என் மலர்
நீங்கள் தேடியது "violating"
சேலம்-சென்னை பசுமை வழி சாலைக்கு எதிராக அனுமதியை மீறி கையெழுத்து இயக்கம் நடத்திய 10 பேரை போலீசார் கைது செய்தனர். #salemchennai8wayroad
சேலம்:
சேலம்-சென்னைக்கு மத்திய அரசு சார்பில் ரு.10 ஆயிரம் கோடியில் பசுமை வழி சாலை அமைக்கப்படுகிறது. இதற்கு பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் எதிர்ப்பை மீறி அரசு சார்பில் நில அளவீடு பணி தொடங்கப்பட்டது. இதற்கு எதிப்பு தெரிவித்தவர்களை போலீசார் கைது செய்தனர். தற்போது அளவீடு முழுமையாக முடிவடைந்தது. இந்த 8 வழி சாலை திட்டத்தால் ஏராளமான விவசாய நிலங்கள் பாதிக்கபட்டுள்ளது என விவசாய சங்கத்தினர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இதையடுத்து 8 வழி சாலை 6 வழி சாலையாக மாற்றப்பட்டது. இந்த நிலையில் சில இடங்களில் மண் பரிசோதனை நடைபெறுவதால் பசுமை வழி சாலை திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய கோரி 8 வழி சாலை எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்த அனுமதி கேட்டிருந்தனர். ஆனால் இதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இந்த எதிர்ப்பையும் மீறி தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி தலைமையில் இன்று சேலம் புதிய பஸ் நிலையத்தில் கையெழுத்து இயக்கம் நடத்தினர். அனுமதி இல்லாமல் கையெழுத்து இயக்கம் நடத்தியதால் 10 பேரை போலீசார் கைது செய்தனர். #salemchennai8wayroad
ஆண்டிப்பட்டி அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தேனி:
ஆண்டிப்பட்டி அருகே உள்ள கடமலைக்குண்டு சிரைப்பாறை பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் குபேந்திரன். லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சித்ரா (வயது 27). சம்பவத்தன்று இவர் வீட்டில் தனது குழந்தையுடன் தனியாக உறங்கிக் கொண்டு இருந்தார். இதனை நோட்டமிட்ட அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (36) என்பவர் வீட்டின் கதவை தட்டினார். வெளியே வந்த சித்ராவின் கையை பிடித்து இழுந்து தவறாக நடக்க முயன்றார். அவர் சத்தம் போட்டு வெளியேறும் படி கூறினார்.
அந்த நேரத்தில் குபேந்திரன் வந்து விடவே சுரேசை தட்டிக் கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த அவர் குபேந்திரனை தாக்கி கொலை மிட்டல் விடுத்தார். இது குறித்து சித்ரா கடமலைக்குண்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சுரேசை கைது செய்தனர்.