என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "virat kholi"
- வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 149 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- இந்தியாவின் பும்ரா 4 விக்கெட், சிராஜ், ஆகாஷ் தீப், ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
சென்னை:
இந்தியா, வங்கதேசம் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 91.2 ஓவரில் 376 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. அஷ்வின் 113 ரன்னும், ஜடேஜா 86 ரன்னும் குவித்தனர்.
வங்கதேசம் தரப்பில் ஹசன் மக்மூத் 5 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து ஆடிய வங்கதேசம் முதல் இன்னிங்சில் 149 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஷகிப் அல் ஹசன் 32 ரன் எடுத்தார்.
இந்தியா சார்பில் பும்ரா 4 விக்கெட்டும், சிராஜ், ஆகாஷ் தீப், ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
227 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. இரண்டாம் நாள் முடிவில் இந்தியா 3 விக்கெட்டுக்கு 81 ரன்கள் அடித்துள்ளது. கில் 33 ரன்னும், பண்ட் 12 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர். இந்தியா 308 ரன் முன்னிலை பெற்றுள்ளது.
2-வது இன்னிங்சில் களமிறங்கிய விராட் கோலி 17 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
இந்நிலையில், விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் சச்சின் சாதனையை தகர்த்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் சொந்த மண்ணில் அதிவேகமாக 12,000 ரன்கள் அடித்த வீரர் என்ற மாபெரும் உலக சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். இவர் 243 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையைப் படைத்துள்ளார்.
முன்னதாக, சச்சின் டெண்டுல்கர் 267 இன்னிங்ஸ்களில் 12,000 ரன்கள் அடித்ததே சாதனையாக இருந்தது. தற்போது விராட் கோலி புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
விராட் கோலி 243 இன்னிங்ஸ், சச்சின் டெண்டுல்கர் 267 இன்னிங்ஸ், குமார் சங்ககரா 269 இன்னிங்ஸ், காலிஸ் 271 இன்னிங்ஸ், ரிக்கி பாண்டிங் 275 இன்னிங்ஸ்.
- இந்திய அணிக்காக விராட் கோலி சாதித்தது நம்ப முடியாதவையாகும்.
- அவருடைய நாட்டிற்கும் கிரிக்கெட்டிற்கும் விராட் கோலி போன்று மற்றொருவரால் செய்ய முடியும் என என்னால் நினைக்க முடியவில்லை.
இந்தியா- வங்காளதேச அணிகள் டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 8 சுற்று போட்டியில் இந்திய நேரப்படி இன்று இரவு பலப்பரீட்சை நடத்துகின்றன. டி20 கிரிக்கெட் போட்டியை வரை இந்தியாவின் கையே ஓங்கியுள்ளது. மேலும் வங்காளதேச அணிக்கெதிராக விராட் கோலி சிறப்பாக விளையாடியுள்ளார். சராசரி 90-க்கு மேல் வைத்துள்ளார்.
இந்த நிலையில் வங்காளதேச அணியின் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ஷாகி் அல் ஹசன் விராட் கோலிக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
விராட் கோலி குறித்து ஷாகிப் அல் ஹசன் கூறியதாவது:-
இந்திய அணிக்காக விராட் கோலி சாதித்தது நம்ப முடியாதவையாகும். தனி நபராக இந்திய அணிக்காக ஏராளமான வெற்றிகளை தேடிக்கொடுத்துள்ளா்ர. அவருடைய நாட்டிற்கும் கிரிக்கெட்டிற்கும் விராட் கோலி போன்று மற்றொருவரால் செய்ய முடியும் என என்னால் நினைக்க முடியவில்லை.
இவ்வாறு ஷாகிப் அல் ஹசன் தெரிவித்துள்ளார்.
- 2012-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய மண்ணில் எந்த டெஸ்ட் தொடரையும் இந்திய அணி இழந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது..
- விராட் கோலி இத்தொடரில் விளையாடாததற்கு இங்கிலாந்து ரசிகர்கள் நன்றி தெரிவிப்பார்கள் என அந்த அணியின் ஜாம்பவான் வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறியுள்ளார்.
இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் 3-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் 7-ம் தேதி தர்மசாலாவில் நடைபெற உள்ளது.
2012-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய மண்ணில் எந்த டெஸ்ட் தொடரையும் இந்திய அணி இழந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது..
முன்னதாக இந்த தொடரில் இந்தியாவின் நட்சத்திர வீரர் விராட் கோலி சொந்த காரணங்களுக்காக விலகினார். சொல்லப்போனால் தன்னுடைய 12 வருட டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு முழுமையான தொடரில் விராட் கோலி விளையாடாமல் விலகியது இதுவே முதல் முறையாகும். ஆனால் ஜெய்ஸ்வால், துருவ் ஜுரேல் போன்ற இளம் வீரர்களே அவர் இல்லாத குறை தெரியாத அளவுக்கு சிறப்பாக விளையாடி இந்திய அணியை வெற்றி பெற வைத்துள்ளனர்.
இந்நிலையில் விராட் கோலி இத்தொடரில் விளையாடாதது குறித்து இங்கிலாந்து அணியின் ஜாம்பவான் வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் பேசியுள்ளார்.
அதில், "விராட் கோலி இந்த தொடரில் விளையாடாமல் சென்றதற்கு இங்கிலாந்து ரசிகர்கள் நன்றி தெரிவிப்பார்கள் என்று கணிக்கிறேன். ஏனெனில் அவர் அந்தளவுக்கு தரமானவர். ஆனால் எங்களுடைய கண்ணோட்டத்தில் நீங்கள் எப்போதும் சிறந்தவர்களுக்கு எதிராக உங்களுடைய திறமையை சோதிக்க விரும்புவீர்கள். அந்த வகையில் பல ஆண்டுகளாக அவருக்கு எதிராக பந்து வீசுவது எனக்கு கடினமாக இருந்தது. அப்படிப்பட்ட அவரை இத்தொடரில் எதிர்கொள்ள முடியாமல் போனது அவமானம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
- இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் 2-வது டி20 போட்டி நாளை மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடக்கிறது.
- இப்போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி உள்ளது.
இந்தூர்:
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஆட்டம் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் விளையாடி வருகிறது.
இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் மொகாலியில் மோதிய முதல் 20 ஓவர் போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இரு அணி மோதும் இரண்டாவது 20 ஓவர் போட்டி நாளை மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடக்கிறது. இப்போட்டி நாளை இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இப்போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி உள்ளது.
இந்நிலையில் முதல் ஆட்டத்தில் விளையாடாத விராட்கோலி 2-வது போட்டிக்கு அணிக்கு திரும்பி உள்ளார். அவர் நாளைய ஆட்டத்தில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோலி 430 நாட்களுக்கு பிறகு டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாட உள்ளார். கோலி கடைசியாக 2022-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்காக களமிறங்கி விளையாடினர்.
இந்திய அணி பேட்டிங், பந்துவீச்சில் சம பலத்துடன் உள்ளதால் நாளைய ஆட்டத்திலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
- ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
- ரோகித் மற்றும் கோலி கடைசியாக 2022-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்காக களமிறங்கி விளையாடினர்.
இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதவுள்ளது. இதற்கான முதல் டி20 போட்டி இன்று மொகாலியில் தொடங்குகிறது. இந்த தொடருக்கு இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் விராட் கோலியும் இடம் பிடித்துள்ளார்.
இதன் மூலம் ரோகித் மற்றும் கோலி 427 நாட்களுக்கு பிறகு டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாட உள்ளார். ரோகித் மற்றும் கோலி கடைசியாக 2022-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்காக களமிறங்கி விளையாடினர். இதைத் தொடர்ந்து இருவரும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் மற்றும் விளையாடி வந்தனர்.
இந்நிலையில் விராட் கோலி முதல் போட்டியில் விளையாடாத நிலையில் ரோகித் சர்மாவின் ஆட்டத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
- இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வருகிற 26-ந் தேதி தொடங்குகிறது.
- ரோகித் தலைமையில் இந்திய அணி களமிறங்குகிறது.
இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதலில் நடந்த டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. அதை தொடர்ந்து நடந்த ஒருநாள் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
இதனையடுத்து வருகிற 26-ந் தேதி இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. இதில் ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி களமிறங்குகிறது.
இந்நிலையில் இந்த தொடரில் இடம்பெற்றிருந்த விராட் கோலி குடும்ப சூழ்நிலை காரணங்களுக்காக சொந்த நாடு திரும்புகிறார். அவர் முதல் டெஸ்ட் போட்டிக்கு கலந்து கொள்ளும் வகையில் திரும்புவார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
மற்றொரு வீரரான ருதுராஜ் கை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக தென் ஆப்பிரிக்கா தொடரில் இருந்து விலகி உள்ளார்.
டெஸ்ட் அணியில் இடம் பிடித்த வீரர்கள் விவரம்:-
ரோகித் சர்மா, சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், முகமது. சிராஜ், முகேஷ் குமார், ஜஸ்பிரித் பும்ரா, பிரசித் கிருஷ்ணா, கேஎஸ் பாரத்.
- டெண்டுல்கர் சிறந்த வீரர். கிரிக்கெட்டில் எல்லாவற்றையும் சாதித்து விட்டார்.
- புள்ளி விவரங்களுடன் ஒப்பிடுவது சரியாக இருக்காது.
பிரிட்ஜ்டவுன்:
வெஸ்ட்இண்டீஸ் அணியின் முன்னாள் வேகப்பந்து வீரர் அம்ரோஸ் கூறியதாவது:-
டெண்டுல்கர்- விராட்கோலி ஒப்பீடு இருக்க கூடாது. வெவ்வேறு தலைமுறைகளை சேர்ந்த இருவரையும் ஒப்பிடுவதில் அர்த்தம் இல்லை. இருவருமே தங்களது காலத்தில் ஆதிக்கம் செலுத்தியவர்கள். புள்ளி விவரங்களுடன் ஒப்பிடுவது சரியாக இருக்காது. இருவரையும் ஒருபோதும் ஒப்பிடக்கூடாது.
டெண்டுல்கர் சிறந்த வீரர். கிரிக்கெட்டில் எல்லாவற்றையும் சாதித்து விட்டார். விராட்கோலியே மிக சிறந்த பேட்ஸ்மேனாக ஜொலிக்கிறார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- கொல்கத்தா அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- கிடைத்த வாய்ப்புகளை வீணடித்து 25 முதல் 30 ரன்கள் வரை கூடுதலாக கொடுத்து விட்டோம்.
ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய பெங்களூர் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் கொல்கத்தா அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
எங்களது வெற்றியை நாங்களே தாரைவார்த்து விட்டோம் என பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
எங்களது வெற்றியை நாங்களே தாரை வார்த்து விட்டோம். கிடைத்த வாய்ப்புகளை வீணடித்து 25 முதல் 30 ரன்கள் வரை கூடுதலாக கொடுத்து விட்டோம். இந்த போட்டியில் நாங்கள் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம் என்பதே உண்மை.
இவ்வாறு விராட் கோலி கூறினார்.
- விராட் கோலிக்கு போட்டி கட்டணத்தில் 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
- ஐபிஎல் நடத்தை விதிகள் 2.2-ன் (லெவல் 1) கீழ் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு:
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற நேற்றைய போட்டியில் நடத்தை விதிகளை மீறியதற்காக ஆர்சிபி வீரர் கோலிக்கு 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கோலி களத்தில் ஆக்ரோஷத்துடன் இயங்குபவர். இந்தச் சூழலில் பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் சென்னை அணிக்கு எதிராக பீல்டிங் செய்த போது சிவம் துபே 27 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். அவர் கொடுத்த கேட்ச் வாய்ப்பை முகமது சிராஜ் பிடித்திருந்தார். அதை கோலி மிகவும் ஆக்ரோஷமாக கொண்டாடி தீர்த்தார். இதுதான் அபராதம் விதிக்கப்பட காரணம்.
இது தொடர்பாக ஐபிஎல் நிர்வாகம் தரப்பில் கூறியதாவது:-
பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வீரர் விராட் கோலிக்கு போட்டி கட்டணத்தில் 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
என ஐபிஎல் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ஐபிஎல் நடத்தை விதிகள் 2.2-ன் (லெவல் 1) கீழ் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
- தெண்டுல்கர் 40 வயது வரை விளையாடினார். அதற்கான உடல் தகுதியோடும் இருந்தார்.
- விராட் கோலியும் உடல் திறன் விஷயத்தில் அதிக கவனம் செலுத்தி வருபவர்.
புதுடெல்லி:
உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான விராட்கோலி இலங்கை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
கவுகாத்தியில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் 113 ரன்கள் எடுத்தார். திருவனந்தபுரத்தில் நடந்த 3-வது மற்றும் கடைசி ஒருநாள் ஆட்டத்தில் 166 ரன்கள் குவித்தார். இலங்கை தொடரில் 2 செஞ்சூரி அடித்து சாதித்தார்.
சுமார் 1000 நாட்கள் வரை சதத்தை பதிவு செய்யாமல் தடுமாறி வந்த அவர் தற்போது பேட்டிங்கில் மிகவும் சிறப்பான நிலையில் திகழ்கிறார்.
34 வயதான விராட்கோலி சர்வதேச போட்டிகளில் 74 சதங்களை அடித்துள்ளார். அதாவது டெஸ்டில் 27 சதமும், ஒருநாள் ஆட்டத்தில் 46 செஞ்சூரியும், 20 ஓவரில் 1 சதமும் அடித்துள்ளார்.
அதிக சதங்கள் அடித்து முதல் இடத்தில் இருக்கும் தெண்டுல்கர் சாதனையை தொட விராட் கோலிக்கு இன்னும் 26 செஞ்சூரிகளே தேவை. தெண்டுல்கர் 100 சதங்கள் அடித்துள்ளார்.
இந்த நிலையில் தெண்டுல்கரின் 100 சதங்கள் சாதனையை விராட் கோலி முறியடிப்பாரா? என்று முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
தெண்டுல்கர் 40 வயது வரை விளையாடினார். அதற்கான உடல் தகுதியோடும் இருந்தார். விராட் கோலியும் உடல் திறன் விஷயத்தில் அதிக கவனம் செலுத்தி வருபவர்.
ஆண்டுக்கு 6 முதல் 7 சதங்கள் வரை விராட் கோலி பதிவு செய்தால் அடுத்த 5 அல்லது 6 ஆண்டுகளில் 100 சதம் என்ற மைல்கல்லை தொடுவார். அதற்கு அவர் 40 வயது வரை விளையாட வேண்டும். அந்த வயதில் அவர் விளையாடினால் அதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை.
இவ்வாறு கவாஸ்கர் கூறியுள்ளார்.
- சுப்மான் கில் டெஸ்ட் ஒருநாள் மற்றும் டி20 என அனைத்து போட்டிகளிலும் நன்றாக விளையாடுகிறார்.
- நடப்பாண்டில் 50 ஓவர் கிரிக்கெட்டில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இதனால் டி20 அணியில் அவர் விளையாடும் வாய்ப்பு மிகவும் குறைவு.
மும்பை:
இலங்கைக்கு எதிராக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் பிசிசிஐ அதிரடி மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. ஒரு நாள் கிரிக்கெட் அணியில் இருந்து ஷிகர் தவான் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். துணை கேப்டன் பதவியில் இருந்து கே எல் ராகுல் தூக்கப்பட்டிருக்கிறார். அதேபோன்று டி20 அணியில் விராட் கோலி ,ரோஹித் சர்மா ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்திய அணியின் முக்கிய வீரராக கருதப்படும் ரிஷப் பண்ட் இலங்கைத் தொடரில் விளையாடவில்லை. ஸ்ரேயாஸ், முகமது சிராஜ் ஆகியோருக்கு டி20 போட்டிகளில் ஓய்வு வழங்கப்பட்டிருப்பதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இந்திய அணி தேர்வு குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளதாவது:-
ஷிகர் தவான் குறித்து நிச்சயமாக கவலைப்படுகிறேன். அவருக்கான வாய்ப்பு முடிவுக்கு வந்துவிட்டது. முதலில் டி20 மற்றும் டெஸ்ட் அணியில் தனது இடத்தை இழந்தார். அதை எல்லாம் தாண்டி ஒரு நாள் போட்டியில் தவானுக்கு வாய்ப்பு கிடைத்தது.
ஏதேனும் ஒரு இன்னிங்ஸில் தவான் நன்றாக விளையாடி வந்தார். ஆனால் இப்போதெல்லாம் சில போட்டிகளில் ரன் சேர்க்கவில்லை என்றால் உங்களுடைய இடத்திற்கு ஆபத்து வந்துவிடும். காரணம் பல இளைஞர்கள் வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஷிகர் தவானுக்கு மாற்றாக சுப்மான் கில்லுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கிறேன். சுப்மான் கில் டெஸ்ட் ஒருநாள் மற்றும் டி20 என அனைத்து போட்டிகளிலும் நன்றாக விளையாடுகிறார்.
இதனால் ஷிகர் தவானுக்கு சிக்கல் அதிகரித்து விட்டது. இதேபோன்று இஷான் கிஷனும் தொடக்க வீரருக்கான வாய்ப்புக்காக காத்திருக்கிறார். இதற்காக தவான் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்து விட்டது என்று சொல்ல முடியாது. எதிர்காலத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.
ஹர்திக் பாண்டியா டி20 அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டிருக்கிறது ஐபிஎல் தொடரில் சாதித்ததற்காக கிடைத்த வெகுமானம். கேப்டனாக ஹர்திக் சிறப்பாக செயல்பட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறார்.
ஐபிஎல் போன்ற பெரிய தொடரில் அவர் அணியை வழி நடத்திய விதம் பாராட்டத்தக்கது. விராட் கோலியை பொறுத்தவரை டி20 போட்டியில் அவருடைய இடத்திற்கு ஆபத்து வந்துவிட்டது. 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி 2023 ஆம் ஆண்டு நடைபெறுகிறது. இதனால் விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் தான் அதிகம் விளையாடுவார்.
இந்திய ஒரு நாள் அணியில் முக்கியமான வீரராக விராட் கோலி திகழ்வதால் அவர் நடப்பாண்டில் 50 ஓவர் கிரிக்கெட்டில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இதனால் டி20 அணியில் அவர் விளையாடும் வாய்ப்பு மிகவும் குறைவு. இதனால் டி20 அணியில் பல இளம் வீரர்கள் தங்களது வாய்ப்பை பயன்படுத்தி கொள்வார்கள் என்பதால், விராட் கோலிக்கு நெருக்கடி ஏற்படும்.
எனினும் அடுத்த ஆண்டு நடைபெறும் டி20 உலக கோப்பையில் விளையாட விராட் கோலி நிச்சயம் ஆர்வம் காட்டுவார். இதனால் விராட் கோலி டி 20 கிரிக்கெட்டில் விளையாட மாட்டார் என்று சொல்ல முடியாது.
- இங்கிலாந்து கேப்டன் பட்லர் ஐ.சி.சி. கனவு அணிக்கு கேப்டனாக தேர்வு பெற்றுள்ளார். விக்கெட் கீப்பர் மற்றும் தொடக்க வீரரும் ஆவார்.
- இந்தியா தரப்பில் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் தேர்வு பெற்றுள்ளனர். ஹர்திக் பாண்ட்யாவுக்கு 12-வது வீரர் வாய்ப்பு கிடைத்து உள்ளது.
மெல்போர்ன்:
ஐ.சி.சி. 20 ஓவர் உலக கோப்பையை பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி கைப்பற்றியது. அந்த அணி இறுதி போட்டியில் பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
20 ஓவர் உலக கோப்பை போட்டியின் அடிப்படையில் மதிப்பு மிக்க வீரர்கள் கொண்ட அணியை ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) வெளியிட்டுள்ளது. வல்லுனர்கள் குழு ஐ.சி.சி. 20 ஓவர் கோப்பை கனவு அணியை தேர்வு செய்தது.
இந்த அணியில் இந்தியா தரப்பில் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் தேர்வு பெற்றுள்ளனர். ஹர்திக் பாண்ட்யாவுக்கு 12-வது வீரர் வாய்ப்பு கிடைத்து உள்ளது. விராட் கோலி இந்த தொடரில் 296 ரன்கள் எடுத்து முதல் இடத்தை பிடித்தார். சூர்யகுமார் யாதவ் 234 ரன்கள் எடுத்துள்ளார்.
இங்கிலாந்து கேப்டன் பட்லர் ஐ.சி.சி. கனவு அணிக்கு கேப்டனாக தேர்வு பெற்றுள்ளார். விக்கெட் கீப்பர் மற்றும் தொடக்க வீரரும் ஆவார். மற்றொரு தொடக்க வீரர் அலெக்ஸ் ஹால்ஸ் ஆவார்.
ஐ.சி.சி. கனவு அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் (பேட்டிங் வரிசையில் இருந்து) வருமாறு:-
அலெக்ஸ் ஹால்ஸ், பட்லர் (கேப்டன், இங்கிலாந்து), விராட் கோலி, சூர்ய குமார் யாதவ் (இந்தியா), பிலிப்ஸ் (நியூசிலாந்து), சிக்கந்தர் ராசா (ஜிம்பாப்வே), ஷதாப் கான் (பாகிஸ்தான்), சாம் கரன் (இங்கிலாந்து) ஆன்ரிச் நோர்க்கியா (தென் ஆப்பிரிக்கா), மார்க்வுட் (இங்கிலாந்து), ஷகீன்ஷா அப்ரிடி (பாகிஸ்தான்) 12-வது வீரர்:- ஹர்திக் பாண்ட்யா (இந்தியா)
போட்டியை நடத்திய ஆஸ்திரேலிய அணியில் இருந்து ஒருவர் கூட ஐ.சி.சி. கனவு அணியில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்