என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "VIP Darshanam"
- யுகாதி ஆஸ்தானம் அன்று அதிகாலை 3 மணிக்கு ஏழுமலையானுக்கு சுப்ரபாதம் சேவை நடைபெறுகிறது.
- மூலவர் மற்றும் உற்சவமூர்த்திகளுக்கு புத்தாடை அணிவிக்கப்பட்டு ஏழுமலையானிடம் ஆண்டு வரவு செலவு கணக்கு சமர்ப்பிக்கப்பட்டு, புது பஞ்சாங்கம் படிக்கப்படுகிறது.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டு தோறும் தெலுங்கு வருட பிறப்பை ஒட்டி யுகாதி ஆஸ்தானம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு தெலுங்கு வருட பிறப்பு வருகிற 22-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி திருப்பதி கோவிலில் யுகாதி ஆஸ்தானம் வரும் 22-ந் தேதி நடைபெற உள்ளது.
யுகாதி ஆஸ்தானத்தையொட்டி வரும் 21-ந் கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறுகிறது. கோவில் வளாகம் முழுவதும் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற உள்ளதால் காலை 6 மணி முதல் 11 மணி வரை தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் மற்றும் யுகாதி பண்டிகையொட்டி 21 மற்றும் 22-ந் தேதி வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் 22-ந் தேதி கல்யாண உற்சவம், ஊஞ்சல் உற்சவ சேவை, ஆர்ஜித சேவைகளையும் தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. யுகாதி ஆஸ்தானம் நடைபெறும் அன்று கோவில் முழுவதும் வண்ண மின்விளக்குகள் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து கொண்டு வரும் வண்ண வண்ண மலர்கள் கொண்டு அலங்காரம் செய்யப்பட உள்ளது.
யுகாதி ஆஸ்தானம் அன்று அதிகாலை 3 மணிக்கு ஏழுமலையானுக்கு சுப்ரபாதம் சேவை நடைபெறுகிறது. காலை 6 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஏழுமலையான் மற்றும் விஷ்வகேஸ்வரருக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்படும். காலை 7 மணி முதல் 9 மணிக்குள் விமான பிரகாரம் மற்றும் கொடிமரத்தை சுற்றி சாமி வீதி உலா நடைபெறுகிறது. மூலவர் மற்றும் உற்சவமூர்த்திகளுக்கு புத்தாடை அணிவிக்கப்பட்டு ஏழுமலையானிடம் ஆண்டு வரவு செலவு கணக்கு சமர்ப்பிக்கப்பட்டு, புது பஞ்சாங்கம் படிக்கப்படுகிறது.
திருப்பதியில் நேற்று 79,561 பேர் தரிசனம் செய்தனர். 36,784 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.82 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.