என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
நீங்கள் தேடியது "vignesh kanth"
- நகைச்சுவை நடிகர் விக்னேஷ் காந்த்-ராசாத்தி திருமணம் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது.
- இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பிரபலங்கள் பலரும் கலந்துக் கொண்டு வாழ்த்தினர்.
இணையதள தொகுப்பாளரான விக்னேஷ் காந்த் சின்னத்திரை தொகுப்பாளராகி பின்னர் நகைச்சுவை நடிகராக சினிமாத்துறையில் அறிமுகமானார். இவர் சென்னை 28, நட்பே துணை, மீசையை முறுக்கு, மெகந்தி சர்கஸ், நெஞ்சமுண்டு நேர்மை உண்டு, தேவ் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.
![விக்னேஷ் காந்த்-ராசாத்தி திருமண வரவேற்பு விக்னேஷ் காந்த்-ராசாத்தி திருமண வரவேற்பு](https://media.maalaimalar.com/h-upload/2022/09/13/1760889-vf5.jpg)
விக்னேஷ் காந்த்-ராசாத்தி திருமண வரவேற்பு
விக்னேஷ் காந்துக்கும் என்ஜினீயரிங் பட்டதாரியான ராசாத்தி என்பவருக்கும் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து இவர்களின் திருமணம் சமீபத்தில் திருச்சியில் நடைபெற்றது. திருமணத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், ஞானசம்பந்தம் உட்பட பலர் நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
![விக்னேஷ் காந்த்-ராசாத்தி திருமண வரவேற்பு விக்னேஷ் காந்த்-ராசாத்தி திருமண வரவேற்பு](https://media.maalaimalar.com/h-upload/2022/09/13/1760899-vg4.jpg)
விக்னேஷ் காந்த்-ராசாத்தி திருமண வரவேற்பு
இதைத்தொடர்ந்து, நடிகர் விக்னேஷ் காந்த் - ராசாத்தி திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில், ரமேஷ் பிரபு, ஆதி, கார்த்தி, தேவா, சுரேஷ் காமாட்சி, ஸ்டூடியோ கிரீன் ஞானவேல், தனஞ்ஜெயன், சக்தி ஃபிலிம் பேக்டரி சக்தி வேலன், மணி ஹுசேன், கோபிநாத், சாண்டி, தம்பி ராமையா, சமுத்திரகனி, ஆத்மிகா, கவின், அமுதவாணன், பழனி பட்டாளம், ஆதவன், இயக்குனர் கிஷோர், 2டி ராஜசேகர், சினேகா பிரசன்னா, மனோபாலா, கே.எஸ். ரவிக்குமார், பார்த்திபன், சுந்தர் சி, ஆரி, பாலசரவணன், ஆர்த்தி கணேஷ், மகாலிங்கம், தங்கதுரை, அந்தோணி தாசன், பாலா, தீபக் ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
- பிரபல நகைச்சுவை நடிகர் விக்னேஷ் காந்த்.
- இவரது திருமணம் திருச்சியில் நடைபெற்றது.
இணையதள தொகுப்பாளரான விக்னேஷ் காந்த் சின்னத்திரை தொகுப்பாளராகி பின்னர் நகைச்சுவை நடிகராக சினிமாத்துறையில் அறிமுகமானார். இவர் சென்னை 28, நட்பே துணை, மீசையை முறுக்கு, மெகந்தி சர்கஸ், நெஞ்சமுண்டு நேர்மை உண்டு, தேவ் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். மேலும் சில பாடல்களையும் எழுதியுள்ளார்.
![](https://media.maalaimalar.com/h-upload/2022/09/08/1758807-2.jpg)
விக்னேஷ் காந்த் - ராசாத்தி
விக்னேஷ் காந்துக்கும் என்ஜினீயரிங் பட்டதாரியான ராசாத்தி என்பவருக்கும் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இவர்களின் திருமணம் திருச்சியில் நேற்று நடந்துள்ளது. திருமணத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், ஞானசம்பந்தம் உட்பட பலர் நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
![](https://media.maalaimalar.com/h-upload/2022/09/08/1758808-1.jpg)
இந்நிலையில், திருமண புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் நடிகர் விக்னேஷ் காந்த் வெளியிட்டு உள்ளார். அவருக்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.