என் மலர்
முகப்பு » villupuram protest
நீங்கள் தேடியது "Villupuram protest"
கடந்த 2 மாதங்களாக குடிநீர் சரியாக வராததை கண்டித்து பல தடவை மரக்காணம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் புகார் கொடுத்தும் கண்டு கொள்ளவில்லை.
மரக்காணம்:
மரக்காணம் அருகே கந்தாடு ஊராட்சியில் உள்ள பிளாரி மேட்டுப் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் அனைவரும் விவசாயிகள். இப்பகுதியில் தினந்தோறும் குடிநீர் தொட்டியில் மூலம் தண்ணீர் விநியோகம் செய்து வருவது வழக்கம்.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் இன்று காலை 8 மணியளவில் கந்தாடு பஸ் நிறுத்தம் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் திண்டிவனம்-மரக்காணம் செல்லும் சாலை மறியலில ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த மரக்காணம் பேலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். மரக்காணம் இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு தலைமைக் காவலர் ரவி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அமர்ந்திருந்தவர்கள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானம் செய்து அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து அவர்கள் மரக்காணம் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் தகவல் தெரிவித்தனர். பின்பு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் திண்டிவனம் செல்லும் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கச்சிராயபாளையம் அருகே இன்று காலை குடிநீர் வழங்க கோரி அரசு பஸ்ஸை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கச்சிராயபாளையம்:
விழுப்புரம் மாவட்டம் கல்வராயன் மலை அருகே உள்ள மணியார் பாளையம் ஊராட்சிக்கு உட்பட்டு 7 கிராமங்கள் உள்ளன.
இந்த கிராமத்தில் 2 ஆயிரத்தும் மேற்பட்ட மலை வாழ்மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு அதில் இருந்து மின் மோட்டார் மூலம் மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு அந்த பகுதியில் உள்ள பொது மக்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்த பகுதியில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
இதில் மணியார் பாளையம் பகுதியில் உள்ள மின்மாற்றி ஒன்று மின்னல் தாக்கி சேதமடைந்தது.
மின்மாற்றி பழுதானதால் அந்த பகுதியில் உள்ள பொது மக்களுக்கு குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது.
இதனால் அந்த பகுதி பொது மக்கள் தங்களது அன்றாட தேவைக்கு கூட தண்ணீர் கிடைக்காமல் மிகுந்த அவதிக்குள்ளாகினர். வனபகுதியில் உள்ள நீரோடைகளில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து குடிநீருக்கு பயன்படுத்தி வந்தனர்.
மின்மாற்றி பழுதானதால் அந்த பகுதியில் மின்சாரம் இன்றி கடந்த 2 நாட்களாக அந்த பகுதியில் உள்ள கிராமங்கள் இருளில் மூழ்கியுள்ளது.
இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் பல முறை தகவல் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை .
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி பொதுமக்கள் இன்று காலை 7.30 மணி அளவில் காலி குடங்களுடன் மணியார் பாளையம் கூட்டுறவு சங்க அலுவலகம் அருகே திரண்டனர். பின்னர் அவர்கள் அந்த வழியாக வந்த அரசு பஸ்சை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த கல்வராயன் மலை வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி மற்றும் தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.
போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறியதாவது:- எங்கள் பகுதியில் உள்ள மின்மாற்றி பழுதாகி உள்ளதால் எங்கள் கிராமமே இருளில் மூழ்கியுள்ளது. எங்களுக்கு குடிநீரும் கிடைக்கவில்லை. இதனால் நாங்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளோம். எனவே மின்மாற்றியை சீரமைக்கும் வரை நாங்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறினர்.
அதற்கு போலீசார் சம்பந்தபட்ட துறை அதிகாரிகளிடம் பேசி உடனடியாக மின்மாற்றி சீரமைக்கப்படும். மேலும் சேலம் மாவட்டம் கருமந்துறை பகுதியில் இருந்து ஜெனரேட்டர் கொண்டு வரப்பட்டு உங்கள் பகுதிக்கு குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே நீங்கள் தற்போது போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லுங்கள் என்று கூறினர். இதை ஏற்று பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
அதன் பின்னர் அரசு பஸ் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம் அருகே மூடிக்கிடக்கும் ரெயில்வே கேட்டை திறக்கக்கோரி பொதுமக்கள் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தால் அப்பகுதியில் அரைமணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே கொத்தமங்கலம் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
விழுப்புரம்-காட்பாடி செல்லும் பயணிகள் ரெயில் கொத்தமங்கலம் கிராமத்தின் வழியாக செல்கிறது.
தற்போது அந்த கிராமத்தில் ரெயில்வே பாலம் கட்டும்பணி நடைபெற்று வருகிறது. இதனால் அந்த பகுதியில் வசிப்பவர்கள் சுமார் ½ கிலோ மீட்டர் தூரம் சுற்றிசென்று பள்ளி, கல்லூரிகள் மற்றும் கடைகளுக்கு சென்று வருகின்றனர்.
இந்த பகுதியில் மழை பெய்ததால் அந்த பகுதியில் உள்ள பாதை சேறு, சகதியுடன் காட்சியளிக்கிறது. இதனால் கொத்தமங்கலம் கிராமத்து மக்கள் அந்த வழியில் செல்ல முடியாமல் அவதியடைந்தனர்.
இந்தநிலையில் கொத்தமங்கலம் பகுதியில் ரெயில்வே பாலம் கட்டும் இடத்திற்கு அருகில் ஆளில்லா ரெயில்வே கேட் ஒன்று உள்ளது. அந்த கேட் மூடப்பட்டுள்ளது.
பாலம் கட்டும் பணி முடிவடையும் வரை அந்த ரெயில்வே கேட் திறந்துவிட்டால் அந்த வழியாக பொதுமக்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு உரிய நேரத்தில் செல்லமுடியும்.
ரெயில்வேகேட்டை திறக்கக்கோரி ரெயில்வே துறை அதிகாரிகளிடம் கொத்தமங்கலம் பகுதி மக்கள் மனு கொடுத்து வந்தனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதி பொதுமக்கள் 300-க்கும் மேற்பட்டோர் இன்று காலை கொத்தமங்கலத்தில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தின் அருகே திரண்டனர்.
பின்னர் காட்பாடியில் இருந்து விழுப்புரம் நோக்கி வந்த பயணிகள் ரெயிலை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ரெயில்வே தண்டவாளத்தின் குறுக்கே பொதுமக்கள் இருப்பதை பார்த்த ரெயில் என்ஜீன் டிரைவர் ரெயிலை நிறுத்தினார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காணை சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
அவர்களிடம் கொத்தமங்கலம் பகுதியில் மூடிக்கிடக்கும் ரெயில்வே கேட்டை திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர்.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து அந்த பகுதி பொதுமக்கள் ரெயில் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த ரெயில் மறியல் போராட்டத்தால் ½ மணிநேரம் காலதாமதமாக காட்பாடி-விழுப்புரம் பயணிகள் ரெயில் புறப்பட்டு சென்றது.

×
X