந்து விடுதலை இரண்டாம் பாகத்தை இயக்குநர் வெற்றிமாறன் இயக்கியுள்ளார். இதிலும் சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், அட்டக்கத்தி தினேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். விடுதலை 2 திரைப்படம் இந்தாண்டு டிசம்பர் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில், விடுதலை 2 படத்தின் டிரெய்லர் வெளியிட்டு விழா சென்னையில் நடைப்பெற்று வருகிறது. படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டது.
படத்தின் டிரெய்லர் காட்சிகள் மிகவும் விறுவிறுப்பாக அமைந்துள்ளது. இந்த பாகத்தில் விஜய் சேதுபதியில் இளம் வாழ்க்கையை காட்சி படுத்தியுள்ளனர். டிரெய்லர் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இளையராஜா இசையில் இந்தப் படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- மஞ்சு வாரியரும் அவ்வளவு அற்புதமாக நடிச்சிருக்காங்க.
- விடுதலை படம் உங்க எல்லோருக்கும் திருப்திகரமான படமாக அமையம் என்பதை நம்புகிறேன்.
இயக்குனர் வெற்றிமாறன் விடுதலை இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார். இதில் சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், அட்டக்கத்தி தினேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். 'விடுதலை 2' திரைப்படம் அடுத்த மாதம் 20-ந் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில், 'விடுதலை 2' படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது. படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டது. படத்தின் டிரெய்லர் காட்சிகள் மிகவும் விறுவிறுப்பாக அமைந்துள்ளது. இந்த பாகத்தில் விஜய் சேதுபதியின் இளம் வாழ்க்கையை காட்சி படுத்தியுள்ளனர். டிரெய்லர் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிகழ்ச்சியில் நடிகர் சூரி பேசியதாவது:- சேது மாமா ஐ லவ் யூ மாமா... படம் பார்த்துட்டேன். படம் பார்த்துவிட்டு சொன்னேன் காதல் காட்சி பண்ணியிருக்கார். வேற லெவல். அதாவது டைலாக் பேசி ஆக்ஷன் பண்ணி நடிச்சிடலாம். ஒரு பத்து செகண்ட் ஒரு லவ்வ வந்து லவ் பண்ணி நம்மள கட்டுப்படுத்துவது பெரிய விஷயம். ஆனா ஒரு சீன் முழுவதும் மஞ்சு மேம் மற்றும் மாமா சேர்ந்து டைலாக்கை பேசாம ஒரு லவ்வ எப்படி சொல்றது... என்ன உனக்கு புடிச்சிருக்கா என கேட்கறதுக்கு அவர் நடிச்சது மிகப்பெரிய ஆக்டிங் அது. அதைப் பாத்து வியந்துட்டேன். மஞ்சு வாரியரும் அவ்வளவு அற்புதமாக நடிச்சிருக்காங்க. லவ் யூ மாமா... மிகப்பெரிய இடத்தில இருக்க மாமா. இந்த படம் இன்னும் மேன்மேலும் மிகப்பெரிய நடிகனா கொண்டு போய் சேர்க்கும்னு நான் இறைவனை நம்புகிறேன். வாழ்த்துகள் மாமா.
அண்ணன் வெற்றிமாறன்... விடுதலைக்கு முன் சூரி, விடுதலைக்கு பின் சூரி அப்படி மாற்றி எழுதலாம். வெற்றிமாறன் என்ற யூனிவர்சிட்டில விடுதலைங்கற ஒரு டிகிரி படிச்சதுக்கு அப்புறம் தான் என்னோட வாழ்க்கையே மாறிடுச்சு. 'கருடன்', 'கொட்டுக்காளி' படத்தின் மூலம் எனக்கு வந்த பாராட்டுக்கெல்லாம் காரணம் வெற்றி சார்தான்" என்று பேசியிருக்கிறார்.
மீண்டும் இந்த விடுதலை படம் உங்க எல்லோருக்கும் திருப்திகரமான படமாக அமையம் என்பதை நம்புகிறேன் என்றார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- அவரின் இசையில் மட்டுமல்ல பேச்சுக்கள் மூலமாகவும் நிறைய விஷயங்கள் கத்துக்கிறேன்.
- இந்த படத்தோட வாத்தியார் வெற்றி மாறன்.
இயக்குனர் வெற்றிமாறன் விடுதலை இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார். இதில் சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், அட்டக்கத்தி தினேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். 'விடுதலை 2' திரைப்படம் அடுத்த மாதம் 20-ந் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில், 'விடுதலை 2' படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது. படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டது. படத்தின் டிரெய்லர் காட்சிகள் மிகவும் விறுவிறுப்பாக அமைந்துள்ளது. இந்த பாகத்தில் விஜய் சேதுபதியின் இளம் வாழ்க்கையை காட்சி படுத்தியுள்ளனர். டிரெய்லர் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி பேசியதாவது:- ராஜா சார் இருக்கிற காலத்தில அவருடைய இசையை ரசிக்கிறது நான் பெரும் தவம் இருந்து வாங்கி வந்த வரமாக நினைக்கிறேன். அப்படி இருக்கிற ஒருத்தனுக்கு அவருடன் பழகுறது, அவரது ஸ்டூடியோவில் இருக்குறது...
அவர்கிட்ட இருந்து ஒரு மெசேஜ் வந்தது, அவர் கிட்ட இருந்து கால் வந்தது, அவர் படத்துல வேலை பார்த்தது இப்படி பல வரன்களை வாங்கி வந்த ஒரு பெரும் பாக்கியவானாக நான் கருதுகிறேன். இந்த மேடையில் அவரோடு இருக்கறதும் சரி. எனக்கு அவர் இசையமைக்கிற படத்துல நடிக்கிறதுக்கு வாய்ப்பு கிடைச்சுருக்கு. அவரின் இசையில் மட்டுமல்ல பேச்சுக்கள் மூலமாகவும் நிறைய விஷயங்கள் கத்துக்கிறேன். ராஜா சார் ஐ லவ் யூ....
விடுதலை 2 படத்தை பற்றி பேசினோம் என்றால் இது முழுக்க முழுக்க வெற்றிமாறன் என்ற இயக்குனர் மட்டுமே உரிமை கொண்டாட கூடிய ஒரு படம். அவர் இந்த படத்தை பண்றதுக்கு நாங்க எல்லாம் உறுதுணையாக இருந்தோம் என்பதே எங்களுக்கு பெருமையா இருக்கு. இது அவ்வளவு எளிதில உருவாக்ககூடிய படமே கிடையாது. நான் பி.காமை மூன்று வருஷம் படிச்சேன். வெற்றி மாறன் என்ற யூனிவர்சிட்டில விடுதலை என்ற டிகிரியை நாலு வருஷம் படிச்சி வாங்கியிருக்கேன் நான். இந்த படத்தோட வாத்தியார் வெற்றி மாறன் சார்தான் என்றார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- விழாவில் இளையராஜா, வெற்றிமாறன், விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்ட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர்.
- 2020-ம் ஆண்டு ஆரம்பித்த இந்த படம் தொடர்பான அனுபவங்களை குறித்து பேசினார்.
இயக்குனர் வெற்றிமாறன் விடுதலை இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார். இதில் சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், அட்டக்கத்தி தினேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். 'விடுதலை 2' திரைப்படம் அடுத்த மாதம் 20-ந் தேதி வெளியாகவுள்ளது.
இதையடுத்து, 'விடுதலை 2' படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டது. படத்தின் டிரெய்லர் காட்சிகள் மிகவும் விறுவிறுப்பாக அமைந்துள்ளது.
இந்த விழாவில், இளையராஜா, வெற்றிமாறன், விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்ட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர். அப்போது இயக்குனர் வெற்றி மாறன் பேசுகையில், 2020-ம் ஆண்டு ஆரம்பித்த இந்த படம் தொடர்பான அனுபவங்களை குறித்து பேசினார். இதனை தொடர்ந்து படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து அவர் பேசிக்கொண்டிருக்கையில் அருகில் இருந்த ஒருவர் வெற்றிமாறனிடம் பெயர் சொல்லல என்று கூற அதற்கு வெற்றிமாறன், நான் தான் யார் பெயரையும் சொல்லவில்லை என சொல்லிவிட்டேன். அப்புறம் ஏண்டா... டீம் என்றால் எல்லாரும் தானே... என்று சொல்லி நன்றி சொல்லிவிட்டு வேகமாக தனது இருக்கைக்கு சென்று விட்டார்.
இதனால் அங்கு சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- விடுதலை இரண்டாம் பாகத்தை இயக்குநர் வெற்றிமாறன் இயக்கியுள்ளார்.
- விடுதலை 2 திரைப்படம் இந்தாண்டு டிசம்பர் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் விடுதலை. இந்தப் படத்தில் சூரி, விஜய் சேதுபதி நடித்திருந்தனர். இந்தப் படத்தின் முதல் பாகத்தில் சூரி, விஜய் சேதுபதியுடன் கௌதம் வாசுதேவ் மேனன், சேத்தன், பவானி ஸ்ரீ, இளவரசு போன்ற நடிகர்கள் நடித்திருந்தனர்.
சூரியின் திரைப்பயணத்தில் இப்படம் திருப்பு முனையாக அமைந்தது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பல்வேறு தரப்பினரால் பாராட்டப்பட்டது. இளையராஜாவின் இசையில் வெளியான பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இதைத் தொடர்ந்து விடுதலை இரண்டாம் பாகத்தை இயக்குநர் வெற்றிமாறன் இயக்கியுள்ளார். இதிலும் சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், அட்டக்கத்தி தினேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். விடுதலை 2 திரைப்படம் இந்தாண்டு டிசம்பர் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
தற்பொழுது படத்தின் மூன்றாம் பாடலான பொறுத்தது போதும் என்ற பாடலின் லிரிக் வீடியோ படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை யோகி பி பாடியுள்ளார். பாடலின் வரிகளை யுகபாரதி எழுதியுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- விடுதலை இரண்டாம் பாகத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.
- விடுதலை 2 திரைப்படம் இந்தாண்டு டிசம்பர் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் விடுதலை. இந்தப் படத்தில் சூரி, விஜய் சேதுபதி நடித்திருந்தனர். இந்தப் படத்தின் முதல் பாகத்தில் சூரி, விஜய் சேதுபதியுடன் கௌதம் வாசுதேவ் மேனன், சேத்தன், பவானி ஸ்ரீ, இளவரசு போன்ற நடிகர்கள் நடித்திருந்தனர்.
சூரியின் திரைப்பயணத்தில் இப்படம் திருப்பு முனையாக அமைந்தது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பல்வேறு தரப்பினரால் பாராட்டப்பட்டது. இளையராஜாவின் இசையில் வெளியான பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இதைத் தொடர்ந்து விடுதலை இரண்டாம் பாகத்தை இயக்குநர் வெற்றிமாறன் இயக்கியுள்ளார். இதிலும் சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், அட்டக்கத்தி தினேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். விடுதலை 2 திரைப்படம் இந்தாண்டு டிசம்பர் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், 'விடுதலை-2' படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சூரியின் திரைப்பயணத்தில் விடுதலை திரைப்படம் திருப்பு முனையாக அமைந்தது.
- சூரி நடித்த கருடன் திரைப்படமும் மக்களிடையே வரவேற்பை பெற்றது.
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் விடுதலை. இந்தப் படத்தில் சூரி, விஜய் சேதுபதி நடித்திருந்தனர். இந்தப் படத்தின் முதல் பாகத்தில் சூரி, விஜய் சேதுபதியுடன் கௌதம் வாசுதேவ் மேனன், சேத்தன், பவானி ஸ்ரீ, இளவரசு போன்ற நடிகர்கள் நடித்திருந்தனர்.
சூரியின் திரைப்பயணத்தில் இப்படம் திருப்பு முனையாக அமைந்தது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பல்வேறு தரப்பினரால் பாராட்டப்பட்டது.
இப்படத்தை தொடர்ந்து சூரி நடித்த கருடன் திரைப்படமும் மக்களிடையே வரவேற்பை பெற்றது.
இதைத் தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை இரண்டாம் பாகத்தில் சூரி நடித்து வந்தார். இத்திரைப்படம் வரும் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில் நடிகர் சூரி அடுத்ததாக விலங்கு வெப் சீரிஸ் இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு மாமன் என பெயரிட்டுள்ளனர். இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கிறார். இப்படத்திற்கு ஹெஷாம் அப்துல் வஹாப் இசையமைக்கிறார்.
இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. பூஜை தொடர்பான புகைப்படங்களை சூரி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- விடுதலை இரண்டாம் பாகத்தை இயக்குநர் வெற்றிமாறன் இயக்கியுள்ளார்.
- விடுதலை 2 திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் விடுதலை. இந்தப் படத்தில் சூரி, விஜய் சேதுபதி நடித்திருந்தனர். இந்தப் படத்தின் முதல் பாகத்தில் சூரி, விஜய் சேதுபதியுடன் கௌதம் வாசுதேவ் மேனன், சேத்தன், பவானி ஸ்ரீ, இளவரசு போன்ற நடிகர்கள் நடித்திருந்தனர்.
சூரியின் திரைப்பயணத்தில் இப்படம் திருப்பு முனையாக அமைந்தது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பல்வேறு தரப்பினரால் பாராட்டப்பட்டது. இளையராஜாவின் இசையில் வெளியான பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இதைத் தொடர்ந்து விடுதலை இரண்டாம் பாகத்தை இயக்குநர் வெற்றிமாறன் இயக்கியுள்ளார். இதிலும் சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், அட்டக்கத்தி தினேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். விடுதலை 2 திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது. படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
திரைப்படம் நாளை வெளியாகும் நிலையில் படத்தில் 8 நிமிடத்தை குறைத்துள்ளனர். இதனை படக்குழு ஒரு வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளனர். அதில் இயக்குனர் வெற்றிமாறன் ' இந்த திரைப்படத்தின் பணி நிறைவடைந்தது. படத்தின் நீள அளவை 8 நிமிடம் குறைத்துள்ளோம். இந்த படத்தை இயக்கியதில் நாங்கள் அனைவரும் நிறைய கற்றுக்கொண்டோம். இத்திரைப்படத்தில் நிறைய நபர்கள் அவர்களின் உழைப்பை கொடுத்துள்ளனர். அவர்களின் உழைப்பினால் தான் இப்படம் சாத்தியமானது அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. இந்த படம் எப்படி இருக்குன்னு பார்வையாளர்களான நீங்கதான் சொல்லனும். அனுபவமா இந்த படம் எங்களுக்கு நிறைய கத்து கொடுத்துருக்கு அத விட அதிகமா கடின உழைப்ப போட்டிருக்கோம். நன்றி " என கூறியுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- வெற்றிமாறன் இயக்கத்தில் சமீபத்தில் விடுதலை 2 திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
- அடுத்து வெற்றிமாறன் வாடிவாசல் திரைப்படத்தை இயக்குவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
நடிகர் சூர்யா அடுத்ததாக கார்த்தி சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா 44 திரைப்படத்தில் நடித்துள்ளார். தற்பொழுது ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
அதை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் 'வாடிவாசல்' திரைப்படத்தில் சூர்யா நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ஜல்லிக்கட்டை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்திற்காக மாடுபிடி வீரர்களுடன் சூர்யா பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ கடந்த சில மாதங்களுக்கு முன்பு படக்குழு வெளியிட்டது.
வெற்றிமாறன் இயக்கத்தில் சமீபத்தில் விடுதலை 2 திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதற்கு அடுத்து வெற்றிமாறன் வாடிவாசல் திரைப்படத்தை இயக்குவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. சூர்யாவும் 45 திரைப்படத்தை தொடர்ந்து இப்படத்தில் நடிக்கவுள்ளார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. திரைப்படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.
இந்நிலையில் திரைப்படம் மூன்று பாகங்களாக உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான கதை மற்றும் திரைக்கதையை வெற்றிமாறன் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது. இதைக்குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வரும் நிலையில் ‘வாடிவாசல்’ படம் குறித்த அப்டேட்டால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
- தற்போது நடிகர் சூர்யா ஆர்.ஜே.பாலாஜி இயக்கி வரும் படத்தில் நடித்து வருகிறார்.
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் 'வாடிவாசல்' படத்தில் நடிகர் சூர்யா நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ஜல்லிக்கட்டை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்திற்காக மாடுபிடி வீரர்களுடன் சூர்யா பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவை கடந்த ஆண்டு படக்குழு வெளியிட்டது. இதனால் உடனே படப்பிடிப்பு பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படப்பிடிப்பு பணிகள் தொடங்கவில்லை.
இந்த நிலையில், 'வாடிவாசல்' படத்தை தயாரிக்க உள்ள கலைப்புலி எஸ். தாணு எக்ஸ் தள பக்கத்தில், அகிலம் ஆராதிக்க 'வாடிவாசல்' திறக்கிறது என்று பதிவிட்டுள்ளார். இதனால் வாடிவாசல் படத்திற்கான படப்பிடிப்புகள் விரைவில் தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வரும் நிலையில் 'வாடிவாசல்' படம் குறித்த அப்டேட்டால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
'வாடிவாசல்' படத்தை தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறன் தனுசை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். தற்போது நடிகர் சூர்யா ஆர்.ஜே.பாலாஜி இயக்கி வரும் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்
- கவுதம் மேனன் மலையாள திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
- ரவி மோகன் நாயகனாக நடிக்கிறார்.
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன். இயக்கம் மட்டுமின்றி திரைப்பட தயாரிப்பு மற்றும் நடிப்பு என பலதுறைகளில் தொடர்ச்சியாக பணியாற்றி வருகிறார். திரைப்படங்களில் நடித்துக் கொண்டே, மம்மூட்டி நடிக்கும் மலையாள திரைப்படம் ஒன்றை கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கி வருகிறார்.
இந்த நிலையில், இவர் இயக்கப் போகும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இந்தப் படம் தமிழில் உருவாக இருக்கிறது. இந்தப் படம் தொடர்பான ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதுபற்றிய தகவல்களை சமீபத்திய பேட்டி ஒன்றில் கவுதம் மேனன் தெரிவித்தார்.
இது குறித்து பேசிய அவர், "இயக்குநர் வெற்றி மாறன் கதை ஒன்றை திரைப்படமாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் படத்தை நான் இயக்க இருக்கிறேன். இந்தப் படம் தொடர்பான முதற்கட்ட ஆலோசனை மற்றும் இதர பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் படத்தில் ரவி மோகன் நடிக்க இருக்கிறார். இந்தப் படம் அதன் ஆரம்பக்கட்டத்திலேயே உள்ளது," என்று தெரிவித்தார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.