என் மலர்
முகப்பு » Villupuram murder
நீங்கள் தேடியது "Villupuram murder"
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே வாலிபர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேல்மலையனூர்:
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே உள்ள நந்திபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மகன் கமலக்கண்ணன் (வயது 27).
மாற்றுத்திறனாளியான இவர் பிளஸ்-2 வரை படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். நேற்று இரவு 9 மணிக்கு கமலக்கண்ணன் தனது பெற்றோரிடம், நண்பர்களை பார்த்து வருவதாக கூறி சென்றார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.
இன்று காலை நந்திபுரம் அருகே உள்ள கிழவம்பூண்டி பஸ் நிறுத்தம் அருகே கமலக்கண்ணன் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.
அந்த வழியாக சென்றவர்கள், கமலக்கண்ணன் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் இது குறித்து அவரது பெற்றோருக்கும், அவலூர்பேட்டை போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
தனது மகன் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடக்கும் தகவல் அறிந்ததும் கார்த்திகேயன் மற்றும் அவரது உறவினர்கள் அலறியடித்து கொண்டு சம்பவ இடம் விரைந்து சென்று அங்கு சாலையோரத்தில் பிணமாக கிடந்த கமலக்கண்ணனின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
இதற்கிடையே அவலூர்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மற்றும் போலீசார் கமலக்கண்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கான அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே வாலிபர் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் அங்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டார்.
வாலிபர் கமலக்கண்ணனை கழுத்தை அறுத்து கொலை செய்தது யார்? அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார்? முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வாலிபர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம் மாவட்டம் கச்சிராயப்பாளையம் அருகே வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கச்சிராப்பாளையம்:
விழுப்புரம் மாவட்டம் கச்சிராயப்பாளையம் மத்தியகுறிஞ்சியை அடுத்த சடையம்பட்டு கிராமத்தில் கோமுகி ஆற்றில் இன்று வாலிபர் ஒருவர் காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதைபார்த்த அந்த பகுதியினர் கச்சிராயப்பாளையம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் ஆற்றில் பிணமாக கிடந்த வாலிபர் உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.
அதில் பிணமாக கிடந்தவர் மத்தியகுறிஞ்சி கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் (30) என்பது தெரியவந்தது. கடந்த 5 ஆண்டுகளாக அவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். தற்போது சொந்த கிராமத்தில் விவசாயம் செய்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
இந்த நிலையில் அவர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். மர்மகும்பல் அவரை அடித்து கொன்று கோமுகி ஆற்றில் பிணத்தை வீசி சென்றிருப்பது தெரிந்தது. அவரது உடலை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
முன் விரோதம் காரணமாக வெங்கடேசன் கொலை செய்யப்பட்டாரா? அல்லது கள்ளக்காதல் விவகாரம் காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

×
X