என் மலர்
நீங்கள் தேடியது "vijay makkal iyyakkam"
- தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் ரசிகர்களை இன்று சந்திக்கிறார்.
- பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க தலைமை அலுவலகத்திற்கு விஜய் வருகை தந்தார்.
நடிகர் விஜய் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் வாரிசு. இந்தப் படத்தை வம்சி இயக்க தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்திருக்கிறார். பொங்கலுக்கு வெளியாக இருக்கும் இந்தப்படம் ஆந்திராவிலும் வெளியாக இருக்கிறது. இதற்காக விளம்பரங்கள் செய்யப்பட்டு, வியாபாரம் நடந்து கொண்டிருந்த நிலையில், திடீரென்று ஆந்திராவில் படம் பொங்கலன்று வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் விஜய் தனது ரசிகர்களையும் ரசிகர் மன்ற நிர்வாகிகளையும் பனையூரில் சந்தித்துப் பேசுகிறார். கடந்த 5 ஆண்டுகளாக விஜய் ரசிகர்களை சந்திப்பது கொரோனா பரவலால் தள்ளிப்போய் கொண்டிருந்தது. வாரிசு படத்துக்காக தொடர்ந்து படப்பிடிப்பு இருந்த நிலையில் மன்ற நிர்வாகிகள் மத்தியில் சந்திப்பு கோரிக்கை எழுந்த வண்ணம் இருந்தது. படப்பிடிப்பு முடிந்ததும் சந்திக்கலாம் என்று விஜய் தரப்பில் தகவல் சொல்லப்பட்டது.
இந்த நிலையில்தான் ரசிகர்களை இன்று சந்திப்பதாக விஜய் தரப்பிலிருந்து தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது. இன்று காலை முதலே விஜய்க்கு சொந்தமான பனையூர் அலுவலக வளாகத்தில் ரசிகர் மன்ற நிர்வாகிகள், ரசிகர்கள் குவியத்தொடங்கினர். அனைவருக்கும் அடையாள அட்டை கட்டாயமாக இருக்க வேண்டும் என்கிற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருந்தது. தனியார் பாதுகாப்பு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் ரசிகர்களை சந்திக்க விஜய் பனையூர் அலுவலகம் வந்தார். அவரை ரசிகர்கள் கரகோஷம் எழுப்பி வரவேற்றனர். இந்த நிகழ்வில் விஜய் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளவுள்ளதாகவும், மன்ற நிர்வாகிகள் சிலரோடு முக்கிய ஆலோசனையிலும் ஈடுபட இருப்பதாகவும் தெரிகிறது. இது வாரிசு பட வெளியீட்டின் போது ரசிகர்கள் எப்படி யெல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்கிற வழிகாட்டுதல்களாகவும் இருக்கும் என்கிறார்கள்.
தெலுங்கிலும் படம் ரிலீஸ் ஆக வேண்டிய சூழலில் தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் விதிமுறைபடி நேரடி தெலுங்கு படங்களுக்குத் தான் விழா நாட்களில் அதிக முன்னுரிமை தர வேண்டும் என்ற அறிவிப்பு வெளியானதால் படத்தை வெளியிடுவதில் வாரிசுக்கு சிக்கல் எழுதிருந்திருக்கிறது. இந்த நேரத்தில் ரசிகர்களின் செயல்பாடுகள் எப்படியிருக்க வேண்டும் என்பது குறித்த வழிகாட்டுதல் நெறிமுறைகளும் இந்த கூட்டத்தில் ரசிகர்களுக்கு அறிவுறுத்தப்படும் என்று கூறப்படுகிறது.