என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Vinayagar Statue"
- ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாக்கோல் பொருட்களை பயன்படுத்த கண்டிப்பாக அனுமதிக்கப்படாது.
- இயற்கை பொருட்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் மட்டுமே பயன்படுத்தப்படவேண்டும்.
சென்னை:
விநாயகர் சதுர்த்தி அடுத்த மாதம் (செப்டம்பர்) 7-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, ஆங்காங்கே விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு, கடல் உள்ளிட்ட நீர்நிலைகளில் கரைக்கப்படுவது வழக்கம். அந்தவகையில் நீர் நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான வழிமுறைகளை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
* களிமண்ணால் செய்யப்பட்டதும் மற்றும் பிளாஸ்டர் ஆப்பாரிஸ், பிளாஸ்டிக் மற்றும் தெர்மாக்கோல் (பாலிஸ்டிரின்) கலவையற்றதுமான, சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் மட்டுமே செய்யப்பட்டதுமான விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படுகிறது.
* சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர்கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தப்படலாம். மேலும், சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தப்படலாம்.
* ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாக்கோல் பொருட்களை பயன்படுத்த கண்டிப்பாக அனுமதிக்கப்படாது. நீர்நிலைகள் மாசுபடுவதை தடுக்கும் பொருட்டு, வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் மட்டுமே சிலைகள் தயாரிக்க அல்லது சிலைகள், பந்தல்களை அலங்கரிக்க பயன்படுத்தவேண்டும்.
* சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயன சாயம், எண்ணெய் வண்ணப்பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. சிலைகளின் மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாக கொண்ட வண்ணப்பூச்சுகளை பயன்படுத்தக்கூடாது, மாற்றாக சுற்றுச்சூழலுக்குந்த நீர் சார்ந்த, மக்கக்கூடிய, நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்தப்படவேண்டும்.
* சிலைகளை அழகுபடுத்த வண்ணப்பூச்சுகள் மற்றும் பிற நச்சு ரசாயனங்கள் கொண்ட பொருட்களுக்கு பதிலாக, இயற்கை பொருட்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் மட்டுமே பயன்படுத்தப்படவேண்டும்.
* விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின்படி கரைக்க அனுமதிக்கப்படும். விநாயக சதுர்த்தி விழாவினை சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு கொண்டாடும்படி பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வடமாநிலத்தவர்கள் 380-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை தயார் செய்து வைத்திருந்தனர்.
- சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்லலாம். ஆனால் அதனை நீர்நிலைகளில் கரைக்கக்கூடாது.
நெல்லை:
விநாயகர் சதுர்த்தி விழா நாளை(திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது.
நெல்லை
நெல்லை மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழாவின் போது பாளை சீவலப்பேரி ரோட்டில் உள்ள கிருபா நகரில் வடமாநில தொழிலாளர்கள் தயாரிக்கும் விநாயகர் சிலைகளை இந்து அமைப்பினர் வாங்கி சென்று பிரதிஷ்டை செய்வார்கள். பின்னர் அதனை நீர்நிலைகளில் கரைப்பார்கள்.
இந்த ஆண்டும் வழக்கம்போல் அங்கு 380-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை வடமாநிலத்தவர்கள் தயார் செய்து வைத்திருந்தனர்.
இந்து அமைப்பினரும் அந்த சிலைகளை வாங்குவ தற்காக முன்பணம் செலுத்தி வைத்திருந்தனர். அதில் ரசாயன கலவை இருந்ததால் சிலைகளை விற்க அனுமதி மறுக்கப்பட்டு குடோன் சீல் வைக்கப்பட்டது.
அனுமதி
அந்த விநாயகர் சிலைகளை விற்பனை செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்று கூறி, பா.ஜனதாவினர் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், தயாரான விநாயகர் சிலைகளை வழி பாட்டுக்கு எடுத்து செல்ல மதுரை ஐகோர்ட்டு அனுமதி அளித்து உத்தரவிட்டது. உடனடியாக நேற்று இரவில் விநாயகர் சிலைகளை வழிபாட்டுக்காக இந்து முன்னணியினர் எடுத்து சென்றனர்.
தொடர்ந்து நாளை மாநகர பகுதியில் 78 இடங்கள் உள்பட சுமார் 350-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த சிலைகளை வருகிற 24-ந்தேதி வரை அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பான போதிய வெளிச்சம் உள்ள இடத்தில் வைத்து பூஜை செய்ய மாநகர போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.
அறிவுறுத்தல்
வருகிற 24-ந்தேதி இந்த சிலைகள் அனைத்தையும் ஊர்வலமாக எடுத்துச் செல்லலாம். ஆனால் அதனை நீர்நிலைகளில் கரைக்கக்கூடாது என்ற நிபந்தனைக்கு உட்பட்டு இந்து அமைப்பினர் சிலைகளை எடுத்து சென்றனர்.
மேலும் நெல்லை மாவட்டத்தில் மாசு விளைவிக்காத விநாயகர் சிலைகளை கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இடங்களை இன்று மாலை போலீசார் அறிவிக்கின்ற னர். அந்த இடங்களில் மட்டுமே சிலைகளை கரைக்க அறிவுறுத்தப் பட்டுள்ளது. மேலும் அந்த இடங்களில் தேவையான போலீஸ் பாதுகாப்பும் போடப்படுள்ளது.
- சிலைகளை வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்ய பாளையங்கோட்டை வருவாய் துறையினர் மற்றும் போலீசார் தடை விதிக்க கூடாது என வழக்கு.
- பிளாஸ்டர் ஆப் பாரிஸில் தயாரிக்கப்பட்ட சிலைகள் இருந்தால் ஆற்றில் கரைக்க கூடாது என்றும் உத்தரவு.
திருநெல்வேலியில் மாவட்ட நிர்வாகத்தால் தடை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை, உடனடியாக விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று ராஜஸ்தானைச் சேர்ந்த விநாயகர் சிலை தயாரிப்பாளர் பிரகாஷ் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, சில யோசனைகளுடன், "நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக தயார் செய்யப்பட்டுள்ள சிலைகளை விற்க தடையில்லை" என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மேலும், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படும் விதமாக பிளாஸ்டர் ஆப் பாரிஸில் தயாரிக்கப்பட்ட சிலைகள் இருந்தால் ஆற்றில் கரைக்க கூடாது.
சிலையை வாங்குபவர்களிடம், அதை ஆற்றில் கரைக்க மாட்டோம் என உறுதிமொழி வாங்கிவிட்டு சிலைகளை விற்கலாம்.
வீட்டில் வைத்து வழிபடுவதற்கு, விநாயகர் சிலைகளை வாங்குவோரின் விவரங்களை பெற்றுக்கொண்டு, போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகம் அவர்களை கண்காணிக்க வேண்டும் உள்ளிட்ட அறிவுறுத்தல்களை நீதிபதி வழங்கினார்.
- சிலை வைத்து அதை ஊர்வலமாக எடுத்து நீர்நிலையில் கரைக்க வேண்டும் என்று விநாயகர் கூறவில்லை.
- தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு அனைத்து அமைப்புகளும் சிலை வைக்க அனுமதித்துள்ளது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியில் 22 இடங்களிலும், திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட 13 இடங்கள் மற்றும் கோவை மாவட்டம் சிறுமுகையில் 16 இடங்களிலும் சிலை வைத்து வழிபடுவதற்கும், ஊர்வலம் நடத்துவதற்கும் அனுமதி கோரி இந்து மக்கள் கட்சி சார்பில் உள்ளூர் போலீஸ் நிலையங்களில் மனு அளிக்கப்பட்டது.
இந்த மனுக்கள் நிராகரிக்கப்பட்டதால் சென்னை ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செயப்பட்டன. இந்த மனுக்கள் நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது காவல்துறை தரப்பில் "தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு அனைத்து அமைப்புகளும் சிலை வைக்க அனுமதித்துள்ளது. அந்தந்த பகுதிகளில் சட்டம்- ஒழுங்கு உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு சிலை வைப்பதற்கு போலீசார் அனுமதி வழங்குகின்றனர்.
இந்த வழக்கை பொறுத்தவரை கடந்த ஆண்டு சிலை வைக்கப்பட்ட இடங்களில் இந்த ஆண்டும் சிலை வைக்க அனுமதி அளிக்கப்படும். ஈரோடு மாவட்டம் அன்னூரில் இருக்கும் நபர் கோவை மாவட்டம் சிறுமுகையில் சிலை வைக்க அனுமதி கேட்கிறார்"என்று வாதாடப்பட்டது.
இதனையடுத்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறுகையில்," தமிழ்நாடு அரசின் அரசாணைக்கு மாறாக விநாயகர் சிலை வைப்பதற்கு அனுமதி கோரி மனுத்தாக்கல் செய்தால் அந்த மனு விசாரணைக்கு ஏற்கப்படாது. சிலை வைத்து அதை ஊர்வலமாக எடுத்து நீர்நிலையில் கரைக்க வேண்டும் என்று விநாயகர் கூறவில்லை.
அப்படி இருக்கும்போது, இந்த கொண்டாட்டங்களால் மக்களுக்கு என்ன பயன்? விநாயகரை வைத்து அரசியல் செய்யப்படுகிறது. இவை அனைத்தும் தனது சொந்த கருத்து மட்டுமே" என்று கூறி வழக்குகளை முடித்து வைத்தார்.
- நாங்குநேரி சம்பவத்தை சாதிப் பிரச்சனையாக்க சில அரசியல் கட்சிகள் முயல்கிறது.
- அரசியல் விளையாட்டில் மக்கள் பாதிக்கப்படக்கூடாது.
திருப்பூர்:
இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் பல்லடத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழ்நாட்டில் இந்து முன்னணி சார்பில் சுமார் 2 லட்சம் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து எழுச்சியாக கொண்டாடப்பட உள்ளது. வருகிற 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தமிழ்நாடு முழுவதும் உள்ள கோவில்களில் இந்து முன்னணி சார்பில் உழவாரப்பணி மேற்கொள்ள உள்ளோம்.
நாங்குநேரி சம்பவத்தை சாதிப் பிரச்சனையாக்க சில அரசியல் கட்சிகள் முயல்கிறது. இதனை அரசு இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். இவர்களது அரசியல் விளையாட்டில் மக்கள் பாதிக்கப்படக்கூடாது.
கடந்த 40 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை இந்து முன்னணி நடத்தியதால் இன்று எல்லா அரசியல் கட்சிகளும் நாங்கள் இந்துக்கள், நாங்கள் கோவிலுக்கு போறோம் என்று சொல்ல வைத்துள்ளது. இது இந்துக்கள் மத்தியில் பெரிய எழுச்சியை உருவாக்கியுள்ளது. சில அரசியல் கட்சிகள் இந்து மதத்திற்கு எதிரான போக்கை தொடர்ந்து வருகின்றனர். அதனை அவர்கள் கைவிடவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- துணை ஆணையா் அபினவ்குமாா் மேற்பாா்வையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
- கோவில் அருகில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனா்.
திருப்பூர் :
திருப்பூா் விஸ்வேஸ்வர சுவாமி கோவில் வளாகம், தென்னம்பாளையம் காலனி சக்தி விநாயகா் கோவி வளாகம், கே.எம்.ஜி.நகா் பகுதியில் உள்ள காமாட்சியம்மன் கோவில் வளாகம் ஆகிய இடங்களில் வைக்கப்பட்டிருந்த விநாயகா் சிலைகள் கடந்த 6-ந்தேதி இரவு சேதப்படுத்தப்பட்டது.
இது குறித்து திருப்பூா் தெற்கு காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா். இச்சம்பவம் தொடா்பாக திருப்பூா் மாநகர காவல் ஆணையா் பிரபாகரன் உத்தரவின்பேரில் துணை ஆணையா் (வடக்கு சரகம்) அபினவ்குமாா் மேற்பாா்வையில் உதவி ஆணையா்கள் பி.என்.ராஜன், கண்ணையன் ஆகியோா் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இந்த தனிப்படையினா் சம்பவம் நடைபெற்ற கோவில்களில் அருகில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை கொண்டு ஆய்வு செய்தனா்.இதில் திருப்பூா் வெள்ளியங்காடு திரு.வி.க.நகரைச் சோ்ந்த மருதாசலம் (வயது 62) சிலைகளை சேதப்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து மருதாசலத்தை கைது செய்து விசாரணை நடத்தினா். இதில் குடும்பத்தினருடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக மன உளைச்சலில் இருந்ததாகவும், வாழ்க்கை சரியாக அமையாததால் கடவுள் மேல் ஏற்பட்ட வெறுப்பு காரணமாக விநாயகா் சிலைகளை சேதப்படுத்தியதாகவும் தெரிவித்தாா்.சிலைகளை சேதப்படுத்திய நபரை 48 மணி நேரத்தில் கைது செய்த தனிப்படையினரை பொதுமக்கள்- போலீஸ் அதிகாரிகள் பாராட்டினா்.
- இந்துக்களின் எழுச்சித் திருவிழாவான விநாயகா் சதுா்த்தி விமரிசையாக கொண்டாடப்பட்டுள்ளது.
- சமூக விரோதிகள் இரு கோவில்களில் விநாயகா் சிலைகளை சேதப்படுத்தி உள்ளனா்.
திருப்பூர் :
திருப்பூரில் 2 கோவில்களில் விநாயகா் சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவத்துக்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இந்துக்களின் எழுச்சித் திருவிழாவான விநாயகா் சதுா்த்தி பெருவிழா தமிழகமெங்கும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டுள்ளது.
இந்து முன்னணி சாா்பில் நிகழாண்டு 'பிரிவினை வாதத்தை முறியடிப்போம் தேசிய சிந்தனையை வளா்ப்போம்' என்ற தலைப்பில் ஒன்றரை லட்சம் இடங்களில் விநாயகா் சிலைகள் பொதுமக்களின் வழிபாட்டுக்காக அமைக்கப்பட்டது. திருப்பூா் மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தி விழாவானது பல்லாயிரக்கணக்கானோா் கலந்துகொண்ட மாபெரும் மக்கள் எழுச்சி விழாவாக கொண்டாடப்பட்டதை பொறுத்துக் கொள்ள முடியாத சமூக விரோதிகள் இரு கோவில்களில் விநாயகா் சிலைகளை சேதப்படுத்தி உள்ளனா்.சிலைகளை சேதப்படுத்தியவா்களை காவல் துறையினா் உடனடியாக கைது செய்ய வேண்டும்.இல்லாவிட்டால் இந்து முன்னணி சாா்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக சாா்பில் மனு :
விநாயகா் சிலைகளை சேதப்படுத்திய நபா்களைக் கைது செய்யக் கோரி பாஜக. சாா்பில் காவல் நிலையத்தில் மனு அளிக்கப்பட்டது. திருப்பூா் வடக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவா் பி.செந்தில்வேல் திருப்பூா் தெற்கு காவல் நிலையத்தில் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:- தமிழகம் முழுவதும் விநாயகா் சதுா்த்தி விழா கடந்த சில நாட்களுக்கு முன்பாக வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டது.இந்நிலையில், திருப்பூா் விஸ்வேஸ்வர சுவாமி கோவில், சக்தி மாரியம்மன் கோவில் ஆகிய இடங்களில் விநாயகா் சிலைகளை சிலா் சேதப்படுத்தியுள்ளனா்.சமூக நல்லிணக்கத்துக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.ஆகவே விநாயகா் சிலைகளை தேதப்படுத்தியவா்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 3 ஆயிரம் விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டு தினமும் பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
- சென்னையில் இன்று பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து மாற்றம் ஏற்பட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தியையொட்டி கடந்த மாதம் 31-ந்தேதி தமிழகம் முழுவதும் விநாயகர் சிலைகள் பூஜைக்காக வைக்கப்பட்டன. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 3 ஆயிரம் விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டு தினமும் பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இந்த சிலைகளை இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஊர்வலமாக எடுத்துச் சென்று கடலில் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன் எதிரொலியால், சென்னையில் இன்று பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து மாற்றம் ஏற்பட்டுள்ளது. விநாயகர் சிலைகளை கரைக்க பட்டினப்பாக்கம், காசிமேடு, திருவொற்றியூர், நீலாங்கரை கடற்கரை ஆகிய 4 இடங்களில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனால், கடற்கரை ஒட்டியுள்ள சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, வாலாஜா சாலை, பாரதி சாலை, பெசன்ட் சாலை, ஆர்.கே.சாலை வழியாக வரும் வாகனங்கள் மாற்றுப் பாதையில் செல்லும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், கச்சேரி சாலை, தெற்கு கெனால் பேங்க் சாலை வழியாக வரும் வாகனங்களும் மாற்றுப் பாபதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், அடையாறில் இருந்து பாரிமுனை செல்லும் வாகன ஓட்டிகள் மந்தைவெளி, லஸ் கார்னர், ஒய்ட்ஸ் ரோடு வழியாக செல்லலாம்.
- 5000 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.
- அனைத்து சரக்கு வாகனங்களும் இரவு 10 மணி வரையில் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் :
திருப்பூா் மாநகர் மற்றும் மாவட்டத்தில் இந்து முன்னணி சாா்பில் விநாயகா் சதுா்த்தியையொட்டி 5000 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. அந்த சிலைகளுக்கு தினமும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இன்று மாலை விநாயகர் சிலைகள் விஜர்சன ஊா்வலம் நடக்கிறது. பிரம்மாண்டமாக நடைபெறும் இந்த ஊர்வலத்தில் விநாயகர் சிலைகள் அணிவகுத்து செல்கின்றன. இதில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் இந்து முன்னணி மற்றும் பல்வேறு இந்து அமைப்பு நிர்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்கின்றனர்.
விநாயகர் சிலைகள் ஊர்வலத்தையொட்டி திருப்பூர் மாநகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து திருப்பூா் மாநகரக் காவல் துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருப்பூா் மாநகரில் அனைத்து சரக்கு வாகனங்களும் இன்று இரவு 10 மணி வரையில் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், விநாயகா் விசா்ஜன ஊா்வலத்தின்போது கோவை டிபாா்ட்மென்ட் ஸ்டோா் அருகிலிருந்து புறப்பட்டு புதிய பேருந்து நிலையம் வரை அவிநாசியில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் திருமுருகன்பூண்டியில் இருந்து பூலுவபட்டி வழியாக செல்ல வேண்டும்.
திருப்பூா் புதிய பேருந்து நிலையத்துக்கு வரும் பேருந்துகள் அனைத்தும் பிற்பகல் 12 மணி முதல் 60 அடி சாலையில் பயணிகளை ஏற்றி, இறக்கி விட்டுவிட்டு கேவிபி. சந்திப்பு, புஷ்பா சந்திப்பு வழியாக செல்ல வேண்டும். அதேபோல, பெருமாநல்லூா் சாலையிலிருந்து புதிய பேருந்து நிலையத்துக்கு வரும் அனைத்துப் பேருந்துகளும் பூலுவபட்டி சந்திப்பில் திருப்பி விடப்பட்டு திருமுருகன்பூண்டி சுற்றுச்சாலை வழியாக அவிநாசி சாலையை அடைந்து வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சந்திப்பு வழியாக சென்று புஷ்பா சந்திப்பில் பயணிகளை ஏற்றி, இறக்கி செல்ல வேண்டும்.
பெருமாநல்லூா் சாலையில் இருந்து புதிய பேருந்து நிலையம் நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் பிற்பகல் 1 மணி முதல் பூலுவபட்டி நான்கு சாலையில் திருமுருகன்பூண்டி மற்றும் வாவிபாளையம் சாலையில் திருப்பி விடப்படும். அதேபோல, பொதுக்கூட்டம் நடைபெறும்போது நடராஜ் திரையரங்கம் வழியாக வாகனங்கள் செல்ல அனுமதியில்லை. மேலும், விநாயகா் விசா்ஜன ஊா்வலம் நடைபெறும்போது மில்லா் பேருந்து நிறுத்தம், திருப்பூா் பழைய பேருந்து நிலையம், வெள்ளியங்காடு உள்ளிட்ட பகுதிகளிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
- விநாயகர் சதுர்த்தியை யொட்டி கடையநல்லூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இந்து முன்னணி, பா.ஜனதா மற்றும் பல்வேறு அமைப்பினர் சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.
- சுமார் 5 விநாயகர் சிலைகள் அரசு அனுமதித்த அளவை விட அதிக உயரம் கொண்டதாகவும், களிமண்ணுக்கு பதிலாக சுற்றுச்சூழலை பாதிக்கும் பொருளால் தயாரிக்கப்பட்டதாகவும் இருந்துள்ளது.
நெல்லை:
விநாயகர் சதுர்த்தியை யொட்டி கடையநல்லூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இந்து முன்னணி, பா.ஜனதா மற்றும் பல்வேறு அமைப்பினர் சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.
நேற்று பெரும்பாலான சிலைகள் விஜர்சனம் செய்யப்பட்டது. அதில் சுமார் 5 விநாயகர் சிலைகள் அரசு அனுமதித்த அளவை விட அதிக உயரம் கொண்டதாகவும், களிமண்ணுக்கு பதிலாக சுற்றுச்சூழலை பாதிக்கும் பொருளால் தயாரிக்கப்பட்டதாகவும் இருந்துள்ளது.
இதையடுத்து அந்த சிலைகளின் குழு பொறுப்பாளர்கள் தலா 2 பேர் உள்பட 10 பேர் மீது கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இந்து அமைப்புகள் சார்பில் பல்லடத்தில் 150-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டது.
- 25-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சாமளாபுரம் குளத்தில் கரைக்கப்பட்டன.
பல்லடம் :
பல்லடத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, பாரத மாணவர் பேரவை, உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் பல்லடம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் 150-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டது.
இதில் நேற்று முன்தினம் சுமார் 25-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பல்லடம் அருகேயுள்ள சாமளாபுரம் குளத்தில் கரைக்கப்பட்டன. இந்த நிலையில் நேற்று பல்லடம் வட்டாரப் பகுதி மற்றும் நகரப் பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு பல்லடம் கடை வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்று பொங்கலூர் அருகே உள்ள பி.ஏ.பி. பாசன வாய்க்காலில் கரைக்கப்பட்டது. இந்த ஊர்வலத்தில் பிரம்மாண்டமான நடனமாடும் சிவன் சிலை அனைவரையும் கவர்ந்தது. நடனமாடிக் கொண்டே தலையிலிருந்து தண்ணீரை பீய்ச்சி அடித்ததை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து ரசித்தனர். விநாயகர் ஊர்வலத்தை முன்னிட்டு, பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு சவுமியா தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- பாம்பா ர்புரம் பகுதியில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது
- சிலைகள் அனைத்தும் இயற்கையாக கிடைக்கும் மரவள்ளிக்கிழங்கு மாவு, காகித தூள், சொறி மரங்களின் விதைகள் மற்றும் வண்ணங்களை வைத்து வடிவமைக்கப்பட்டு வருவதாகவும் வடிவமை ப்பாளர்கள் தெரிவித்துள்ள னர்.
கொடைக்கானல்:
விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 31-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் கொடைக்கா னலில் விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகர் சிலை களை கோயில்களில் வைத்து வழிபட்டு மேலும் 4-ஆம் தேதி கொடை க்கானல் ஏரிச்சாலை மற்றும் அண்ணா சாலை பஸ் நிலையப் பகுதி மூஞ்சிக்கல் வழியாக அரசு மேல்நிலை ப்பள்ளி அருகே உள்ள ஆற்றில் கரைப்பார்கள்.
இந்நிலையில் பாம்பா ர்புரம் பகுதியில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 1 அடி முதல் 25 அடி வரையில் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் இந்த சிலைகள் அனைத்தும் இயற்கையாக கிடைக்கும் மரவள்ளிக்கிழங்கு மாவு, காகித தூள், சொறி மரங்களின் விதைகள் மற்றும் வண்ணங்களை வைத்து வடிவமைக்கப்பட்டு வருவதாகவும் வடிவமை ப்பாளர்கள் தெரிவித்துள்ள னர்.
சிறியது, பெரியது என சுமார் 1065 விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக பாம்பார்புரம் பகுதியில் நடைபெற்று வருகிறது. முதல் முறையாக கொடைக்கானல் பகுதியில் இயற்கை மூலப்பொரு ட்களை கொண்டு விநாயகர் சிலைகள் தயாரிப்பது பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்